கோதுமை மா விலையும் எகிறியதால் மலையக மக்கள் பெரிதும் பாதிப்பு!
நாட்டில் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் சூழ்நிலையில், இன்று முதல் கோதுமை மாவின் விலையும் எகிறியுள்ளதால் மலையக மக்கள் பெரிதும் பாதிக்கப்படக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மலையகத்தில் நகர் புறங்கள் மற்றும் பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களுள்...
பச்சைக் கொழுந்து இன்மையால் தேயிலை தொழிற்சாலைகள் பாதிப்பு!
தேயிலை தொழிற்சாலைகளை நடாத்தி செல்ல தேவையான பச்சைக் கொழுந்து இன்மையால் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக தொழிற்சாலை முகாமையாளர் தெரிவித்தனர்.
தேயிலை உற்பத்திக்காக பயன்படுத்தும் இரசாயன உரம் மற்றும் இரசாயன மருந்துகள் இன்மையால் தேயிலைத் தோட்டங்கள்...
நீதிகோரி போராட்டம்…….
பதுளையில் பாடசாலை மாணவியொருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தைக் கண்டித்தும், கொலையாளிக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் ஹாலிஎல நகரில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது...
(எம்.செல்வராஜா பதுளை)
குளவிக்கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி! சென்கூம்ஸ் தோட்டத்தில் சோகம்!!
லிந்துலை, சென்கூம்ஸ் தோட்டத்தில் நேற்று மாலை குளவி கொட்டுக்கு இலக்காகிய ஒருவர் பலியாகியுள்ளார்.
தொழில் முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியிலேயேஅவர் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்.
லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
டிஜிட்டல் தராசு வேண்டாம் -பண்டாரயெலிய பெருந்தோட்டத்தின் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஹப்புத்தளைப் பகுதியின் பண்டாரயெலிய பெருந்தோட்டத்தின் தொழிலாளர்கள் ஐநூறு பேர் இன்று( 09-03-2022) பணிப்பகிஸ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை மேற்கொண்டனர்.
கொய்யப்படும் தேயிலைத் தளிர்களை நிறுப்பதற்கு தோட்ட நிருவாகம் நவீன முறையிலான டிஜிட்டல் தராசு பாவனையை...
மாணவியை கொன்றுவிட்டு தலைமறைவான இளைஞன் கைது!
பதுளை , ஹாலி எல, உடுவரை தோட்டத்து மாணவியை கோடரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்த நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவியை கொலை செய்துவிட்டு 32 வயதான சந்தேக நபர் தலைமறைவானார். இதனையடுத்து...
தலவாக்கலை ஆலய ஆலமர விவகாரம் – பிரதமர் அலுவலக கவனத்திற்கு கொண்டு சென்றார் ஜீவன் தொண்டமான்
தலவாக்கலை லோகி தோட்ட பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில் இருந்த 200 வருடம் பழமைவாய்ந்த ஆலமரத்தை கடந்த இருவாரங்களுக்கு முன் வெட்டப்படும்போது மரகிளையொன்று முறிந்து விழுந்ததில் குறித்த பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார்...
வழிப்பிள்ளையார் ஆலயத்தை மீட்க கோரி தலவாக்கலையில் கடையடைப்பு போராட்டம்
தலவாக்கலையில் கடந்த சில வாரங்களாக பேசும் பொருளாக மாறியுள்ள தலவாக்கலை லோகி தோட்ட மல்லிகைபூ சந்தியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்திப்பெற்ற வழிப்பிள்ளையார் ஆலயத்தினை தலவாக்கலை கதிரேசன் தேவஸ்த்தான பரிபாலன சபையிடம் ஒப்படைக்க வேண்டும் என...
தலவாக்கலை வழி பிள்ளையார் கோவிலுக்கு நடக்கப்போவது என்ன?
தலவாக்கலை லோகி சந்தியில் கடந்த 21ஆம் திகதி ஆல மரக் கினைகள் வெட்டிய போது முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றாததன் காரணமாக துரதிஷ்டவசமாக ஆசிரியர் ஒருவர் பலியானார்.
அதன் பின்னர் வெட்டப்பட்ட மரக்கிளைகள் முழுமையாக...
உடப்புஸ்ஸலாவையில் வீடொன்றில் தீப்பரவல்.
உடபுஸல்லாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உடபுஸால்லாவ எமெஸ்ட் தோட்டத்தில் வீடொன்றினுள் 06/03/2022 ஞாயிற்றுக்கிழமை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த தீப்பரவல் காரணமாக வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் தீக்கரையாகியுள்ளதோடு வீட்டிலுள்ளவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் தாய்,தந்தை, இரு...












