செப்டம்பர் 06 ஆம் திகதிக்கு பிறகும் ஊரடங்கு தொடரவேண்டும்!
செப்டம்பர் 06 ஆம் திகதிக்கு பிறகும் நாடு முடக்கப்பட வேண்டும். மக்களை பாதுகாப்பதற்கு இதைவிடவும் மாற்றுவழி கிடையாது என்று விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் லக்குமார பெர்ணான்டோ இன்று தெரிவித்தார்.
இது...
ரிஷாட்டின் மாமாவுக்கு கொரோனா தொற்று!
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மாமாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த நிலையில் எரிகாயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த மலையக சிறுமி ஹிஷாலியின் மரணம் தொடர்பில், சந்தேகத்தின்...
நாட்டில் மேலும் 3, 818 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 3 ஆயிரத்து 818 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 16 ஆயிரத்து 182 ஆக அதிகரித்துள்ளது.
‘அத்தியாவசிய சேவைகள், அனுமதிக்கப்பட்டுள்ள தொழில் துறைகள் இயங்கும்’
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ள போதிலும், அனுமதிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய சேவை மற்றும் ஏனைய சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
" நாட்டில் எதிர்வரும் 30...
மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்
கல்வி பொதுத் தராதர உயர் தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களுக்காக இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, செப்டம்பர் மாதம் 15 ஆம்...
‘ஆப்கான் மக்களை கைவிட்டதுபோல தமிழர்களை அமெரிக்கா கைவிடக்கூடாது’
அரசாங்க - கூட்டமைப்பு பேச்சுவார்த்தை யோசனையை நாம் வரவேற்கின்றோம். ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்திருந்தாலும், இல்லாவிட்டாலும் கூட அவர்தான் இந்நாட்டு ஜனாதிபதி. ஆகவே இந்த அரசுடன்தான் பேச வேண்டும்.
ஐநா மனித...
‘கொரோனா’விலிருந்து மீண்டார் அஜித் ரோஹண
கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்றுவந்த பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, குணமடைந்துள்ளார்.
இதனையடுத்து அவர் இன்று வீடு திரும்புகின்றார். இரு வார ஓய்வின் பின்னர் மீண்டும் சேவையை...
செப்டம்பர் 06 ஆம் திகதிவரை ஊரடங்கு நீடிப்பு!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை செப்டம்பர் 06 ஆம் திகதி அதிகாலை 04 மணிவரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகதில் இன்று நடைபெற்ற கொவிட்...
‘கொரோனா ஒழிப்புச் சமர்’ – இலங்கைக்கு முழு ஒத்துழைப்பு! சீனா உறுதி!!
இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ சென்ஹொங் மரியாதையின் நிமித்தம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்றுக் காலை (26) சந்தித்தார்.
தற்போதைய கொவிட்-19 சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு இரு நாடுகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் நேரத்தில், கொவிட்-19ஐ...
‘பொலிஸ்மா அதிபரின் அறிவிப்பு’ – எதிர்க்கட்சியின் நிலைப்பாடு அறிவிப்பு
21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள அறிவிப்பானது ஊடகத்துக்கான கண்காட்சியாகக்கூட இருக்கலாம் - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சாடியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது,...



