விமல் அணி மீண்டும் மஹிந்த பக்கம்? கம்மன்பில மறுப்பு

விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை மீண்டும் வளைத்துப் போடுவதற்கு மஹிந்த ராஜபக்ச தரப்பு நடவடிக்கை ஒன்றை திரைமறைவில் மேற்கொண்டிடுப்பதாக மஹிந்த தரப்பு வட்டாரத்தில் இருந்து அறியமுடிகின்றது. எனினும், இந்த தகவலை உதய கம்மன்பில மறுத்துள்ளார்.

எதிர்காலத்தில் எழப்போகும் அரசியல் பிரச்சினைகளின்போது விமல் தரப்பு மஹிந்தவுடன் இருப்பதுதான் ராஜபக்ச தரப்புக்கு வெற்றியைக் கொடுக்கும் என்று மஹிந்தவின் சகாக்கள் பலர் கருதுவதால் அவர்களின் யோசனைக்கு அமைய மீண்டும் விமல் தரப்பை மஹிந்தவுடன் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் வினவியபோது, அது போலியான செய்தியாகும் என கம்மன்பில குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles