ஹட்டல் ஹைலன்ஸ் கல்லூரியில் 61 மாணவர்கள் வெட்டுபுள்ளிக்குமேல் பெற்று சித்தி!

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் இருந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 106 மாணவர்களுள் 61 பேர் வெட்டு புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர் என்று கல்லூரியின் அதிபர் எஸ்.ராஜன் தெரிவித்தார்.

பரீட்சைக்கு தோற்றிய ஏனைய மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் எடுத்துள்ளனர் எனவும், சித்தியடைந்தோர் வீதம் 100 வீதமாக உள்ளது எனவும் அவர் கூறினார். அத்துடன், மாணவர் ஒருவர் 193 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

பாடசாலை சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்காக உழைத்த முன்னாள் அதிபர் ஆர். ஶ்ரீதர் மற்றும் ஆரம்ப பிரிவின் சிரேஷ்ட பிரதி அதிபர் பி. சுகுமார் ஆகியோருக்கும் நன்றிகள்.

அத்துடன் வகுப்பு மற்றும் பாட ஆசிரியர்களாக செயற்பட்ட

ஏ. ஜெயசுதா

கே. சிவபாக்கியம்

வி. சிவநேஷ்

பி. தியாகராஜா

டி. தனபிரியா

எம். காயத்திரி

ஆகியோருக்கும் பாடசாலை சார்பாகவும், பெற்றோர் சார்பாகவும், பழைய மாணவர் சார்பாகவும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன் – எனவும் அதிபர் குறிப்பிட்டார்.

2023 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு
நாடாளவிய ரீதியில் 3,37,596 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

ஹட்டன் கல்வி வலயத்தில்
தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளிலிருந்து 4140 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி இருந்தனர்.

நுவரெலியா மாவட்டத்தில் சிங்கள மொழிமூல மாணவர்களுக்கு 145 வும், தமிழ் மொழி மூல மாணவர்களுக்கு 144 வும் மாவட்ட வெட்டுப்புள்ளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மலைவாஞ்ஞன்

Related Articles

Latest Articles