சீனாவின் சர்ச்சைக்குரிய கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசம்
சீன Yuan Wang 5 என்ற ஆய்வு கப்பல் சற்று முன்னர் ஹம்பாந்தொட்டை துறைமுகத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த கப்பலின் வருகையால் தமது நாட்டுக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இந்திய அரசாங்கத்தால் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தன.
நாவலப்பிட்டியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு
நாவலப்பிட்டி – கெட்டபுலா பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கம்பளை – மொரகொல்ல பகுதியில் மகாவலி ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கெட்டபுலா தோட்டத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட...
இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு
இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (14) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் பதிவான...
நாளை முதல் 07 நாட்களுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்படும் சீன கப்பல்
சர்ச்சைக்குரிய யுவான் வேங் – 5 (Yuan Wang 5) சீன அதி தொழில்நுட்ப கப்பல், தற்போது SEA OF SRILANKA எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளது.
இந்த கப்பல் நாளை(16) காலை 7.30...
கோழி இறைச்சி, முட்டையின் விலை அதிகரிப்பு தொடர்பில் விசேட கவனம்- நளின் பெர்னாண்டோ
சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகள் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு...
நான்கு கால்களுடன் பிறந்த அதிசய கோழிக்குஞ்சு
யாழ்ப்பாணத்தில் அதிசய கோழிக்குஞ்சு பொரித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அச்சுவேலி – காலானை பகுதியில் உள்ள மகாராஜா கௌரி என்பவரின் வீட்டிலேயே கோழிக்குஞ்சு ஒன்று நான்கு கால்களுடன் பொரித்துள்ளது.
குறித்த குடும்பப் பெண் கோழி வளர்ப்பினையே...
நாளை(16) முதல் 19ஆம் திகதி வரை 3 மணித்தியால மின்வெட்டு
நாளை(16) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUV மற்றும் W ஆகிய வலயங்களில் பகல் வேளையில் ஒரு...
நுரைச்சோலை மின்னுற்பத்தி தொகுதியை திருத்தியமைக்க 16 நாட்கள்
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி தொகுதியொன்று செயலிழந்துள்ளதன் காரணமாக நாளை (16) முதல் ஒரு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டு நீடிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை மின்னுற்பத்தி...
ஹர்ஷ, கபீர் ஹாசீம், எரானுக்கு நாடாளுமன்றில் உயர் பதவிகள்!
நாடாளுமன்ற அரச கணக்குகள் தொடர்பான குழுவின் (´கோபா குழு´) தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவின் பெயர் சபாநாயரிடம் முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன், மற்றுமொரு முக்கிய குழுவான 'கோப்' குழுவின்...
லபுக்கலையில் பஸ் விபத்து – நால்வர் படுகாயம்!
நுவரெலியாவிலிருந்து லபுக்கலை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று, நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் லபுக்கலை மேற்பிரிவு பகுதியில் வீதியை விட்டு விலகி நேற்று மாலை விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
விபத்தின்போது குறித்த பஸ்ஸில்...











