அரசியலமைப்பு பேரவைக்கு சித்தார்த்தனின் பெயர் பரிந்துரை!
அரசியலமைப்பு பேரவைக்கு தமது கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனை பரிந்துரைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே இம்முடிவு எடுக்கப்பட்டது.
அரசியலமைப்பு பேரவையில்...
காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி!
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் – மாங்குளம் வீதியில் 20 ஆவது கிலோமீற்றர் வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை மண்வெட்டி பிடி வெட்டுவதற்காக அவர் சென்ற...
பதுளை மாவட்ட தமிழ் பாடசாலை கல்வி தொடர்பான விசேட கூட்டம் நாளை!
பதுளை மாவட்ட தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் குறைநிறைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமொன்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் தலைமையில் நாளை (26.11.2022) சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு பதுளை...
தொண்டைமானாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் முதலை!
யாழ்ப்பாணம் தொண்டைமானாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் முதலையொன்று இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
அச்சுவேலியில் இருந்து தொண்டைமானாறு செல்லும் வீதிக்கு குறுக்காகவே உயிரிழந்த நிலையில் முதலை இருப்பதாக வெள்ளிக்கிழமை(25) காலை அவ்வீதியால் பயணித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த முதலையை...
இலங்கை – ஆப்கான் அணிகள் இன்று மோதல்!
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் இன்று (25) பல்லேகலவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்தத் தொடருக்காக தெரிவு செய்யப்பட்ட இலங்கைக் குழாத்துக்கு விளையாட்டு அமைச்சு நேற்று (24) மாலை...
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குரு விபத்தில் உயிரிழப்பு!
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதம குருவும் சிலாபம், முன்னேஸ்வரம் வடிவாம்பிகா தேவி சமேத முன்னைநாதப் பெருமான் ஆலயத்தின் மகோற்சவ குருவுமான சிவ= சிவானந்த குருக்கள், நேற்றுக் காலை விபத்தில் சிக்கி மரணமானார்.
கண்டி...
மக்கள் போராட்டத்தை ஒடுக்க இடமளியோம்! சஜித் திட்டவட்டம்
" படையினரை களமிறக்கியும், அவசரகால சட்டத்தை பயன்படுத்தியும் மக்கள் போராட்டம் ஒடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை. ஜனநாயக வழியிலான மக்கள் போராட்டங்களுக்கு நாம் தலைமைத்துவம் வழங்குவோம். அதனை யாராலும்...
” மனித உரிமை என்ற போர்வையில் வன்முறைக்கு இடமில்லை”
மனித உரிமைகள் என்ற போர்வையில் வன்முறை மற்றும் அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்கான முயற்சியில் ஈடுபடும் எத்தரப்பினரையும் முற்றாக ஒடுக்குவதற்கு பாதுகாப்புப்படை பயன்படுத்தப்படும் என்றும்...
அமரர். முத்து சிவலிங்கத்தின் பூதவுடல் தீயுடன் சங்கமம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியுமான அமரர். முத்து சிவலிங்கத்தின் பூதவுடல் இன்று (24.11.2022) தீயுடன் சங்கமமானது.
அரசியல்வாதிகள், தொழிற்சங்கவாதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள், தொண்டர்கள் என...
லொத்தர் சீட்டு வாங்கிய ஜனாதிபதி ரணில்!
தேசிய லொத்தர் சபையின் கீழ் சீட்டிழுக்கப்படும் மஹஜன சம்பதவின் 5000ஆவது சீட்டிழுப்பை முன்னிட்டு இன்று (24) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மஹஜன சம்பத டிக்கட் ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார்.
இந்நிகழ்வு நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்தது....













