வர்த்தக நிலைய ஊழியர் மீது வவுனியாவில் கத்திக்குத்து!
வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா, முதலாம் குறுக்குத்தெருப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில்...
1,600 போதை மாத்திரைகளுடன் கம்பளையில் வைத்தியர் கைது!
ஆயிரத்து 600 போதை மாத்திரைகளுடன் வைத்தியர் ஒருவர் கம்பளை, எக்கால பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராதனை வைத்தியசாலையில் சேவையாற்றும் 49 வயதான வைத்தியர் ஒருவரே நேற்றிரவு 11 மணியளவில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராதனை பகுதியில்...
2024 O/L , A/L பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதி அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மே அல்லது ஜுன் மாதங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், 2024ம் ஆண்டுக்கான கல்வி பொது...
தமிழ் மக்களுடன் கனடா இணைந்து பயணிக்கும் – தூதுவர் உறுதி
தமிழ் மக்களுடன் கனடா என்றும் இணைந்து பயணிக்கவே விரும்புகின்றது என்று இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் தெரிவித்தார்.
இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அழைப்பின் பேரில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு...
கந்தப்பளையில் பெண்ணை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அலுவலருக்கு ஏழு வருடங்கள் கடூழியச் சிறை!
திருமணம் ஆகாத 35 வயதுடைய பெண் ஒருவரைப் பாலியல் துஷ்பிர யோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு ஏழு வருடக் கடூழியச் சிறைத் தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபா தண்டப்பணத் துடன்...
ஹோட்டல் உரிமையாளர்மீது துப்பாக்கிச்சூடு!
கொழும்பு , முகத்துவாரம் வீதியில் அமைந்துள்ள உணவகமொன்றுக்கு அருகில் நேற்றிரவு(13) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காரில் வந்தவர்களால் ரிவோல்வர் ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த உணவகத்தில்...
பேராதனை பல்கலை. விவசாயபீடத்தின் கால்நடைப் பண்ணைக்குள் நுழைந்து பன்றியை களவாடிய மூவர் கைது!
பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் கால்நடைப் பண்ணைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து, சுமார் 150 கிலோ எடையுள்ள பன்றியைக் கொன்று இறைச்சியை விற்பனை செய்த மூவரை பேராதனை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இப்பண்ணையில் இறைச்சிக்காகவும்,...
சாந்தன் விரைவில் நாடு திரும்பும் சாத்தியம்!
தனது முதுமைக் காலத்தில் மகனுடன் இணைந்து வாழ வேண்டும் என்கிற தில்லையம்பலம் மகேஸ்வரியின் கனவும் நனவாகும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. அவருடைய மகன் சாந்தன் என்கிற தில்லையம்பலம் சுதேந்திரராஜாவை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான அனுமதியை...
“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க முழு ஆதரவு”
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் நிலைப்பாட்டிலேயே ஐக்கிய மக்கள் சக்தி உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார். எனினும், இவ்வருடம் ஜனாதிபதி தேர்தல் மற்றும் அதன்பின்னர் பொதுத்தேர்தல் என்பன...
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரிக்கும் இளவயது மரணங்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை கிராமத்தில் நேற்று (12) பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்ததினால் உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 வயது பூர்த்தியாகாத உயர்தர...













