டிக்கோயா வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம்!
டிக்கோயா வைத்தியசாலையில் சேவையாற்றும் சுகாதார ஊழியர்களில், அகில இலங்கை தாதியர் சங்கத்தின் உறுப்பினர்கள் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று மதியம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வைத்தியசாலைக்கு சிகிச்சைபெறுவதற்கு வந்திருந்த...
நுவரெலியாவில் பட்டாசு கொளுத்தியது மொட்டு கட்சி – மக்கள் கொதிப்பு
பொதுமக்கள் அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பட்டாசு கொளுத்தி பெரும் ஆரவாரத்தில் ஈடுபட்ட மொட்டு கட்சி உறுப்பினர்களுக்கு நுவரெலியா மக்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சிமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்கும் போட்டியிடுவதற்காக...
அடுத்த 25 ஆண்டுகளுக்காக புதிய சீர்திருத்த திட்டத்துடன் 75 ஆவது தேசிய சுதந்திரதின விழா
அடுத்த 25 ஆண்டுகளுக்காக அரசாங்கத்தின் புதிய சீர்திருத்த திட்டத்துடன் 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
“நமோ நமோ மாதா – நூற்றாண்டுக்கு ஒரு படி” என்ற தொனிப்பொருளில்...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஊழியர்கள் போனஸ் வழங்குமாறு கோரி போராட்டம்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) ஊழியர்களுக்கு வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படாமை தொடர்பில் ஊழியர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஊழியர்கள் வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு கோரி பொது முகாமையாளரின் அலுவலகத்தை அதன் ஊழியர்களால்...
அக்கரப்பத்தனை வாசிகசாலை மீண்டும் திறப்பு
அக்கரபத்தனை பிரதேச சபையின் கீழ் இயங்கும் மெரயா நகர வாசிகசாலை நீண்டகாலமாக மூடப்பட்டு இருந்த நிலையில், மக்கள் பாவனைக்காக அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் ராமன் கோபாலகிருஷ்ணன் ஊடாக மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.
பிரதேச...
கொட்டகலை பிரதேச சபைக்கு கட்டுப்பணம் செலுத்தினார் செந்தூரன்
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் கொட்டகலை பிரதேச சபைக்கு போட்டியிடுவதற்காக சுயேட்சைக்குழுவொன்று இன்று கட்டுப்பணம் செலுத்தியது.
சமூக செயற்பாட்டாளரும், அரசியல் ஆய்வாளருமான ராமன் செந்தூரன் தலைமையிலான குழுவினரே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தினர்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஏனைய சபைகளிலும்...
ஆதர்ஷா கரதனவுக்கு பிணை
பொலிஸ் கணினி குற்றப்பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஆதர்ஷா கரதன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஆஷு மாரசிங்க செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியாவில் 12 சபைகளுக்கும் கட்டுப்பணம் செலுத்திய ‘வாழைப்பழச் சீப்பு’ அணி
எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சிமன்ற தேர்தலில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தலைமையிலான ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி, நுவரெலியா மாவட்டத்திலும் தனித்து போட்டியிடவுள்ளது.
இதற்கான கட்டுப்பணம்...
வேட்புமனு ஏற்கும் இறுதி நாளில் தேர்தல் திகதி அறிவிக்கப்படும்
வேட்புமனுக்களை ஏற்கும் கடைசி நாளன்று வாக்கெடு இடம்பெறும் திகதி அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல்...
யாழ். பல்கலையில் மலையக தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு…
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மலையக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மலையக தியாகிகளுக்கான நினைவேந்தல், யாழ் பல்கலைக்கழக பிரதான நினைவுத்தூபியில் இன்று நடைபெற்றது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், மலையக...













