‘டொலர்களை உள்ளீர்க்க “கோல்டன் பெரடைஸ் விசா” திட்டத்தை அமுல்படுத்துகிறது இலங்கை
நாட்டுக்கு அந்நிய செலவாணியை ஈர்ப்பதற்கான ஓர் வழிமுறையாக வெளிநாட்டவர்களுக்கு நீண்ட கால விசா வழங்கும் நடைமுறையொன்றை அமுல்படுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
"கோல்டன் பெரடைஸ் விசா" என பெயரிடப்பட்டுள்ள இந்த வேலைத்...
வவுனியாவில் நீரில் மூழ்கிய சிறுவர்கள் இருவரின் சடலங்கள் மீட்பு
வவுனியா – ஈர பெரியகுளத்தில் குளிக்கச்சென்று நீரில் மூழ்கிய சிறுவர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நான்கு பேர் இன்று பிற்பகல் குளிக்கச்சென்றிருந்த நிலையில், இருவர் நீரில் மூழ்கியுள்ளனர்.
ஏனைய இருவரும் நீந்தி கரைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார்...
சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் நாளைய தினமும் 16,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் எரிவாயு கொள்கலன் விநியோகத்தை லிட்ரோ நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது. எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை...
கஸ்வத்த பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறம் வெடிப்புச் சம்பவம் – பல வீடுகள் சேதம்
எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஹதென்ன, கஜு கஸ்வத்த பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறம் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியிருக்கலாம்...
பொலிஸாரைத் திட்டித்தீர்த்த பாராளுமன்ற உறுப்பினரின் மகனும் மருமகளும்
தெற்கு அதிவேக வீதியில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதராச்சியின் மகன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதாகத் தெரிய வருகிறது.
இந்தக்...
மஹிந்த கஹந்தகம குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்
மஹிந்த கஹந்தகம குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 9 ஆம் திகதி கொள்ளுபிட்டிய மற்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டுள்ளார்.
2 ஆம் மாடியில் இருந்து கீழே விழுந்தவர் பலி!
களுத்துறை, நாகொட வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பயாகல பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதேவேளை , அம்பாறை...
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு
கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை சிறிது காலத்துக்கு பிற்போடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு அறிவிப்பு விடுத்தார்.
2022 ஆகஸ்ட்டில் நடைபெறவிருந்த உயர்தரப்பரீட்சையை...
பிரதமர் ரணில் 07 ஆம் திகதி விசேட உரை
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 07 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைவரம் பற்றி அவர் அந்த உரையில் தெளிவுபடுத்துவார்.
நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 07 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
கட்சி செயலாளர்களுடன் 6 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு சந்திப்பு
அனைத்து கட்சிகளின் செயலாளர்களையும் எதிர்வரும் 06ஆம் திகதி முன்னிலையாகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2022 வாக்காளர் பட்டியல் மற்றும் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவும் தமது நிலைப்பாட்டை தெரிவிக்கவும் இந்த...













