Home Blog Page 182

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 30 பேர் காயம்!

ஜப்பானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.5-ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் சுமார் 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது.

வட ஜப்பானின் ஹோன் தீவிலுள்ள ஆவோமோரி, ஹொக்காடியோ தீவின் தென் பகுதிகளில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் அதிகமாக உணரப்பட்டது.
பல கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

இதைத் தொடர்ந்து ஜப்பானின் வடகடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 10 அடி உயரத்துக்கு சுனாமி பேரலை கடற்கரை பகுதிகளை தாக்கக்கூடும் என ஜப்பான் அரசு தரப்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதனால் கடற்கரை பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், 0.5 முதல் 0.7 மீட்டர் என்ற உயரத்தில் தான் கடல் அலைகள் எழும்பின. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஆவோமோரி டவுன் பகுதியில் ஓட்டலில் தங்கியிருந்த சிலர் காயம் அடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் வெளியாகின.
ஆவோமோரி, ஹொக்காடியோ பகுதியில் நிலநடுக்கத்தின் அதிர்வு காரணமாக குடியிருப்புகளில் சுவர் மற்றும் மாடங்களில் வைக்கப்பட்ட பொருட்கள் கீழே விழுந்தன. சில இடங்களில் விபத்து சம்பவங்களும் ஏற்பட்டன.

 

மரக்கறி விலைப்பட்டியல் (9.12.2025)

மரக்கறி விலைப்பட்டியல் (9.12.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (9) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

பதுளை மாவட்டத்தில் 404 வீடுகள் முழுமையாகவும், 7,291 வீடுகள் பகுதியளவும் சேதம்!

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் பதுளை மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அம்மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவால் 90 பேர் உயிரிழந்துள்ளனர்.11 பேர் காணாமல் போயுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

404 வீடுகள் முழுமையாகவும், 7 ஆயிரத்து 291 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

5ஆயிரத்து 414 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 750 பேர் இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

டித்வா புயலை அடுத்து ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பதுளை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 436 குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்து 699 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியின் முன்மாதிரியான நடவடிக்கை!

திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்காக பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றம் 250 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியது.

மன்றத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க உட்பட பணிப்பாளர் சபையினால் அதற்குரிய காசோலை 2025 டிசம்பர் 08ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்டத்தில் 767 வீடுகள் முழுமையாக சேதம்!

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் நுவரெலியா மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அம்மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவால் 89 பேர் உயிரிழந்துள்ளனர். 37 பேர் காணாமல் போயுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

767 வீடுகள் முழுமையாகவும், 3 ஆயிரத்து 742 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

6 ஆயிரத்து 652 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 825 பேர் இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

டித்வா புயலை அடுத்து ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 19 ஆயிரத்து 780 குடும்பங்களைச் சேர்ந்த 63 ஆயிரத்து 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட நியமனம்

 

பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ள நிலையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய்வு

டித்வா சூறாவளியால் நுவரெலியா மாவட்டத்தில் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய்வதற்கும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்குமான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (08) காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 1421 ஹெக்டெயார் காய்கறி பயிற்செய்கைகள் சேதமடைந்துள்ளன.இந்த நிலையில் விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பயிர்கள் சேதமடைந்ததால் நுவரெலியா மாவட்டத்தில் காய்கறி அறுவடை சுமார் 25% குறைந்துள்ளதாக அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர். நுவரெலியா மாவட்டத்திற்கு நாளாந்த காய்கறி விநியோகத்தை மேற்கொள்ள முடிந்துள்ள போதும் நாளாந்த கேள்வியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நுவரெலியா மாவட்டத்தில் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், விலைகள் அதிகரித்துள்ளதாகவும் பரப்பப்படும் தவறான செய்தியே இதற்குக் காரணம் என்றும் அதிகாரிகள் ஜனாதிபதியிடம் மேலும் சுட்டிக்காட்டினர்.

எங்கள் மக்களுக்கு காணி உரிமையை வழங்குங்கள்: ஜனாதிபதியிடம் ஜீவன் நேரில் கோரிக்கை!

 

மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தால், வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய வழிமுறை பிறக்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம், இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போதே ஜீவன் தொண்டமான் எம்.பி. மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.

“சீர்திருத்தம், வீடமைப்பு தொடர்பில் பேசப்பட்டாலும், மலையகத்தில் பெரும் பிரச்சினையொன்று உள்ளது. அதாவது தோட்டத்தில் வேலைசெய்தால்தான் அடையாளம், சலுகைகள் கிடைக்கப்பெறுகின்றன. தோட்டத்தில் வேலை செய்யாத ஏனையோருக்கு எவ்வித அதிகாரமும் கிடைக்கப்பெறவில்லை. இந்த சிஸ்டம் மாற வேண்டும். இது பற்றி மக்களிடம் நேரில் சென்று கேட்டறியலாம்.” எனவும் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.

