‘கொரோனா’வால் மேலும் 103 ஆண்களும், 64 பெண்களும் பலி!
கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று (15) 167 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பான உறுதிப்படுத்தல் அறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
103 ஆண்களும், 64 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
‘இறுதிநொடிவரை நம்பவே இல்லை’ – அமைச்சர் பவித்ரா கவலை
" சுகாதார அமைச்சு பதவியில் திடீர் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்க்கவில்லை. இறுதிநொடிவரை இது குறித்து எனக்கு தெரியவே தெரியாது. எனினும், இடம்பெறும் மாற்றங்களை இன்பத்துடன் ஏற்க வேண்டும். எல்லாம் நன்மைக்குதான் என...
நாட்டில் மேலும் 2,428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 428 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 57 ஆயிரத்து 396 ஆக அதிகரித்துள்ளது.
‘கொரோனா பரவல்’ – சபை அமர்வு ஒரு நாள் மட்டுமே நடைபெறும்
நிலவும் கொவிட் சூழலைக் கருத்தில் கொண்டு இவ்வாரத்தில் பாராளுமன்றத்தை நாளையதினம் (17) மாத்திரம் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (16) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில்...
பதுளை, பண்டாரவளை நகரங்களை முடக்குவதற்கு முடிவு!
பதுளை நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்களை எதிர்வரும் 18.08.2021 ஆம் திகதி முதல் ஓருவாரகாலம் மூடுவதற்கு நகர வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொவீட் தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே பதுளை நகர வர்த்தக...
பதுளையில் 12,822 பேருக்கு கொரோனா! 176 பேர் இதுவரை உயிரிழப்பு!!
பதுளை மாவட்டத்தில் 15 பிரதேச செயலகங்களில் கோவிட் 19 தொற்றினால் சிகிச்சை பயனின்றி 16-08-2021 வரையில் மொத்தமாக 176 பேர் உயிரிழந்துள்ளனர்.
பன்னீராயிரத்து எண்ணூற்று இருபத்தி இரண்டு பேர் இதுவரையில் கோவிட் 19 தொற்றுக்கிலக்காகியிருக்கின்றனர்.
நாலாயிரத்து...
Prime Residencies PLC இலங்கையின் முதலாவது Online Virtual Property அணுகல் பதிவு விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது
இலங்கையின் மிகப்பெரிய காணிகட்டட விற்பனை நிறுவனமான பிரைம் குழுமத்தின் அண்மைய சொகுசு மாடி வீட்டுத் தொகுதி திட்டமான நீர்கொழும்பு Prime Amber Skye இலங்கையில் காணி கட்டட விற்பனை துறையில் முதலாவது Online...
‘பொருளாதாரத்தைவிடவும் மக்களின் உயிரே முக்கியம்’
பொருளாதாரத்தைவிடவும் மக்களின் உயிர் முக்கியம். எனவே, வைத்தியர்கள் உட்பட சுகாதார தரப்பால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை அரசு செயற்படுத்த வேண்டும். தற்போதைய சூழ்நிலையிலும் ஏகாதிபத்திய ஆட்சியை முன்னெடுப்பதற்கு முற்படக்கூடாது - என்று பிரதான எதிர்க்கட்சியான...
அமைச்சரவை மாற்றம்! நாமல் ராஜபக்சவிற்கு மேலும் ஒரு அமைச்சுப் பதவி!!
அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டளஸ் அழகப் பெரும ஊடகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தினேஸ் குணவர்தன கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கெஹெலிய ரம்புக்வெல்ல - சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பவித்ரா வன்னியாராச்சி...
பவித்ராவின் பதவி பறிப்பு! சுகாதார அமைச்சரானார் கெஹலிய!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவை இன்று மீண்டும் மறுசீரமைக்கப்பட்டது. இதன்படி முக்கிய சில அமைச்சு விடயதானங்கள் கைமாற்றப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சராக பதவி வகித்த பவித்ராவிடமிருந்து அவ்வமைப்பு பறிக்கப்பட்டு கெஹலியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜி.எல். பீரிஸ் ...



