” சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பான அறிக்கை பெரும்பாலும் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.” – என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நேற்று தெரிவித்தார்.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மேற்படி அறிக்கை முன்வைக்கப்படவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு எதிர்வரும் 20 ஆம் திகதி கூடவுள்ளது. இதன்போது இலங்கைக்கு கடன் வழங்குவதற்கான நிறைவேற்றுக்குழுவின் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த குழுவின் இணக்கப்பாடு கிடைத்த கையோடு, அறிக்கை சபையில் முன்வைக்கப்படும். இதில் ஒளிவு மறைவுக்கு இடமில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
4 வருட காலப்பகுதிக்குள் 8 கட்டங்களாக சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.
அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பின்னர், அது தொடர்பிலும் மாற்று திட்டங்களையும் எதிரணிகள் முன்வைக்கலாம் எனவும் அவர் கூறினார்.