சுகாதார தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் நுவரெலியாவில் வைத்திய சேவை ஸ்தம்பிதம்!

சுகாதார சேவை தொழிற்சங்கங்களின் கூட்டணியின் கீழ் சுகாதார சேவையில் ஈடுப்படும் 11 சங்கங்கள் இணைந்து இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டன.

“ 20,000 ஆயிரம் ரூபாவைகோரும் ஒண்றிணைந்த தொடர் போராட்டத்தை வெற்றிப்பெறச் செய்வோம்” எனும் தொனிப்பொருளின்கீழ் 09 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் இன்று புதன் கிழமை (01) இரண்டு வகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வைத்தியசாலை செயற்பாடு ஸ்தம்பிதம் அடைந்தது.

அத்துடன் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு வந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து இருந்தனர். குறிப்பாக வெளிநோயாளர் பிரிவு மற்றும் மருந்து விநியோகப் பிரிவு என்பன காலை 7 மணி முதல் நண்பகல் 12 செயலிழந்து காணப்பட்டது . எனினும் நண்பகலுக்கு பிறகு மருந்து விநியோகிக்கப்படாமையால் மருந்துகளைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது .

செ.திவாகரன்

Related Articles

Latest Articles