‘சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமை மனித உரிமை மீறலாகும்’
சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமை மனித உரிமை மீறலாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் எவ்வித மதிப்பீடும் செய்யாமல் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியமையும் மனித...
ஊரடங்குக்கு மத்தியில் ஜே.வி.பியும் போராட்டம் (படங்கள்)
மக்களை வதைக்கும் அரசுக்கு எதிராக ஜே.வி.பியால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமொன்று இன்று மஹரகமையில் நடைபெற்றது.
ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரமுகர்கள் என பலர் இதில் பங்கேற்றிருந்தனர்.
நாட்டில் இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதையும்மீறி...
‘அமைச்சு பதவிகளை துறக்க ராஜபக்சக்கள் முடிவு’ – சிங்கள ஊடகம் தகவல்
ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மூவர் அமைச்சு பதவிகளை துறக்கவுள்ளனர் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, பொதுநிர்வாக அமைச்சர் சமல் ராஜபக்ச மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச...
12 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை...
மின்வெட்டை நிறுத்தக்கோரி போராடியவர் மின்சாரம் தாக்கி பலி
கொழும்பு, நுகேகொடை மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
53 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மின்வெட்டை உடனடியாக நிறுத்துமாறு கோரி மின்மாற்றியில் ஏறியபோது, மின்சாரம்...
சகல சமூக வலைத்தளங்களும் வழமைக்கு!
முடக்கப்பட்டுள்ள சகல சமூக வலைத்தளங்களும் இன்று பிற்பகல் 3.30க்கு வழமைக்கு கொண்டுவரப்படும் என தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
நேற்றிரவு முதல் பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
மக்களுக்கு அஞ்சி வாகனங்களில் இலச்சினைகளை அகற்றிய எம்.பிக்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்களில் 40க்கும் மேற்பட்டவர்கள் தமது வாகனங்களில் முன் கண்ணாடியில் காட்சிப்படுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இலச்சினையை அகற்றியுள்ளதாக தெரியவருகிறது.
இதனை சிலர் நாடாளுமன்றத்தின் பிரதான அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை...
நாள் முழுவதும் ஊரடங்கு,சமூக வலைத்தள ஊடகங்களுக்கு தடை- கடும் கோபத்தில் மக்கள்
நாள் முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியமை மற்றும் சமூக வலைத்தள ஊடகங்களுக்கு தடையேற்படுத்தியமை ஆகியன காரணமாக அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்திய மேலும் அதிகரிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று ஞாயிற்றுக்...
சமூக வலைத்தள முடக்கத்தை நீக்குமாறு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவினால் கோரிக்கை
சமூக வலைத்தள முடக்கத்தை நீக்குமாறு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவினால் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
மின் துண்டிப்பு தொடர்பில் நுகர்வோருக்கு தகவல்களை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் உடன் அமுலாகும் வகையில் சமூக வலைத்தளங்கள் மீதான முடக்கத்தை...
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒத்தி வைப்பு?
நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சியின் பெரும்பான்மை குறையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் அதை சமாளிக்க நாடாளுமன்ற கூட்டத்தொடரை குறுகிய காலத்துக்கு ஒத்தி வைப்பது குறித்து அரசு அவதானம் செலுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் அரசின்...









