Home Blog Page 184

பேரிடர்: கண்டி மாவட்டத்தில் 35 மாணவர்கள்: 10 ஆசிரியர்கள் பலி!

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் கண்டி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அம்மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவால் 35 மாணவர்களும், 10 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது.

அத்துடன், கண்டி மாவட்டத்தில் 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சிங்கள நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கண்டி மாவட்டத்தில் மொத்தமாக 232 பேர் உயிரிழந்துள்ளனர். 81 பேர் காணாமல்போயுள்ளனர்.

ஆயிரத்து 800 வீடுகள் முழுமையாகவும், 13 ஆயிரத்து 44 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

பேரிடரால் கண்டி மாவட்டத்தில் 51 ஆயிரத்து 98 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளன.

 

யாழ். பண்ணைக் கடலில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி!

யாழ்ப்பாணம் – பண்ணை கடல் பகுதியில் நீரில் மூழ்கி இரண்டு பேர் நேற்று மாலை உயிரிழந்தனர்.

கொக்குவில் – ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த
ஜெயகுமார் ஜெனீசன், உதயராஜா கஜந்தன் என்ற 17 வயதான இருவரே உயிரிழந்தனர்.

பண்ணை கடலில் நீந்த சென்ற நால்வர் சுழியில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளனர். இதனை பார்த்த அப்பகுதியில் நின்றவர்கள் பொலிஸாரின் உதவியுடன் நால்வரையும் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதன்போது இரண்டு பேர் உயிரிழந்ததுடன் இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொருளாதார முடிவுகளை எடுப்பதில் துல்லியமான தரவுகள் மிக முக்கியமானது

பொருளாதார முடிவுகளை எடுப்பதில் துல்லியமான தரவுகள் மிக முக்கியமானது

பயிர் சேதங்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்கி, விவசாயத்தை மீண்டும் ஆரம்பிக்க மிகவும் துல்லியமான தரவுகளை வேறுபடுத்தி அடையாளம் காணவும்

பொதுமக்களுக்கு தேவையான அவசர சேவைகளை வழங்குவதில் அனைத்து நிறுவனங்களுக்கிடையிலும் தொடர்ச்சியான தொடர்பைப் பேணுவது அவசியம்

தம்புள்ளை மாவட்ட ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கும் புதிய இடத்திற்கு மாற்றுவதற்குமான திட்டத்தை அவசரமாக சமர்ப்பிக்கவும்

– ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை

பொருளாதார முடிவுகளை எடுப்பதில் துல்லியமான தரவுகள் மிகவும் முக்கியம் என்றும், எனவே எப்போதும் துல்லியமான தரவுகளை வழங்குவது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

அனர்த்தத்தால் சேதமடைந்த பயிர் நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் பணியை டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் முடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, இழப்பீட்டுத் தொகையை மிகவும் தகுதியானவர்களுக்கு வழங்கக்கூடிய வகையில் துல்லியமான தரவுகளை வேறுபடுத்திக் கண்டறியுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதற்கு முன்னர், விவசாயத் திணைக்களம் நாட்டில் அரிசி மேலதிகக் கையிருப்பு இருப்பதாக தரவுகளை வழங்கிய போதிலும், அரிசி பற்றாக்குறைக்கு முகங்கொடுக்க நேர்ந்ததை ஜனாதிபதி இங்கு நினைவு கூர்ந்தார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாத்தளை மாவட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து இன்று (06) மாத்தளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களை சுட்டிக்காட்டினார்.

மாத்தளை மாவட்டத்தின் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளில், 5,501 குடும்பங்களைச் சேர்ந்த 11,804 பேர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தில் இயங்கும் 44 பாதுகாப்பு மையங்களில் 4,113 பேர் தங்கியுள்ளனர். மேலும்,119 வீடுகள் முழுமையாகவும், 2,618 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

மாவட்டத்தில் நெடுஞ்சாலைகள், மின்சாரம், நீர் வழங்கல், தொடர்பாடல் மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றை புனரமைத்தல் மற்றும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை மீண்டும் தொடங்குவதற்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றத்தை ஜனாதிபதி இதன்போது ஆராய்ந்தார்.

