10 இலட்சத்துக்கு அதிகமான வாகனங்கள் நாட்டில் பயன்படுத்த முடியாத நிலையில்

வாகனங்களை திருத்துதல் மற்றும் சேர்விஸ் வழங்க முடியாதுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட 10 இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாக வாகன திருத்துனர்கள் தெரிவிக்கின்றனர்.

இவற்றில் அரைவாசிக்கும் மேற்பட்ட வாகனங்கள் அவற்றுக்கான சேர்விஸ் வழங்கப்படாத நிலையில் முழுமையாக பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வாகன உதிரிப் பாகங்களுக்கான விலையேற்றம் வெகுவாக அதிகரித்துக் காணப்படுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் வாகனங்களை திருத்துதல் மற்றும் சேர்விஸ் செய்தல் பாரிய அளவில் குறைவடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய நிலையை கவனத்திற் கொண்டு இந்த வாகனங்களை திருத்துதல் மற்றும் செய்வது தொடர்பில்

நிவாரண வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களை அதற்காக பயன்படுத்த முடியும் என்றும் அதன் மூலம் அந்த நிறுவனம் மேலதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அதேவேளை, நாட்டில் நிலவிய கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலை காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த காலத்தில் எத்தகைய சேர்விஸ்களும் பராமரிப்பும் மேற்கொள்ளப்படாத நிலையில் பெருமளவு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்த முடியாத அளவு மோசமான நிலையில் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் முழுமையாக 60 இலட்சம் வாகனங்கள் காணப்படுவதுடன் அவற்றில் பெரும்பாலானவை கார்களாகவும் முச்சக்கர வண்டிகளாகவும் உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles