சபாநாயகர் தலைமையில் இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்!
நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்றைய தினம் முக்கிய கட்சித் தலைவர்கள் கூட்மொன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும்...
அதிக விலைக்கு சமையல் எரிவாயு விற்றால் கடும் நடவடிக்கை – லிட்ரோ
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் தேவைக்கு அதிகமாகவே சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகித்துள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் பாவனையாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்ய...
அடுத்து என்ன? அவசரமாகக்கூடும் அரச பங்காளிகள்!
அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டமொன்று இவ்வாரம் நடைபெறவுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் மொட்டு கட்சியின் ஸ்தாபகர் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார்.
புத்தாண்டில் நடைபெறும் முதலாவது கட்சித் தலைவர்கள்...
340 உள்ளாட்சி சபைகளின் பதவி காலம் நீடிப்பு!
340 உள்ளாட்சி சபைகளினதும் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
24 மாநகரசபைகள், 41 நகரசபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் பதவிக் காலத்தை 2023 மார்ச் 19 ஆம் திகதிவரை நீடிக்கும் வர்த்தமானி அறிவித்தில்...
‘ அரசுக்குள் இருந்துகொண்டு எதிரணி வேலையை செய்யக்கூடாது’ – பீரிஸ் சீற்றம்
“அரசுக்குள் இருந்துகொண்டு எதிரணி வேலையை செய்யமுடியாது. அதேபோல ஒரு அரசுக்குள் பல அரசுகள் செயற்படவும் முடியாது.”
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.
இது தொடர்பில் அவர்...
‘மைத்திரியை உடன் வெளியேற்றுக’ – மொட்டு கட்சிக்குள் வலுக்கும் எதிர்ப்பு
அரசிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வெளியேற்றுமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் கட்சி தலைமைப்பீடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனி வழி பயணத்துக்கு தயாராகிவிட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள், திட்டமிட்ட அடிப்படையில் அரசை விமர்சிப்பதாகவும், அரசுக்குள்...
கொழும்பில் இன்று மாத்திரம் 3 சடலங்கள் மீட்பு!
கொலன்னாவ பகுதியிலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 56 வயதான நபரொருவர் என உயிரிழந்தவரின் உறவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதேவேளை, இன்று (10) பகல் வேளையில்...
‘எங்கள் கூட்டணியில் மைத்திரிக்கு இடமில்லை’ – பொன்சேகா திட்டவட்டம்
" மைத்திரிபால சிறிசேனவுடன் எமக்கு எந்தவொரு கொடுக்கல் - வாங்கலும் இல்லை. அவருடன் எமது கட்சி கூட்டணி அமைக்காது." என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
" அரசியல்...
கொவிட் தொற்றால் மேலும் 15 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(09) இந்த எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட்...
தனியார் துறை ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவது கடினம் -தனியார் துறை தலைவர்கள்
நாட்டின் பொருளாதார நிலை சீராகும் வரை தனியார் துறை ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவது கடினம் என தனியார் துறைகளின் தலைவர்கள், தொழில் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி...












