மீண்டும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு கடூழிய சிறை தண்டனை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
நாட்டில் இன்று 2 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சடுதியாக அதிகரித்த மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள்
அத்தியாவசிய பொருட்களுக்கு மேலதிகமாக சந்தைகளில் தற்போது, மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.
இதன்படி, பேலியகொடை மீன் சந்தை கட்டடத்தொகுதியில் ஒரு கிலோ கிராம் கெலவல்லா மீன் 2,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு...
எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோவின் அறிவிப்பு
எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று (07) கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய நகரங்களில் மாத்திரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் விநியோகஸ்தர்களின் விபரங்களை...
எரிவாயு விலை அதிகரிப்பு: லாஃப்ஸ் நிறுவனத்திடம் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை
எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திடம் விசாரணை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எதனடிப்படையில் விலை அதிகரிக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு...
பல்வேறு துறைகளில் தொழிலை இழக்கும் அபாயம்
பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் தொழிலை இழக்கும் அபாயம் காணப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொழில் நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு போதுமானளவு வருமானம் இல்லாமை...
21 இற்கு அமைச்சரவை அனுமதி இல்லை!
அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களையும் உள்ளடக்கிய வகையில் அமைச்சரவையில் நேற்று (06) முன்வைக்கப்பட்ட 21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை. இதனால் 21 ஆவது திருத்தச்சட்டமூலத்திலும் இழுபறி...
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பம்
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் உத்தேச அரசியலமைப்பு 21ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றில்...
ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் பதவியை இராஜினமா செய்ய வில்லை
ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க தமது பதவியை இராஜினமா செய்துள்ளதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியை இராஜினமா செய்ததாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே,...
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டேன்! ஜனாதிபதி கோட்டா!
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அறிவித்துள்ளார்.
தோல்வி அடைந்த ஜனாதிபதியாக தான் வெளியேற தயாரில்லை எனவும், ஐந்தாண்டுகள்வரை பதவியில் நீடிக்க மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது எனவும்...












