பற்றி எரிந்தது இலங்கை!நடந்தது என்ன? 8 பேர் பலி! (முழுமையான தொகுப்பு)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று (10) கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வமத தலைவர்களுடன் நேற்றிரவு (09) நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டார் என ஓமல்பே...
தாக்குதலில் ஆளுங்கட்சி உறுப்பினர் பலி!
ஆளுங்கட்சி பிரமுகரான, இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார, தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
அவரது இல்லத்தின் மீது நேற்றிரவு போராட்டக்குழுவொன்று தாக்குதலை மேற்கொண்டிருந்த நிலையில், அதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
அதன்பின்னர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை...
பிரதமர் பதவியை ஏற்க தயார் – கரு
அனைவரும் இணங்கினால் சிறந்த செயல் திட்டத்துடன் மிகக்குறுகிய காலத்துக்கு நாட்டின் பிரதமராகத் தயார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் அரசியல், பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்துகட்சிகளும் உள்ளடங்கிய...
பொதுத் தேர்தலுக்கான அழைப்பே நெருக்கடிக்கு நிலையான தீர்வு
நாட்டின் நெருக்கடி நிலைக்கு நிலையான தீர்வுகாண்பதற்கு பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதே தீர்வாக அமைய முடியுமென சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண்பது மற்றும் அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவருவதே...
ஊடரங்கு குறித்து வெளியான தகவல்
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர், தமது நிறுவன அடையாள அட்டையை பயன்படுத்தி தொழில் இடங்களுக்கு செல்ல முடியும் என சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நாளை காலை...
அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார் மஹிந்த
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அலரிமாளிகையில் இருந்து இன்று வெளியேறியுள்ளார்.
அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஒரு மாதகாலமாக போராட்டம் இடம்பெற்றுவந்த நிலையில், ஆளுங்கட்சியினரால் நேற்று வன்முறையைக் கட்டவிழ்த்துவிடப்பட்ட நிலையில் அவர்...
புதிய அரசு தொடர்பில் ஆராய இன்று கட்சி தலைவர்கள் கூட்டம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று கால விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
சர்வமத தலைவர்களுடன் நேற்றிரவு நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இன்றைய சந்திப்பில் புதிய அரசு மற்றும் நாட்டில்...
மஹிந்தவை உடன் கைது செய்ய வேண்டும்! மைத்திரி வலியுறுத்து!!
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை அழைத்து, போராட்டக்காரர்களை தாக்குதவதற்கு தூண்டிய மஹிந்த ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்டவர்கள் உடன் கைது செய்யப்பட வேண்டும்."
இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...
மே 11 வரை ஊடரங்கு நீடிப்பு!
நாட்டில் அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்குச்சட்டம் மே 11 ஆம் திகதி காலை 07 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் பொதுவெளியில் நடமாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்சக்களின் பூர்வீக இல்லம் தீக்கிரை!
அம்பாந்தோட்டை மெதமுலனவிலுள்ள ராஜபக்சக்களின் பூர்வீக இல்லமும் போராட்டக்காரர்களால் கொளுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், குருணாகலை பகுதியில் உள்ள மஹிந்தவின் தற்காலிக இருப்பிடமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.












