மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து மஸ்கெலியாவில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்களால் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புரவுன்ஷீக் பிரிவில் இன்றிரவு நடைபெற்ற இப்போராட்டத்தில் அறுபதுக்கு மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.
” நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால் மக்களுக்கு வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின் கட்டணம் அதிகரிப்பை ஏற்கமுடியாது. எனவே, மின் கட்டணம் உடன் குறைக்கப்பட வேண்டும்.” என போராட்டத்தில் ஈடுபட்டோர் குறிப்பிட்டனர். சுமார் ஒரு மணிநேரம் போராட்டம் இடம்பெற்றது.
மஸ்கெலியா நிருபர் – செதி பெருமாள்
