ஜனாதிபதி உடன் பதவி விலக வேண்டும்! கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஜீவன் வலியுறுத்து
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக பதவி விலக வேண்டும் என்று இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.
‘கோட்டா கோ ஹோம்’ – மலையகத்தில் பல பகுதிகளில் போராட்டம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மலையகத்தில் பல பகுதிகளிலும் இன்று போராட்டங்களும், பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி,...
ரணில் அழைக்கும் கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம் – சஜித் அறிவிப்பு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள கட்சி தலைவர்கள் கூட்டத்தை புறக்கணிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.
தற்போதைய நிலைக்கு பிரதமரும் பொறுப்பு...
பாராளுமன்றம் தீர்மானித்தால் பதவி விலக தயார் – ஜனாதிபதி
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவசர கட்சித.தலைவர்கள் கூட்டமொன்று அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று மாலை 4 மணியளவில் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அதேவேளை, நாடாளுமன்றம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட தான் தயார் என...
உடன் பதவி விலகுங்கள் – ஜனாதிபதியிடம் மொட்டு கட்சி எம்.பிக்கள் வலியுறுத்து!
" உடன் பதவி விலகி, கௌரவமாக விடைபெறுங்கள்." - இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டலஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா உட்பட மொட்டு கட்சியின்...
நாட்டில் பதற்றம் – அவசர கட்சி தலைவர் கூட்டத்துக்கு பிரதமர் அழைப்பு!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவசர கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறும் சபாநாயகரிடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சஜித் பிரேமதாச வைத்தியசாலையில் அனுமதி!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.
திடீரென ஏற்கட்ட சுகயீனம் காரணமாக அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
போராட்டம் – 31 பேர் காயம்! இருவரின் நிலை கவலைக்கிடம்!!
ஜனாதிபதி மாளிகைக்கு முன் இன்று நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட அமைதியின்மையால் இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 31 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை...
ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்கள் வசம்! உக்கிரமடைகிறது போராட்டம்!!
ஜனாதிபதி மாளிகை, போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. சிலர் மாளிகைக்குள் நுழைந்துள்ளனர்.
போராட்டக்காரர்களை தடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர். எனினும், வீதித்தடைகளை உடைத்து, போராட்டக்காரர்கள் முன்னோக்கி சென்றனர்.
இதன்போது ஏற்பட்ட பதற்ற நிலையில் இரு...
அடுத்த வாரமும் பாடசாலைகளுக்கு விடுமுறை!
அரச மற்றும் அரச அங்கீகாரம்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு மீண்டும் ஒருவார காலம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜூலை 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கல்வி நடவடிக்கை இடம்பெறாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 18ஆம் திகதி...













