ரயில்முன் பாய்ந்து பெண் தற்கொலை!
பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலத்தன்ன ( ஒத்தக்கடை ) பகுதியிலுள்ள ரயில் கடவையின் அருகில் நின்று கொண்டிருந்த 48 வயதுடைய பெண்ணொருவர் , பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின்...
இலங்கை சீனாவின் செல்லப்பிராணியா, இந்தியாவின் செல்லப்பிள்ளையா?
" சீனாவின் செல்லப் பிராணியாக இருப்பதை விடுத்து இந்தியாவின் செல்லப் பிள்ளையாக அயல்நாட்டின் நட்புறவைப் பேணிப்பாதுகாப்பதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ....
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும் கொரோனா தொற்று!
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
அமைச்சர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், தம்மை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சரத் வீரசேகர முக்கியமான சில நிகழ்வுகளில்...
சுதந்திர தினத்தன்று ரஞ்சன் பொதுமன்னிப்பில் விடுதலை?
சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியை தொலைபேசி வழியாக நேற்று தொடர்புகொண்ட...
‘தேசிய வளங்களை விற்காதே! ஒப்பந்தத்தை இரத்து செய்!!
திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்கும் வகையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஜே.வி.பியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தொழிற்சங்க பிரமுகர்களும்...
கொரோனா தொற்று உறுதியான 829 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 829 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 598,536 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில்...
கொவிட் தொற்றால் மேலும் 12 பேர் மரணம்!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
கொழும்புக்கு டெல்லி தொடர்ந்தும் நேசக்கரம்
எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை புதிய கடன் உதவியாக இந்தியா வழங்கியுள்ளது இந்த தகவலை இலங்கைக்கான இந்திய தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளது
இலங்கை வெளிவிவகார அமைச்சர்...
கொரோனா தொற்றிலிருந்து 131 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 131 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 568,637 ஆக அதிகரித்துள்ளது.
தங்கம் வென்ற வீராங்கனைக்கு அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து
பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவை சேர்ந்த வீராங்கனை கணேஸ் இந்துகாதேவிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும், ” வாழ்வாதார சவால்களுக்கு மத்தியில் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன்...












