நாளை நாடாளுமன்றம் கூட்டப்படாது- சபாநாயகர்
நாளை நாடாளுமன்றம் கூட்டப்படாது எனவும் ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைத்த பின்னர் மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்படும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாபா அறிவித்துள்ளார்.
மின் வெட்டு தொடர்பான அறிவிப்பு
நாளை (15) 3 மணித்தியாலங்கள் மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
நாளைக்கு பிறகு மீண்டும் மின்வெட்டு அட்டவணையில் மாற்றம் செய்யப்படும்.
ஜனாதிபதி மாளிகையிலிருந்து போராட்டக்காரர்கள் வௌியேறினர்
ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அங்கிருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது, கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது.
ஜூலை 9 ஆம் திகதி முதல் இன்று...
ரணிலின் இடத்துக்கு ருவான் விஜேவர்தன நியமனம்?
தான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார் என வெளியாகியுள்ள தகவலை ஐ.தே.கவின் பிரதித் தலைவரான ருவான் விஜேவர்தன நிராகரித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ஐ.தே.கவின் தேசியப் பட்டியல் எம்.பியாக ருவான் விஜேவர்தன நியமிக்கப்படுவார்...
வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது முழுமையான அதிகாரத்தை பயன்படுத்த வேண்டி ஏற்படும்- இராணுவம்
இராணுவத்தினர் அறிக்கை மூலம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.
வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது முழுமையான அதிகாரத்தை பயன்படுத்த வேண்டி ஏற்படும் என இராணுவம் அறிவித்துள்ளது.
அரச சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துகின்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்...
சிங்கப்பூர் பறந்தார் கோட்டா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மாலைத்தீவிலிருந்து சிங்கப்பூர் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
சிங்கப்பூர் சென்றதன் பின்னர் தனது இராஜினாமா கடிதத்தை தருவார் என எதிர்பாக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சவுதி எயார்லைன்ஸ் SV788 விமானத்தின் மூலம் சிங்கப்பூர் சென்றுள்ளதாக...
கைப்பற்றிய மாளிகைகளை மீள கையளிக்க போராட்டக்காரர்கள் முடிவு!
தமது கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றை மீள கையளிப்பதற்கு போராட்டக்காரர்கள் இன்று தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பில் போராட்டக்காரர்களால் இன்று விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய...
கொழும்பில் இன்றும் ஊரடங்கு
கொழும்பு மாவட்டத்தில் இன்றும் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
இன்று (14) நண்பகல் 12 மணி முதல் நாளை (15) அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள்...
மீண்டும் அச்சம்! கண்டியில் வெடித்தது எரிவாயு அடுப்பு!!
கண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியில் சமையல் எரிவாயு அடுப்பு, வெடித்த சம்பவமொன்று இன்று பதிவாகியுள்ளது.
குறித்த வீட்டார் நேற்றுதான் சமையல் எரிவாயு சிலிண்டரை வாங்கி வந்துள்ளனர். அதனை பயன்படுத்தி இன்று சமைக்க முற்பட்டவேளையிலேயே இவ்வெடிப்புச் சம்பவம்...
கோட்டாவின் கடிதம் வராததால் குழப்பம் – நாடாளுமன்றத்தை கூட்டுவதிலும் சிக்கல்
" தற்போது நான் மிகுந்த அழுத்தத்தில் உள்ளேன். விரைவில் இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைப்புன் என ஜனாதிபதி என்னிடம் கூறினார்." - என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
தற்போது பதில் ஜனாதிபதியொருவர்...












