தென்னாபிரிக்காவில் கோர விபத்து: 42 பேர் பலி!
தென்னாப்பிரிக்காவில் செங்குத்தான மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கோர விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர். மேலும் 49 பேர் காயமடைந்துள்ளனர்.
உள்ளுர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை...
காசா அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து!
காசா அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டார்.
இஸ்ரேல்-காசா இடையேயான போர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன் மொழிந்த 20 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்துள்ளது....
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சரியா ஆகியோர்...
பணயக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்!
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஓர் அங்கமாக 7 பயணக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு இன்று விடுவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நேற்று முன்தினம் முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது.
ஹமாஸ் அமைப்பிடம் 20...
போரை நிறுத்துவதில் நான் வல்லவன்: ட்ரம்ப் தம்பட்டம்!
இஸ்ரேல் - காசா மோதல் முடிவுக்கு வந்தது. இது நான் நிறுத்திய 8-வது போர் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
காசா மீதான இஸ்ரேல் தாக்குதகை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்...
அமெரிக்கா இரட்டை வேடம்: சீனா சீற்றம்!
வரிவிதிப்பு விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது எனவும், இதற்கு சீனா அஞ்சாது எனவும் அந்நாட்டு அதிகாரியொருவர் அறிவித்துள்ளார்.
சீன பொருட்களுக்கு அமெரிக்க அரசு தற்போது 30 சதவீத வரியை விதித்து வருகிறது. இந்த...
ராமாயணக் காட்சிகளை வானில் காட்ட 1,100 டிரோன்கள்!
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் அயோத்தியில் லட்சக் கணக்கில் அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இது உலக சாதனையாகப் பதிவாகி வருகிறது.
அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு...
சீனாமீது மீண்டும் வர்த்தக்போர் தொடுப்பு!
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று அறிவித்துள்ளார்.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் மேலும் உக்கிரமடைந்துள்ளது.
இரு நாட்டு...
ட்ரம்புக்கு ஏமாற்றம்: அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர தொடர்ந்து போராடிய, வெனிசுலாவின் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்க...
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை வாபஸ்!
தெற்கு பிலிப்பைன்ஸின் மின்தனோவோவில் இன்று 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, ‘அழிவுகரமான சுனாமி’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தச் சூழலில், தற்போது பிலிப்பைன்ஸ், பலாவ் மற்றும் இந்தோனேசியாவுக்கான சுனாமி எச்சரிக்கையை...