டலசுக்கு நேசக்கரம் நீட்டிய பீரிஸின் பதவியை பறிக்கிறது மொட்டு கட்சி!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பேராசிரியர் ஜி.எல். பீரிஸை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி தலைவரான மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் கலந்துரையாடி முடிவொன்றை...
சர்வக்கட்சி அரசில் இணையுமா ஜே.வி.பி.? செவ்வாயன்று ஜனாதிபதியுடன் பேச்சு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் , அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
சர்வக்கட்சி அரசு மற்றும் அதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.
சர்வக்கட்சி அரசு தொடர்பில்...
‘அவசரகால சட்டத்தை நீடிக்க விரும்பவில்லை’ – ஜனாதிபதி
“எதிர்காலத்தில் ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அரசை சர்வகட்சி அரசு என்று பெயரிடுவதற்கு உடன்படவில்லை என்றால், சர்வகட்சி ஆட்சி என்று பெயரிட நான் முன்மொழிகின்றேன்.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சர்வகட்சி அரசை அமைப்பது தொடர்பில்...
சர்வகட்சி ஆட்சிமுறைக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு
சர்வகட்சி அரசாங்கம் என்ற வரையறைக்கு இணக்கம் காண முடியாத பட்சத்தில் சர்வகட்சி நிர்வாக ஆட்சிமுறையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார்.
இது தொடர்பில் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு அவர் அழைப்பு...
கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூடு – பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம்
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் பாதுகாப்பு கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம்பெற்றிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் குறித்த இருவரும் பணி...
சீரற்ற காலநிலை – கண்டி மாவட்டத்தில் 5,000 பேர் பாதிப்பு
சீரற்ற காலநிலையில் கண்டி மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்து 248 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவால் 148 வீடுகள் சேதமடைந்துள்ளன.
29 குடும்பங்களைச் சேர்ந்த 109 பேர் பாதுகாப்பான இடங்களில்...
46 இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸ்திரேலியா!
இலங்கையில் இருந்து தமது நாட்டுக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசிக்க முயன்ற 46 சட்டவிரோத குடியேற்றக்காரர்களை ஏற்றிக்கொண்டு ஆஸ்திரேலியக் கப்பல் ஒன்று இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 46 பேர் கடந்த ஜூலை மாதம்...
அமைச்சு பதவிகளை ஏற்கமாட்டோம் – டலஸ் அணி அதிரடி அறிவிப்பு!
" சர்வக்கட்சி வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினாலும், அமைச்சு பதவிகளை பெற்றுகொள்ளமாட்டோம்." - என்று பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் டலஸ் ஆதரவு அணி உறுப்பினர்கள் கொழும்பில் இன்று ஊடக சந்திப்பொன்றை...
கொஸ்வத்தை மகாநாம தேரருக்கு பிணை!
நீதிமன்ற உத்தரவை மீறியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொஸ்வத்தை மகாநாம தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவானால் தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல அவருக்கு அனுமதி...
திங்கள் முதல் கேஸ் விலை 250 ரூபாவால் குறைகிறது!
12.5 கிலோ எடையுடைய லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 250 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதென நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த விலை குறைப்பு அமுலுக்கு வரவுள்ளது.5 மற்றும் 2.5 கிலோ...