அனர்த்தம் காரணமாக மாவட்டத்தில் 16 பிரதான வீதிகள் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றில் 12 வீதிகள் புனரமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர். எஞ்சியுள்ள வீதிகளான வத்தேகம – கந்தேகெதர, உக்குவெல – எல்கடுவ, மொரகஹகந்த – வெல்லவல, மற்றும் ரத்தொட்ட – இலுக்கும்புர ஆகிய வீதிகளை அவசரமாக புனரமைத்து திறப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும், 38 மாகாண வீதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 17 பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன், அதில் 19 வீதிகளை முழுமையாகவும், 19 வீதிகளை பகுதியளவு திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அனர்த்த நிலைமை காரணமாக மாவட்டத்தில் 58 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை விரைவாக சீர்செய்து, சுமார் 92% மக்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதைகள் சேதமடைந்திருத்தல் உட்பட பல்வேறு சிக்கல்கள் காரணமாக தாமதமாகி உள்ள ரத்தொட்ட, அம்பன்கங்க, லக்கல, உக்குவெல, யடவத்த, பெல்லேபொல, மாத்தளை போன்ற பகுதிகளில் மின் இணைப்புகளை விரைவாக சீர்செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின்சார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

மாவட்டத்தில் தடைபட்ட நீர் விநியோகத்தை சீர்செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், பாதைகள் சேதமடைந்திருத்தல் காரணமாக சுமார் 500 குடும்பங்கள் ஒரு வாரமாக குடிநீர் இல்லாமல் இருப்பதும் இங்கு தெரியவந்தது. இந்த விடயம் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைந்து, தற்போதுள்ள தடைகளை நீக்கி, மக்களுக்கு உடனடியாக நீர் விநியோகத்தை வழங்குமாறு பணித்தார்.

மின்சாரம், நீர் அல்லது தொடர்பாடல் போன்ற எந்தவொரு வசதியையும் பொதுமக்களுக்கு வழங்கும்போது பிரதான அலுவலகத்திற்கு தகவல்களை அனுப்பி மௌனம் காப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்வதன் மூலம் பொதுமக்களுக்கு தமது சேவைகளை உடனடியாக வழங்குவது அதிகாரிகளின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார்.

மாவட்டத்தின் தொடர்பாடல் கட்டமைப்பை சீர்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், இந்த வசதிகள் தேவைப்படும் பகுதிகளை முறையாகக் கண்டறிந்து அந்த சேவையை வழங்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாடல் சேவைகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களினதும் பொறுப்பாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

சேதமடைந்த சுகாதாரத் துறை மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகளை சீர்செய்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், தம்புள்ளை வைத்தியசாலையை வேறொரு இடத்தில் நிறுவி, அதனை அதிக வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையாக மேம்படுத்தும் பரிந்துரை குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, இதற்கான முறையான திட்டத்தையும், தேவையான நிதி ஒதுக்கீடுகள் குறித்த தகவல்களையும் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், மாவட்டத்தில் டிசம்பர் 16 ஆம் திகதி முடிந்தவரை பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்த ஜனாதிபதி, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மாணவர்களை அருகிலுள்ள பாடசாலைகளுக்குச் சென்று கல்வி கற்பதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறும் கல்வி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். இதன்போது, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளில் உள்ள பிள்ளைகளின் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

மாவட்டத்தில் சேதமடைந்த நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் மற்றும் நீர்த்தேக்கங்களை அவசரமாக புனரமைத்தல், சேதமடைந்த பயிர்ச் செய்கை மற்றும் கால்நடை பண்ணைகளை மீண்டும் தொடங்குதல் மற்றும் அனர்த்தம் காரணமாக நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகளை மீண்டும் தொடங்குதல் குறித்தும் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கமகெதர திசாநாயக்க, மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பி.எஸ்.ஜே. பியங்வில, தீப்தி வாசலகே, தினேஷ் ஹேமந்த உட்பட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய மாகாண சபைத் தலைவர் எல்.டி. நிமலசிறி உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, மாத்தளை மாவட்டச் செயலாளர் எல்.பி. மதநாயக்க உட்பட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாத்தளை மாவட்டத்தின் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சுனாமியை விட டிட்வா புயலினால் மூன்று மடங்கு இழப்பு

 

டிட்வா புயலினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு சுனாமியால் ஏற்பட்டதை விட மூன்று மடங்கு அதிகம் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி, தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலினால், கிட்டத்தட்ட 6 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இழப்பு ஏற்பட்டிருக்கும் என முதற்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இது ஒரு தோராயமான மதிப்பீடு மட்டுமே. பொருளாதார மீட்புத் திட்டத்தை வகுக்க சரியான பேரிடர் மதிப்பீடு பின்னர் மேற்கொள்ளப்படும்.

