நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 15 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 73 ஆயிரத்து 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இக்காலப்பகுதியில் டெங்கு நோயால்50 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை மாதத்தின் கடந்த 15 நாட்களில் மாத்திரம் 18, 076பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் மாத்திரம் 38, 700 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நுவரெலியா மாவட்டத்தில் 485 பேரும், கண்டி மாவட்டத்தில் 4, 856 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 776பேரும் இதுவரை டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