பெருந்தோட்டப்பகுதிகளில் ஒன்றரை லட்சம் வீடுகள் தேவைப்படுகின்றன. பாதீட்டு ஒதுக்கீட்டின் பிரகாரம் வருடமொன்றுக்கு 2 ஆயிரம் வீடுகளை அமைத்தாலும் இப்பிரச்சினையை தீர்க்க முடியாது.

தமக்கு வீடு வேண்டும் என்ற சிந்தனை மக்கள் மத்தியில் உள்ளது. எனவே, அவர்கள் வாழ்வதற்குரிய காணி உரிமையை வழங்கினால் வீடில்லாப் பிரச்சினையை தீர்ப்பதற்கு வழி பிறக்கும்.” எனவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,

“ பேரிடர் நிலையால் ஏற்பட்ட பாதிப்புகளை தீர்ப்பதற்கு தற்போது முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால பிரச்சினைகள் நாம் விரிவாக பேசுவோம்.
ஒருவருக்கு 6 பேர்ச்சஸ் என வைத்தாலும் ஒன்றரை லட்சம் பேருக்கு 9 லட்சம் பேர்ச்சஸ் காணி தேவைப்படும். இதனை எவ்வாறு பெற்றுக்கொள்வது,
தொழில்நுட்ப காரணி, பாதுகாப்பான இடம் என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு உங்களை (மலையக பிரதிநிதிகளை) சந்தித்து கலந்துரையாட உள்ளேன்.

தேசிய வேலைத்திட்டமொன்றை அமைத்து இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு முயற்சிப்போம். ” என்றார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க.
அதன்பின்னர் கருத்து வெளியிட்ட ஜீவன் தொண்டமான் எம்.பி.,

“ மக்களுக்கு வழங்குவதற்குரிய காணி வளம் உள்ளது. மக்கள் தற்போது வாழும் லயன் அறைகள் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை வழங்கினாலேயே அவர்களுக்கு வீடுகளை அமைத்துக்கொள்ள முடியும். இது தொடர்பில் அமைச்சரவை தீர்மானமொன்று 2024 இல் நிறைவேற்றப்பட்டது. அதனை அமுல்படுத்தலாம்.” என்றார்.

நுவரெலியா மாவட்டத்தில் சேதமடைந்த வீதிகளை புனரமைப்பது தொடர்பில் ஆராய்வு!

 

நுவரெலியா மாவட்டத்தில் வீதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்வது மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் இன்று (08) காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

டித்வா சூறாவளியால் நுவரெலியா மாவட்டத்தில் சேதமடைந்த அனைத்து வீதிகள் மற்றும் அவற்றை புனரமைக்க எடுக்கும் காலம் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

சாதாரண பழுதுபார்ப்பு மேற்கொண்டு திறக்க முடியாத வீதிகள் குறித்து அதிகாரிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி, இது தொடர்பாக அறிக்கையை வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரினார்.

நுவரெலியா மாவட்டத்தில் சில வீதிகள் மற்றும் பாலங்களை அமைக்கும் போது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைகளை கவனத்திற் கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.

அதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் சேதமடைந்த வீதிகள், வடிகாண்கள் மற்றும் பாதுகாப்பு மதில் சுவர்களை புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து புனரமைப்பு நடவடிக்கைகளையும் நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

30 பள்ளிக் குழந்தைகளைக் காப்பாற்ற விஷ பாம்புடன் போராடி உயிர்நீத்த தெரு நாய்

0
பள்​ளிக் குழந்​தைகளை காப்​பாற்ற விஷ பாம்​புடன் போராடி உயிர்​நீத்த தெரு நாய்க்கு கிராம மக்​கள் அஞ்​சலி செலுத்தி அடக்​கம் செய்​தனர். தெரு நாய்​கள் தொல்லை அதி​கரித்து வரு​வ​தாக ஊடகங்​களில் அடிக்​கடி செய்தி வரு​கின்​றன. தெரு...

சீரற்ற காலநிலை: நுவரெலியாவில் 93 குடும்பங்கள் பாதிப்பு!

0
நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் 4 மாவட்டங்களில் 146 குடும்பங்களைச் சேர்ந்த 678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (23) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில்...

இஸ்ரேல் தாக்குதலில் ஊடகவியலாளர் பலி: லெபனான் கண்டனம்!

0
தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர் அமல் கலீல் கொல்லப்பட்டதை லெபனான் அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது. மேற்படி தாக்குதலில் மற்றொரு ஊடகவியலாளர் காயமடைந்துள்ளார். இஸ்ரேல் வேண்டுமென்றே ஊடகவியலாளர்களையும், சுகாதார சேவையாளர்களையும் குறிவைத்ததாக லெபனான்...