2004 ஆம் ஆண்டு சுனாமியினால் ஏற்பட்ட பொருளாதார சேதம் 1.5 முதல் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை மட்டுமேயாகும்.

ஆனால் இது சுனாமியால் ஏற்பட்ட சேதத்தை விட மூன்று மடங்கு அதிகம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மரக்கறி விலைப்பட்டியல் (7.12.2025)

மரக்கறி விலைப்பட்டியல் (7.12.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (7) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

இலங்கை மீண்டெழும் திட்டம் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கம்!

இலங்கை மீண்டெழும் திட்டம் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கம்!

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரிடர்களில் இருந்து மீண்டு வருவதற்குரிய தேசிய மீட்சி மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்பில் இராஜதந்திர சமூகத்துக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் தலைமையிலேயே இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

அவசரகால சூழ்நிலையின்போது வழங்கப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் உதவிக்காகவும் அனைத்து இராஜதந்திரத் தூதரகங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் ஏனைய கூட்டாளர்களுக்கு பிரதமர் அமரசூரிய இதன்போது நன்றி தெரிவித்தார்.

இலங்கை இப்போது அவசரகால பதிலளிப்பு கட்டத்திலிருந்து, மீட்பு மற்றும் மறுசீரமைப்பு கட்டத்திற்கு நகர்ந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

சமூகங்கள் விரைவில் நிலைபேறான தன்மைக்கு திரும்புவதை உறுதி செய்வதற்காக பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் மின்சாரம், நீர் வழங்கல், போக்குவரத்து இணைப்புகள், சுகாதார வசதிகள் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை முழுமையாக மீட்டெடுப்பது அரசாங்கத்தின் உடனடி முன்னுரிமைகளில் உள்ளடங்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

அபிவிருத்திக் கூட்டாளர்களின் உதவியுடன் விரிவான தேவைகளுக்கான மதிப்பீடு நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் முடிவுகள் புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்புத் திட்டங்களை வழிநடத்தும் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நேரத்தில் சர்வதேச சமூகம் இலங்கைக்கு வழங்கக்கூடிய வலுவான ஆதரவானது, நாட்டை உல்லாசப்பயணத்தின் தளமாகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்காகவே என்று சுற்றுலாத் துறை பங்குதாரர்கள் வலியுறுத்தியதுடன், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு, அடிப்படைத்தளத்தில் ஏற்படும் முன்னேற்றங்களுக்கு ஏற்ப பயண ஆலோசனைகளை தொடர்ந்து மதிப்பாய்வு செய்வதை ஊக்குவிக்குமாறு இராஜதந்திரச் சமூகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

அமர்வில் கலந்து கொண்ட இராஜதந்திரப் சமூகம் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் இலங்கையுடனான தங்கள் ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், நாட்டின் மீட்சி மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் மற்றும் திட்டமிடப்பட்ட ஆதரவு நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.

இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது தமிழகம்!

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது.

இதற்;கமைய 950 டொன் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களுடன்கூடிய கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குறித்த கப்பல் இன்று காலை வழியனுப்பி வைக்கப்பட்டது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரதின் ஆலோசனையின் படி, சென்னைதூதுவராக உள்ள டாக்டர் கணேசநாதன் கேதீஸ்வரன் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இன்று (06) காலை இந்த நிவாரணக் கொடையினை முதல்வர் ஸ்டாலின், உத்தியோகபூர்வமாக வைத்தியர் கணேசிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசின் அதிகாரிகளும், சென்னை இலங்கை துணைதூதரக அதிகாரிகளும் பங்கேற்றனர்

கண்டி மாவட்டத்தில் 1,881 வீடுகள் சேதம்: 161,140 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 51 ஆயிரத்து 98 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

232 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். 81 பேர் காணாமல்போயுள்ளனர்.

