சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரும் பொலிஸார்
ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்து பொருட்களுக்கு சேதம் விளைவித்த சந்தேக நபர் 72 பேரை அடையாளங் காண்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளனர்
ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ...
உள்நாட்டு பால் உற்பத்தி பொருட்களுக்கு முன்னுரிமை
உள்நாட்டு பால் உற்பத்தி பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி தடை காரணமாக சந்தையில் ஏற்படக்கூடிய பால் உற்பத்தி பொருட்களின் பற்றாக்குறையினை தவிர்க்கும் வகையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, உள்நாட்டில் பால் மா மற்றும்...
நாடளாவிய ரீதியில் மேலதிகமாக எரிபொருட்களை விநியோகிக்க நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் 500 தொடக்கம் 1000 மெட்ரிக் தொன் வரையான டீசல் மற்றும் பெட்ரோலை மேலதிகமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, தற்போது விநியோகிக்கப்படும் 4000 மெட்ரிக் தொன்னுக்கு மேலதிகமாக டீசலை விநியோகிக்கவுள்ளதாக இலங்கை...
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இளைஞர், யுவதிகளுக்கு போட்டியிட வாய்ப்பு – ஜீவன்
நாட்டில் கூடிய விரைவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெற போகின்றது என தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இந்த தேர்தலில் இலங்கை...
உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டன
2021ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் சற்று முன்னர் வெளியாகியுள்ளன
www.doenets.lk எனும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
கொவிட் தொற்றினால் மேலும் 2 பேர் பலி
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.நேற்று (27) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் விஷேட கூட்டம்
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நாளை (29) நடைபெற உள்ளது.
இந்த சந்திப்பு நாளை மாலை 5.00 மணிக்கு நடைபெற உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில்...
இன்று மின்வெட்டு நேரத்தை குறைக்க தீர்மானம்
மின்வெட்டு நேரத்தை இன்று ஒரு மணித்தியாலம் வரை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
தேவை குறைவு மற்றும் நிலக்கரி அனல்மின் நிலையம் மீண்டும் தொடங்கப்பட்டதால், இன்றைய மின்வெட்டு இரவில் ஒரு...
காலிமுகத்திடலில் பட்டம்விட்டு எதிர்ப்பை வெளிப்படுத்திய குழுவினர்
காலிமுகத்திடலில் நேற்றைய தினம் மக்கள் பலவிதமான காத்தாடிகளை பறக்கவிடுவதைக் காண முடிந்தது.
அங்கு அரச அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பட்டங்களும் ஜனாதிபதி ரணில் மற்றும் சில அரசியல்வாதிகளின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட...
எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்
டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு போதுமான அளவு இருப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.










