டொலரின் பெறுமதி மேலும் அதிகரிப்பு
பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 340 ரூபாவாகவும் கொள்வனவு பெறுமதி 330 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக...
புகையிரதம் தடம்புரள்வு: மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு
இன்று காலை 8.30 மணிக்கு பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதம் பதுளை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளது. இவ்விபத்தினால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை மலையகத்துக்கான தொடரூந்து போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ராமு...
பதுளைக்கு எரிபொருள் ஏற்றிவந்த பவுசர் விபத்து!
ceypetco எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு உரித்தான கொள்கலன் வாகனமொன்று, இன்று அதிகாலை பதுளை - பண்டாரவளை பிரதான வீதியில் உடகும்பல்வெல பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
கொழும்பிலிருந்து பதுளைக்கு எரிபொருளை ஏற்றிவரும் வழியிலேயே...
புதிய அமைச்சரவை பதவியேற்கும் நேரம் அறிவிப்பு
புதிய அமைச்சரவை இன்று முற்பகல் 10.30 மணிக்கு பதவியேற்கவுள்ளது. இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
18 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
பதவி விலக மறுக்கும் கோட்டா! தன்னெழுச்சி போராட்டமும் தொடர்கிறது!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் 10 ஆவது நாளாகவும் இன்று தொடர்கின்றது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்குப் பொறுப்பேற்று...
‘புதிய அமைச்சரவை’ – சுதந்திரக்கட்சி கடும் எதிர்ப்பு
பிரதமர் பதவியில் மாற்றமின்றி இடம்பெறும் அமைச்சரவை மறுசீரமைப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
மக்களின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல், அமைச்சு பதவியை ஏற்பவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
15 பேருடன்...
மக்களின் போராட்டத்திற்கு அரசு தீர்வுகாண முன்வருவதாக தெரியவில்லை- செந்தில் தொண்டமான்
மக்களின் உணர்வுகளுக்கு ஜனாதிபதி மதிப்பளிப்பதாக தெரியவில்லை. நாட்டில் ஏற்றுபட்டுள்ள அத்தனைப் பிரச்சினைகளுக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே பொறுப்புக்கூற வேண்டியவராக உள்ளாரென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள...
20 ஐ ஆதரித்த அரவிந்தகுமாருக்கு அமைச்சு பதவியா?
அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்குமாறு அரச தரப்பிலிருந் தமக்கு எந்தவொரு அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்குமார் தெரிவித்தார்.
புதிய அமைச்சரவை பொறுப்பேற்கவிருக்கும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரான அரவிந்குமாருக்கும் அமைச்சுப் பதவியொன்று...
புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் நாளை
புதிய அமைச்சரவையின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை மாலை இடம்பெறக்கூடும் என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
புதிய அமைச்சரவை, நாளை காலை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமைச்சரவையில் 15...
எரிபொருள் நெருக்கடிக்கு நாளை தீர்வு?
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நாளைய தினமளவில் நிவர்த்திக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இதன்...