மின்சார வேலியில் சிக்கி நபரொருவர் பலி!
மஹியங்கனை, மாபகதேவாவ பகுதில் காட்டு யானைகளை விரட்டுவதற்காக வயல் பகுதியில் போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி ஒருவர் இன்று (03) அதிகாலை உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 56 வயதுடையவர் மாபகதேவாவ மஹியங்கனை...
குடும்ப வன்முறைகளைத் தீர்க்க புதிய சட்டம்
தற்போதைய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதென மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
அதேநேரம்,...
நாமல் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் முழு ஆதரவு!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவை களமிறக்குவதற்கு கட்சி தீர்மானித்தால் அதற்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டபிய்யூ. டி. வீரசிங்க தெரிவித்தார்.
மொட்டு கட்சி...
நோயாளிகளுக்கென பணம் சேகரித்து மோசடியில் ஈடுபட்ட மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது!
மாத்தறை ஹிஹகொட பிரதேசத்தில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்து மக்களிடம் வஞ்சகமாக பணம் சேகரித்த மூன்று பெண்கள் உட்பட நால்வர் பலாங்கொடை பொலிஸார்...
பருத்தித்துறையில் வாள் வெட்டு – துண்டாடப்பட்டது இளைஞனின் கை!
உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு வாள் வெட்டில் முடிவடைந்ததில் இளைஞன் ஒருவர் மணிக்கட்டுடன் கையை இழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, புலோலி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ஒருவரே மணிக்கட்டுடன் ஒரு கையை இழந்துள்ளார்.
புலோலி...
நகரசபை ஊழியரை அடித்து காயப்படுத்திய அரசியல்வாதி கைது
கண்டி மாநகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவு ஊழியர் ஒருவரை தாக்கியதாகக் கூறப்படும் கண்டி மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கண்டி தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலினால் மாநகரசபை ஊழியரின்...
‘கச்சத்தீவை மீளப்பெற முடியாது’ – ஈபிடிபி சுட்டிக்காட்டு
" இருநாட்டு உடன்பாடுகளின் அடிப்படையில் இந்தியாவால் வழங்கப்பட்ட கச்சதீவை இனி இந்தியா மீளப்பெறமுடியாது." - என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்க 9 பேரடங்கிய விசாரணைக்குழு – சஜித் உறுதி!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தான் நேற்று கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்காத காரணத்தினாலும், அதற்கு அரசாங்கம் நீதி வழங்காத காரணத்தினாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால்,...
கச்சத்தீவை மீட்போம் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சூளுரை
"கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கச்சத்தீவு...
மைத்திரியுடன் சங்கமிப்பாரா தயாசிறி?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுமாறு அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
பொதுச்செயலாளர் பதவி அல்லாமல் உப தலைவர் பதவியொன்றை வழங்குவதற்கு அக்கட்சி தயாராகவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.
எனினும்,...