வெள்ளம், மண்சரிவால் ஆயிரத்து 800 வீடுகள் முழமையாகவும், 13 ஆயிரத்து 44 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

8 ஆயிரத்து 992 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்து 670 பேர் இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 

நோபல் பரிசுக்காக ஏங்கிய ட்ரம்புக்கு அமைதிக்கான பரிசு வழங்கி வைப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு, சர்வதேச கால்பந்து சம்மேளனம்   அமைதிக்கான பரிசை வழங்கி கௌரவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போர் உள்பட 8 போர்களை நிறுத்தியதாக தொடர்ந்து கூறி வருகிறார்.

இதற்காக தனக்கு அமை திக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கிடைக்கும் என்று டிரம்ப் எதிர்பார்த்தார். ஆனால் அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவர் மரியாவுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் டிரம்புக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா), அமைதிக்கான பரிசை வழங்கி உள்ளது.

அடுத்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதங்களில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்கிறது.

இதற்கான போட்டி அட்டவணை வெளியீடு நிகழ்ச்சி வாஷிங்டனில் நடந்தது. இதில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்ட அமைதிக்கான பரிசு வழங்கப்பட்டது.

மக்களை ஒன்றிணைத்து எதிர்கால சந்ததியினருக்கு நம்பிக்கையை கொண்டு வரும் தனிநபர்களை அங்கீகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட விருதாகும்.

இந்த விருதை டிரம்ப்புக்கு சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் கியானி இன்பான்டினோ வழங்கினார். அப்போது டிரம்புக்கு தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டது. தங்க கோப்பையும் வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக இன்பான்டினோ             கருத்து வெளியிடுகையில்,

“ மக்கள் மீது அக்கறை கொண்ட தலைவர் டிரம்ப். உலகம் முழுவதும் அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இது உங்கள் அமைதி பரிசு.” என்று குறிப்பிட்டார்.

தனக்கு அமைதிக்கான பரிசு வழங்கப்பட்டதற்கு டிரம்ப் நன்றி தெரிவித்து கொண்டார்.

 

சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்தவும்: முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அழைப்பு!

இலங்கையை மீட்பதற்காக சர்வதேச கொடையாளர் மாநாட்டை அடுத்த இரு வாரங்களுக்குள் நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

“ இலங்கையில் பேரிடர் ஏற்பட்டுள்ளதால் சர்வதேசத்தின் பார்வை திரும்பியுள்ளது. எனவே, சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட உலக நாடுகளின் தலைவர்களை இதற்கு அழைக்கலாம். அவர்கள் நிச்சயம் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் ஜப்பான், ஐக்கிய அரபு அமீகரம் உள்ளிட்ட நாடுகள்கூட இதற்குரிய ஏற்பாடுகளை செய்வதற்கு உதவி வழங்கக்கூடும்.
இந்த நெருக்கடி நிலைமையை அரசாங்கத்தால் தனித்து எதிர்கொள்ள முடியாது. எனவே, முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும்.” என்றார் ரவூப் ஹக்கீம்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் மாணவர்களுக்கான QR அடையாள அட்டை அறிமுகம்!

0
கண்டி மாவட்டம், கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில், மாணவர்களுக்கான QR முறைமையிலான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (23) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நவீன முறையின்...

ஹார்முஸ் நீரிணையில் கட்டணம் வசூலித்தது ஈரான்: அமெரிக்கா சீற்றம்!

0
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்குப் ஈரான் புதிய சுங்கக் கட்டணத்தை விதித்துள்ளதாகவும், அதிலிருந்து பெறப்பட்ட முதல் வருவாய் அந்நாட்டின் மத்திய வங்கியில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் துணை...

30 பள்ளிக் குழந்தைகளைக் காப்பாற்ற விஷ பாம்புடன் போராடி உயிர்நீத்த தெரு நாய்

0
பள்​ளிக் குழந்​தைகளை காப்​பாற்ற விஷ பாம்​புடன் போராடி உயிர்​நீத்த தெரு நாய்க்கு கிராம மக்​கள் அஞ்​சலி செலுத்தி அடக்​கம் செய்​தனர். தெரு நாய்​கள் தொல்லை அதி​கரித்து வரு​வ​தாக ஊடகங்​களில் அடிக்​கடி செய்தி வரு​கின்​றன. தெரு...