இன்று முதலாவது அமைச்சரவைக் கூட்டம் – ’19’ இற்கு புத்துயிர் கொடுப்பு!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவது தொடர்பில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளது என அறியமுடிகின்றது.
புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்னர், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இன்று முதலாவது அமைச்சரவைக்...
டிக்டொக் செயலி தடை
டிக்டொக் செயலி மற்றும் PUBG மொபைள் கேம் ஆகியன ஆப்கானிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் இளைஞர்களை தவறாக வழிநடாத்துவதாக வலியுறுத்தியே குறித்த செயலி மற்றும் மொபைள் கேம் ஆகியவற்றுக்கு தலிபான்கள் தடைவிதித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் ஆட்சியை கைப்பற்றிய...
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
இன்றைய தினம்(24) கொழும்பை அண்மித்துள்ள ஒரு சில வீதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித் தடைகளில் கூரிய ஆணி போன்ற கம்பிகளை பொருத்தி கறுப்பு நிற பொலித்தீனால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்...
நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்க இ.தொ.கா. முடிவு!
அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது என காங்கிரஸின் ஊடகப்பிரிவு இன்று அறிவித்துள்ளது.
நாட்டு மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கயை ஏற்றே இ.தொ.கா. இந்த முடிவை எடுத்துள்ளது.
அத்துடன்,...
சாதனை வீராங்கனை தற்கொலை?
பெண்களுக்கான 400 மீற்றர் தடை ஓட்டப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு பதக்கங்களை வெற்றி கொண்ட கௌசல்யா மதுஷானி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தடகளப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குளியாபிட்டி பகுதியைச் சேர்ந்த கௌசல்யா...
நாளைய மின் துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு
நாட்டில் மின்சாரத்தை துண்டிப்பதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, நாளை(25) முதல் எதிர்வரும் புதன்கிழமை(27) வரை 4 மணிநேரமும் 30 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப்...
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து “ஒன்றிணைந்த இளமை அட்டனில் தொடக்கம்” என்ற அமைப்பு போராட்டம்
அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வுக்கும், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (24.04.2022) இளைஞர், யுவதிகள் அட்டன் மணிக்கூட்டு கோபுரத்த்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“ஒன்றிணைந்த இளமை அட்டனில் தொடக்கம்” என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இளைஞர்கள், யுவதிகள்...
சுதந்திர தாகத்தோடு அனைவரும் அணித்திரள்வோம் – பல கோரிக்கைகளை முன்வைத்து அட்டனில் போராட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தை கண்டித்தும் அட்டன் மல்லியப்பு சந்தியில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
சுதந்திர தாகத்தோடு அனைவரும் அணித்திரள்வோம் எனும் தொனிப்பொருளின் கீழ் பிடி தளராதே,...
பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாருடன் முறுகல்- கோட்டை பகுதியில் பதற்ற நிலை
அரசாங்கத்திற்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்துள்ளனர்.
கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் காலிமுகத்திடல் நோக்கி பேரணி ஆரம்பிக்கப்பட்ட போதும், பொலிஸார் அவர்களை முன்னால் செல்ல விடாது வீதித் தடைகளை...
சவர்க்காரங்களின் விலை அதிகரிப்பு
இலங்கையில் முதல் தடவையாக சவர்க்காரங்களின் விலைகள் அதிகூடிய மட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய ஒரு கட்டி சன்லைட் சவர்க்காரம் 135 ரூபாவாகவும், பேபி சவர்க்காரம் ஒரு கட்டி 175 ரூபாவாகவும், லைப்போய் சவர்க்காரம் ஒன்று...