மண்சரிவால் 100 பேர் இடம்பெயர்வு – விவசாய நிலமும் நாசம்!

படல்கும்புர பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அங்கட (135/C) கிராமசேவகர் பிரிவில் வரதொல தனியார் தோட்டத்தில் நேற்று (13) ஏற்பட்ட மண்சரிவினால் இடம்பெயர்ந்த 24 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர், வராதொல சிங்கள வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திரு.ஏ.எச்.ரவீந்திர குமார தெரிவித்துள்ளார்.

கடந்த 12ஆம் திகதி முதல் இந்தப் பகுதியில் சிறிய அளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், நேற்றைய தினம் 13ஆம் திகதி காலை முதல் பாரிய மண் சரிவு உண்டாகிய தாகவும் அவர் தெரிவித்தார்.

மண்சரிவால் 5 வீடுகளை கொண்ட ஒரு லயன் குடியிருப்பு முற்றாக மண்ணினுள் புதையுண்டதாகவும் மண்சரிவால் புதையுண்ட லயன் குடியிருப்பில் 3 குடும்பங்கள் வாழ்ந்து வந்ததாகவும் அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றதால் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்

பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவு மற்றும் சுகாதார வசதிகள் தாமதமின்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பகுதியில் கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்ய உள்ளதாகவும் பிரதிப் பணிப்பாளர் ஏ.எச்.ரவீந்திர குமார மேலும் தெரிவித்தார்.

இந்த நிலச்சரிவினால் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர், பப்பாளி, மிளகு, வாழை, , பல காய்கறி தோட்டங்கள் பாதிக்கப்பட்டவர் உள்ளதாக தோட்ட மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

அத்தோடு தங்களை எந்த ஒரு அரசியல் வாதியும் இதுவரையில் தங்களை வந்து பார்கவில்லை என மக்கள் கவலையடைந்துள்ளனர்.

ராமு தனராஜா

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles