தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க இ.தொ.காவுக்கும் அழைப்பு
தமிழ் பேசும் கட்சிகளின் பங்களிப்புடன் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவராலேயே இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது...
கொட்டகலை பிரதேச சபை உபதலைவரால் சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு மரண அச்சுறுத்தல்!
கொட்டகலை பிரதேச சபையின் உபதலைவர் மற்றும் அவரது குடும்பத்தாரால் தனக்கு மரண அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவலிங்கம் சிவகுமாரன் பத்தனை டிம்புள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.
கொட்டகலையில் அமைந்துள்ள தனது பெரிய...
கொவிட் தொற்றால் 20 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற மத்திய குழுக் கூட்டத்தின் போதே இந்த...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 323 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 323 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 558,850 ஆக அதிகரித்துள்ளது.
‘ஒரு ஆளுக்கு ஒரு சட்டம்’ – ஜனாதிபதி செயலணிக்கு புதிய பெயர் சூட்டினார் மனோ
" ஒரே நாடு - ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியில் இருக்கும் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் உடன் பதவி விலக வேண்டும்."- என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் 6 மாதங்கள் இடைநிறுத்தம்?
" நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் சம்பளம் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட வேண்டும்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
கோழி பண்ணையில் தீ – 3,000 கோழிகள் உயிரிழப்பு
பன்னல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம பகுதியிலுள்ள கோழி பண்ணையொன்றில் ஏற்பட்ட தீ பரவவால் சுமார் 3 ஆயிரம் கோழிகள் உயிரிழந்துள்ளன என்று பன்னல பொலிஸார் தெரிவித்தனர்.
எரிவாயு கசிவினாலேயே இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.
நீர்க்கொழும்பு...
சிக்கியது பிசிஆர் மோசடி கும்பல்!
வெளிநாடு செல்பவர்களுக்கு மோசடியான முறையில் கொரோனா பரிசோதனை அறிக்கையை (பிசிஆர்) தயாரித்து - அதிக விலைக்கு விற்பனை செய்துவந்த கும்பல் சிக்கியுள்ளது.
கொச்சிக்கடையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே மேற்படி குடும்பலைச் சேர்ந்த...
மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு யாழ். மீனவர்கள் போராட்டம்! (படங்கள்)
ஏ9 வீதி மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு, மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏ9 வீதி முடங்கி- போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்...












