அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை (14) கைச்சாத்திடப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். (இலங்கை நேரப்படி நாளை அதிகாலை)
அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் நீரிணை உடனடியாகத் திறக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பாகத் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் ட்ரம்ப் வெ ளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஈரான் அணு ஆயுதங்களை வாங்குவதையோ, தயாரிப்பதையோ அல்லது வேறு எந்த வழியிலும் அணு ஆயுதப் பொருட்களைப் பெறுவதையோ இந்த ஒப்பந்தம் நிரந்தரமாகத் தடுக்கும்.
இது ஈரான் அணு ஆயுதமேந்தா நிலையை உறுதி செய்யும் ஒரு வலுவான சுவராக இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த உடன்படிக்கையைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை திறக்கப்படுவதுடன், அமெரிக்கா – ஈரான் இடையிலான உறவு, முந்தைய அரசாங்கங்களின் அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
