பதுளை, தியத்தலாவை பகுதியில் உள்ள அரச வங்கியொன்றில் ஏ.ரி.எம் இயந்திரத்திலிருந்து 2 இலட்சம் ரூபா ரூபாவை மோசடியா பெற்ற நபர் தியதலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மாதவாச்சி பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
பதுளை ஹல்தும்முல்ல பிரதேசத்தை நோக்கி பயணித்த பஸ் ஒன்றிலிருந்து சந்தேக நபர், தியத்தலாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாகர தயாரத்ன தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தியத்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜ்
