கிளென் மேக்ஸ்வெல் பாணியில் தனித்து ஆடும் ரணில்! கம்மின்ஸ் போல் தட்டிக்கொடுக்குமாறு சஜித்திடம் கோரிக்கை….!

” ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தனித்து சவாலை ஏற்று 200 ஓட்டங்கள் விளாசி அணியை வெற்றிபாதைக்கு அழைத்துச்சென்றார் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல். அதுபோல்தான் ரணில் விக்கிரமசிங்கவும் தனித்து சவாலை ஏற்று, செயற்பட்டுவருகின்றார்.” – என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

மேக்ஸ்வெல்லுக்கு தட்டிக்கொடுப்பதற்கு ஆஸ்திரேலிய அணித்தலைவர் களத்தில் இருந்தார். ஆனால் அந்த பாத்திரத்தை ஏற்பதற்கு இலங்கையில் எவரும் இல்லை. ரணில் அடித்தாடுகின்றார், அவரை ஆட்டமிழக்க வைக்கவே ‘அவர்’ (சஜித்) முற்படுகின்றார் – எனவும் ஹரின் கவலை வெளியிட்டார்.

” அவருக்கு நாட்டின் தலைவராக முடியாது. எனவே, இலங்கை அணி தலைவராக முயற்சிக்கின்றார்போலும். அவர் யாரென நான் பெயர்கூற விரும்பவில்லை. ‘ஆசை ஆனால் பயம்’ என அடையாளப்படுத்துகின்றேன்.” – எனவும் ஹரின் குறிப்பிட்டார். (சஜித்தையே இவ்வாறு அடையாளப்படுத்துகின்றார்.)

” கிளென் மேக்ஸ்வெல் தனித்து ஆடினார். இறுதியில் தொடர் வெற்றிகளை பெற்ற இந்திய அணியையும் வீழ்த்தி ஆஸி. அணி கிண்ணம் வென்றது. எனவே, கிளென் மேக்ஸ்வெல் பாணியில் ஆடும் ரணில். நிச்சயம் வெல்வார். நாட்டை மீட்டெடுப்பார்.” – எனவும் ஹரின் நம்பிக்கை வெளியிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (23) உரையாற்றுகையிலேயே அவர், மேக்ஸ்வெல்லையும், ரணிலையும் ஒப்பிட்டு கருத்து வெளியிட்டார்.

” பாதீட்டு உரை இடம்பெற்றாலும் கிரிக்கெட் பற்றியும், கோப் குழு பற்றியுமே இங்கு அதிகம் பேசப்படுகின்றது. எனவே, ஜனாதிபதிக்கான ஒதுக்கீடுகள் பற்றிய இந்த விவாதத்தில், கிரிக்கெட் இன்னிங்ஸ் ஒன்றை குறிப்பிட்டு, விடயத்தை தெளிவுபடுத்துகின்றேன்.” – எனக் கூறிவிட்டே மேற்கண்டவாறு விளக்கமளித்தார் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles