Home Blog Page 183

எங்கள் மக்களுக்கு காணி உரிமையை வழங்குங்கள்: ஜனாதிபதியிடம் ஜீவன் நேரில் கோரிக்கை!

 

மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தால், வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய வழிமுறை பிறக்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம், இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போதே ஜீவன் தொண்டமான் எம்.பி. மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.

“சீர்திருத்தம், வீடமைப்பு தொடர்பில் பேசப்பட்டாலும், மலையகத்தில் பெரும் பிரச்சினையொன்று உள்ளது. அதாவது தோட்டத்தில் வேலைசெய்தால்தான் அடையாளம், சலுகைகள் கிடைக்கப்பெறுகின்றன. தோட்டத்தில் வேலை செய்யாத ஏனையோருக்கு எவ்வித அதிகாரமும் கிடைக்கப்பெறவில்லை. இந்த சிஸ்டம் மாற வேண்டும். இது பற்றி மக்களிடம் நேரில் சென்று கேட்டறியலாம்.” எனவும் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.

பெருந்தோட்டப்பகுதிகளில் ஒன்றரை லட்சம் வீடுகள் தேவைப்படுகின்றன. பாதீட்டு ஒதுக்கீட்டின் பிரகாரம் வருடமொன்றுக்கு 2 ஆயிரம் வீடுகளை அமைத்தாலும் இப்பிரச்சினையை தீர்க்க முடியாது.

தமக்கு வீடு வேண்டும் என்ற சிந்தனை மக்கள் மத்தியில் உள்ளது. எனவே, அவர்கள் வாழ்வதற்குரிய காணி உரிமையை வழங்கினால் வீடில்லாப் பிரச்சினையை தீர்ப்பதற்கு வழி பிறக்கும்.” எனவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,

“ பேரிடர் நிலையால் ஏற்பட்ட பாதிப்புகளை தீர்ப்பதற்கு தற்போது முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால பிரச்சினைகள் நாம் விரிவாக பேசுவோம்.
ஒருவருக்கு 6 பேர்ச்சஸ் என வைத்தாலும் ஒன்றரை லட்சம் பேருக்கு 9 லட்சம் பேர்ச்சஸ் காணி தேவைப்படும். இதனை எவ்வாறு பெற்றுக்கொள்வது,
தொழில்நுட்ப காரணி, பாதுகாப்பான இடம் என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு உங்களை (மலையக பிரதிநிதிகளை) சந்தித்து கலந்துரையாட உள்ளேன்.

தேசிய வேலைத்திட்டமொன்றை அமைத்து இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு முயற்சிப்போம். ” என்றார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க.
அதன்பின்னர் கருத்து வெளியிட்ட ஜீவன் தொண்டமான் எம்.பி.,

“ மக்களுக்கு வழங்குவதற்குரிய காணி வளம் உள்ளது. மக்கள் தற்போது வாழும் லயன் அறைகள் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை வழங்கினாலேயே அவர்களுக்கு வீடுகளை அமைத்துக்கொள்ள முடியும். இது தொடர்பில் அமைச்சரவை தீர்மானமொன்று 2024 இல் நிறைவேற்றப்பட்டது. அதனை அமுல்படுத்தலாம்.” என்றார்.

நுவரெலியா மாவட்டத்தில் சேதமடைந்த வீதிகளை புனரமைப்பது தொடர்பில் ஆராய்வு!

 

நுவரெலியா மாவட்டத்தில் வீதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்வது மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் இன்று (08) காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

டித்வா சூறாவளியால் நுவரெலியா மாவட்டத்தில் சேதமடைந்த அனைத்து வீதிகள் மற்றும் அவற்றை புனரமைக்க எடுக்கும் காலம் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

சாதாரண பழுதுபார்ப்பு மேற்கொண்டு திறக்க முடியாத வீதிகள் குறித்து அதிகாரிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி, இது தொடர்பாக அறிக்கையை வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரினார்.

நுவரெலியா மாவட்டத்தில் சில வீதிகள் மற்றும் பாலங்களை அமைக்கும் போது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைகளை கவனத்திற் கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.

அதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் சேதமடைந்த வீதிகள், வடிகாண்கள் மற்றும் பாதுகாப்பு மதில் சுவர்களை புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து புனரமைப்பு நடவடிக்கைகளையும் நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார்.

புடின் வந்துசென்ற நிலையில் உக்ரைன் ஜனாதிபதியும் இந்தியா விஜயம்!

உக்ரைன் ஜனாதிபதி ஜலன்ஸ்கி எதிர்வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.

கடந்த 2022-ம் ஆண்டு பெப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போருக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின், கடந்த வாரம் இந்தியா வந்தபோது உக்ரைன் போர் நிறுத்தம் குறித்தும் பிரதமர் மோடி கலந்துரையாடி இருந்தார்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எதிர்வரும் ஜனவரி மாதம் டெல்லி விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அவரது பயண திகதியை உறுதி செய்ய இந்திய, உக்ரைன் வெளியுறவுத் துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கம்போடியாமீது தாய்லாந்து வான்வழி தாக்குதல்!

 

கம்போடியாமீது தாய்லாந்து இன்று வான்வழித் தாக்குதல்களை தொடங்கியது. இந்த மோதலில் தாய்லாந்து வீரர் ஒருவர் கொல்லப்பட்டார், நான்கு பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தாய்லாந்து ராணுவ செய்தித் தொடர்பாளர் விந்தாய் சுவாரி வெளியிட்ட அறிக்கையில்,

“உபோன் ரட்சதானி மாகாணத்தில் இன்று அதிகாலை கம்போடிய துருப்புக்கள் தாய்லாந்து படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதன் காரணமாக ஒரு தாய்லாந்து வீரர் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் ராணுவத்துக்கு தகவல்கள் கிடைத்தன.
கம்போடியப் படைகளின் தாக்குதல்களை அடக்குவதற்காக தாய்லாந்து ராணுவம் விமானங்கள் மூலம் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து கம்போடியாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாலி சோச்சியாட்டா கருத்து வெளியிடுகையில்,

“திங்கள்கிழமை அதிகாலையில் பிரியா விஹார் மற்றும் ஒட்டார் மீஞ்சே ஆகிய எல்லை மாகாணங்களில் கம்போடிய படைகள் மீது தாய்லாந்து படைகள் தாக்குதல் நடத்தியது.

தாய்லாந்து ராணுவம் தமோன் தாம் கோயில் மற்றும் பிரியா விஹார் கோயிலுக்கு அருகிலுள்ள பிற பகுதிகளிலும் டாங்கிகள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. ஆனால் கம்போடியா இதற்கு பதிலடி கொடுக்கவில்லை.” எனத் தெரிவித்தார்.

தாய்லாந்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், இன்றைய மோதலுக்குப் பிறகு கம்போடியாவின் எல்லையில் உள்ள பகுதிகளிலிருந்து தாய்லாந்தில் சுமார் 35,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகக் கூறியது.

கடந்த ஜூலை மாதம் தாய்லாந்து மற்றும் கம்போடிய நாடுகளுக்கு இடையே நடந்த மோதல்களில் 48 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 3,00,000 பேர் தற்காலிகமாக இடம்பெயர்ந்தனர். அமெரிக்க ஜனாதிபதியின் முயற்சியால் போர் நிறுத்தம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

ஆஸ்திரேலிய தூதுவரை சந்தித்தார் எதிர்க்கட்சி தலைவர்!

 

டித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் உட்கட்டமைப்பு வசதிகளை மீளமைத்து, மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு ஆஸ்திரேலியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரை இன்று சந்தித்தவேளையிலேயே இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரை இன்று சந்தித்து பேச்சு நடத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் இரு தரப்பினரும் இங்கு பல கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

புயலால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக தொழில் முயற்சிகள் அழிந்து போனமை, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுப் போனமை, பல உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அவை அழிவுன்டமைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது தூதுவரிடம் எடுத்துரைத்தார்.

உட்கட்டமைப்பு வசதிகளை மீளமைத்து, மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்குத் தேவையான உதவிகளை பெற்றுத் தருமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த இக்கட்டான கட்டத்தில், ஆஸ்திரேலிய , இலங்கைக்கு வழங்கும் உதவிகள் மற்றும் நிவாரண சேவைகளுக்காக அனைத்து இலங்கையர்களின் சார்பாகவும் எதிர்க்கட்சி தலைவர் தூதுவரிடம் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

விஷமிகளால் மீண்டும் உடைக்கப்பட்ட ‘அணையா விளக்கு’ நினைவுத் தூபி!

 

‘யாழ்ப்பாணம் வரவேற்கின்றது’ என்ற வளைவுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ‘அணையா விளக்கு’ போராட்ட நினைவுத் தூபி இனந்தெரியாத விஷமிகளால் நேற்று மீண்டும் உடைக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயங்களுக்குச் சர்வதேச நீதி கோரி யாழ். செம்மணிப் பகுதியில் ‘அணையா விளக்கு’ போராட்டம் ‘மக்கள் செயல்’ எனப்படும் தன்னார்வ இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் தினங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தின் நினைவாக அந்த இடத்தில் ‘அணையா விளக்கு’ தூபி அமைக்கப்பட்டது.

இந்த ‘அணையா விளக்கு’ தூபி கடந்த ஒக்டோபர் மாதமும் அடித்து உடைக்கப்பட்டது. உடனடியாக இந்தத் தூபி மீண்டும் புனரமைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மீண்டும் ‘அணையா விளக்கு’ போராட்ட நினைவுத் தூபி விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் பாலத்தை புனரமைக்கும் இந்திய இராணுவ அதிகாரிகள்

 

கிளிநொச்சியில் பாலத்தை புனரமைக்கும் இந்திய இராணுவ அதிகாரிகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் டிட்வா புயலினால் சேதம் அடைந்துள்ள பாலத்தைப் புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

புயலினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அத்தியாவசிய உதவிப் பொருட்களை வழங்குவதுடன், அவசர மருத்துவ மற்றும் உட்கட்டுமான வசதிகளையும் இந்தியா மேற்கொண்டுள்ளது.

பரந்தன்- முல்லைத்தீவு வீதியில் 11 ஆவது கிலோ மீற்றரில் உள்ள பாலத்தை புனரமைக்கும் பணிகளுக்காக இந்திய இராணுவ அதிகாரிகள் குழுவொன்று கிளிநொச்சி வந்துள்ளது.

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள தற்காலிக இரும்புப் பாலத்தைப் பொருத்தும் பணிகளில் இந்திய இராணுவ பொறியியல் படைப்பிரிவின் அதிகாரிகள், இலங்கை இராணுவ பொறியியல் பிரிவுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

தமிழக அரசின் உதவிப்பொருட்கள் கையளிப்பு

 

இலங்கை மக்களுக்காக, தமிழக அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட 300 மெட்ரிக் தொன் அவசர நிவாரணப் பொருட்கள் நேற்று அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.

தமிழக அரசினால் அனுப்பப்பட்ட 1000 தொன் நிவாரணப் பொருட்களில் ஒரு பகுதியான 300 மெட்ரிக் தொன் பொருட்கள், இந்திய கடற்படையின் 3 தரையிறங்கு கலங்கள் மூலம், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

மேலும் 700 தொன் உதவிப் பொருட்களை ஏற்றிய மற்றொரு கப்பல் இன்று காலை திருகோணமலையை வந்தடையவுள்ளது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பொருட்களை, இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் ஒப்படைத்தார்.

21 லட்சம் பேர் பாதிப்பு: 80 ஆயிரம் வீடுகள் சேதம்!

டிட்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால்  இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

190  பேர் காணாமல்போயுள்ளனர்.

4 ஆயிரத்து 517 வீடுகள் முழமையாகவும், 76 ஆயிரத்து 66 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

27 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலையால் 6 லட்சத்து 11  ஆயிரத்து குடும்பங்களைச் சேர்ந்த 21 லட்சத்து 79 ஆயிரத்து 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மரக்கறி விலைப்பட்டியல் (8.12.2025)

மரக்கறி விலைப்பட்டியல் (8.12.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (8) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் மாணவர்களுக்கான QR அடையாள அட்டை அறிமுகம்!

0
கண்டி மாவட்டம், கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில், மாணவர்களுக்கான QR முறைமையிலான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (23) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நவீன முறையின்...

ஹார்முஸ் நீரிணையில் கட்டணம் வசூலித்தது ஈரான்: அமெரிக்கா சீற்றம்!

0
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்குப் ஈரான் புதிய சுங்கக் கட்டணத்தை விதித்துள்ளதாகவும், அதிலிருந்து பெறப்பட்ட முதல் வருவாய் அந்நாட்டின் மத்திய வங்கியில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் துணை...

30 பள்ளிக் குழந்தைகளைக் காப்பாற்ற விஷ பாம்புடன் போராடி உயிர்நீத்த தெரு நாய்

0
பள்​ளிக் குழந்​தைகளை காப்​பாற்ற விஷ பாம்​புடன் போராடி உயிர்​நீத்த தெரு நாய்க்கு கிராம மக்​கள் அஞ்​சலி செலுத்தி அடக்​கம் செய்​தனர். தெரு நாய்​கள் தொல்லை அதி​கரித்து வரு​வ​தாக ஊடகங்​களில் அடிக்​கடி செய்தி வரு​கின்​றன. தெரு...