புதிய பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஒருபோதும் ஆதரவு வழங்காது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும்
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
அக்கரப்பத்தனை பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர் வழங்கப்பட்டு ஈராண்டுகள் கடந்துவிட்டன. எனவே , பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசு கவனம் செலுத்த
வேண்டும். நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து
வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.” – என்றார்.
