Home Blog Page 185

சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்தவும்: முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அழைப்பு!

இலங்கையை மீட்பதற்காக சர்வதேச கொடையாளர் மாநாட்டை அடுத்த இரு வாரங்களுக்குள் நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

“ இலங்கையில் பேரிடர் ஏற்பட்டுள்ளதால் சர்வதேசத்தின் பார்வை திரும்பியுள்ளது. எனவே, சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட உலக நாடுகளின் தலைவர்களை இதற்கு அழைக்கலாம். அவர்கள் நிச்சயம் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் ஜப்பான், ஐக்கிய அரபு அமீகரம் உள்ளிட்ட நாடுகள்கூட இதற்குரிய ஏற்பாடுகளை செய்வதற்கு உதவி வழங்கக்கூடும்.
இந்த நெருக்கடி நிலைமையை அரசாங்கத்தால் தனித்து எதிர்கொள்ள முடியாது. எனவே, முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும்.” என்றார் ரவூப் ஹக்கீம்.

இந்தியா – ரஷ்யா இடையே 16 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

பிரதமர் மோடியை ரஷ்ய ஜனாதிபதி புடின் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது பொருளாதாரம், மனித வளம், உரம், கப்பல் கட்டுமானம் தொடர்பாக 16 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்திய, ரஷ்ய வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தார்.

அன்றிரவு ரஷ்ய ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி சிறப்பு விருந்து அளித்தார். அப்போது ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட பகவத் கீதையை புதினுக்கு அவர் பரிசாக வழங்கினார்.

இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையில் புதினுக்கு நேற்று காலை 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன்பிறகு ஜனாதிபதி விளாடிமிர் புடின், காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி விளாடிமிர் புடினும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது 16 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

குறிப்பாக, இந்தியா – ரஷ்யா பொருளாதார ஒத்துழைப்பு திட்டம் 2030 தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி இரு நாடுகளும் இணைந்து கூட்டு தயாரிப்புகளில் ஈடுபட உள்ளன.

பேரிடரால் மன்னார் மாவட்டத்தில் மட்டும்26 ஆயிரம் கால்நடைகள் உயிரிழப்பு

இயற்கை அனர்த்தம் காரணமாக வடக்கு மாகாணத்தில் மிக அதிக பாதிப்பை எதிர்கொண்ட மன்னார் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 12 கால் நடைகள் உயிரிழந்துள்ளன என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உறுதி செய்துள்ளது.

40 வருட வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராத வெள்ளப் பாதிப்பை எதிர்கொண்ட மன்னார் மாவட்டத்தில் ஒட்டுமொத்த மக்களும் பாதிப்படைந்துள்ளனர். இதேபோன்று மாவட்டத்தின் பொருளாதாரமாக விளங்கும் விவசாயம், கால்நடை ஆகிய இரு துறைகளும் அழிவடைந்துள்ளன.

இதில் 16 ஆயிரத்து 386 மாடுகளும், 9 ஆயிரத்து 628 ஆடுகளும் என மொத்தம் 26 ஆயிரத்து 12 கால்நடைகள் அழிவடைந்துள்ளமையை மாவட்ட அனர்த்த முகாத்துவப் பிரிவு உறுதி செய்துள்ளது.

இந்தக் கால்நடைகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக 31 ஆயிரத்து 264 கோழிகளும் வெள்ளத்தில் அகப்பட்டு அள்ளுண்டும், உயிரிழந்தும் உள்ளன எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த கால்நடைகள், கோழிகள் என்பனவற்றுடன் அவற்றின் தங்குமிடங்கள், பண்ணைகள் மட்டுமன்றி அவற்றுக்கான தீவனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டமையால் மன்னார் மாவட்டத்துக்கு ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும் அதிக பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (6.12.2025)

மரக்கறி விலைப்பட்டியல் (6.12.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (6) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

நெருக்கடி நிலை குறித்து வதந்திகளைப் பரப்பாதீர்: எதிரணியிடம் கோரிக்கை

நெருக்கடியான சூழ்நிலையில் போலி தகவல்களைப் பரப்பும் சந்தர்ப்பவாத அரசியலை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“போலி தகவல்களை பரப்பாமல் இருப்பதுதான் தற்போதைய சூழ்நிலையில் எதிரணிகள் செய்யும் சிறந்த சேவையாக இருக்கும். அதேபோல சந்தர்ப்பவாத அரசியலை கைவிட்டுவிட்டு நாட்டை மீட்க ஒன்றுபட வேண்டும்.

அத்துடன், அனர்த்தங்களால் பாதிக்கப்ப
ட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.

ஆபத்தான பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களை அங்கு குடியமர்த்தாமல் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.” எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த கூறினார்.

அவசரகால சட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை!

மக்களை பாதுகாப்பதற்காகவே அவசரகால சட்டம் பயன்படுத்தப்பட்டது. மாறாக மக்களை ஒடுக்குவதற்கு அது பயன்படுத்தப்படவில்லை. அரசமைப்பைமீறும் வகையில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்று  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தைத் தயாரிப்பது அனைத்து அமைச்சுகளினதும், அரச திணைக்களங்களினதும் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களினதும் கடமை ஆகும். எனினும், அத்தகைய திட்டம் எதுவும் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. அதன்படி, இந்த நேரத்தில் அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் செயல்படுதல் பலவீனமாக உள்ளது என்றும், இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள முடியாது என்றும் நாங்கள் நினைத்தோம்.

பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் இரண்டாவது அதிகாரத்தின் கீழ் செயற்படுவதே மிகவும் வலுவானது. அதனால்தான் எதிர்க்கட்சி அவசர கால சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரியது. அதனால்தான் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தோம்.

ஏனென்றால் இது போன்ற ஒரு அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க சாதாரண சட்டம் மாத்திரம் போதாது. இது போன்ற ஒரு அனர்த்தத்தில், சாதாரண சட்டத்தை விட உயர்ந்த சட்டம் நமக்குத் தேவை. அதன்படிதான், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தை நியமிக்க முடியும்.அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேவையான உபகரணங்கள் மற்றம் அதிகாரிகளை ஏனைய இடங்களுக்கு அனுப்ப முடியும்.” எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

அதன்படி, மிகவும் பொருத்தமான சட்டமூலம் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் என்று நாங்கள் முடிவு செய்தோம். எதிர்க்கட்சிகளிடமிருந்து கிடைத்த ஆதரவிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

ஆனால், இந்தப் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை மீற மாட்டோம், என்னையோ அல்லது எங்கள் அமைச்சர்களையோ விமர்சிப்பதைப் பற்றி நாங்கள் கவனத்தில் கொள்ள மாட்டோம்.அவதூறுகளைப் பற்றி பேசவே தேவையில்லை. அவற்றுக்கு சாதாரண சட்டங்கள் உள்ளன.

ஆனால் மக்களை பயமுறுத்தவும்,தவறாக வழிநடத்தவும்,அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் மோதல் சூழ்நிலையை உருவாக்க எவரேனும் முயற்சித்தால், அது இந்த அனர்த்தத்திரிலிருந்து மீள்வதற்கான திட்டத்தைத் தடுத்தால், அந்த விடயத்தில் மாத்திரமே நாம் இந்தச் சட்டங்களைப் பயன்படுத்துவோம்.” எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கம்பளையில் 1000 பேர் இறந்ததாக ஒரு எம்.பி. கூறினார்.நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்ற பெயரில் அவர்கள் இங்கே கூறினாலும், வெளியே சென்று அவ்வாறு கூறினால், வழக்குத் தொடுப்பார்கள். அவ்வாறு கூற முடியாது. கம்பளையில் முஸ்லிம்களே பெரும்பான்மையானவர்கள். அவர்கள் தங்களுக்கு கவனக் குறைவு இருப்பதாகவே நினைக்கிறார்கள். அவற்றுக்கு என்றால் இந்தச் சட்டம் பயன்படுத்தப்படும்.” என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

பட்ஜட் நிறைவேற்றம்: ஆதரவாக வாக்களித்த ஜீவனுக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) பாராளுமன்றத்தில் இன்று (05) மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 07.30 மணிக்கு ஆரம்பமானதுடன், இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது.

அத்துடன், இருவர் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தனர். அதற்கமைய, 2026 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 157 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

2026 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது ‘வரவுசெலவுத்திட்ட உரை’ நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் கடந்த நவம்பர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நவம்பர் 08ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை 06 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இடம்பெற்றது. அதற்கமைய, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு நவம்பர் 14 ஆம் திகதி 118 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னர் நவம்பர் 15 ஆம் திகதி முதல் இன்று (05) வரை ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழு நிலை விவாதம் 14 நாட்கள் இடம்பெற்றன. 2026 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழுநிலை விவாதம் 17 நாட்கள் இடம்பெறவிருந்ததுடன், சீரற்ற காலநிலையினால் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக விவாத நாட்கள் இவ்வாறு 14 நாட்களாகக் குறைக்கப்பட்டன.

அந்த நிலையில், கடந்த சில நாட்களில் குழுநிலையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த ஒரு சில அமைச்சுக்களுக்கான செலவுத்தலைப்புகள் மீது முன்னர் திட்டமிடப்பட்ட தினங்களில் விவாதம் மேற்கொள்ள முடியாமல் போனதால், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு மேலதிகமாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு என்பவற்றின் செலவுத்தலைப்புகளும் 2025.12.03 ஆம் திகதியும் இன்றும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.

மேலும், பாராளுமன்றத்தில் இன்று (05) நிறைவேற்றப்பட்ட 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79 வது உறுப்புரைக்கு அமைய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாக அமுலுக்கு வருகின்றது.

அதற்கு மேலதிகமாக, சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம், பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்கள் இன்று பாராளுமன்றத்தில் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டன.

அத்துடன், பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் என்பவற்றுக்கும் பாராளுமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக, மூன்று குறைநிரப்புத் தொகைகளும் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டன.

அதேவேளை, சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்குரிய வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் நல்லிணக்க சமிக்ஞையாக பாதீட்டுக்கு ஆதரவாக ஜீவன் தொண்டமான் வாக்களித்தார்.

நெருக்கடியான சூழ்நிலையில் அனர்த்தத்திலும் அரசியல் நடத்தாமல், மக்கள் நலன்கருதி எதிரணியில் இருந்து பாதீட்டை ஆதரித்த ஜீவன் தொண்டமானுக்கு, மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். சமூகவலைத்தளங்களிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுவருகின்றது.

 

அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண விபரம்…!

🛑அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை சுத்தம் செய்வதற்கு 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு…!

🛑மீள்குடியேற்றத்துக்குரிய அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு 50 ஆயிரம் ரூபா. ( வீட்டு உரித்து கருத்தில் கொள்ளப்படமாட்டாது)

🛑முற்றாக சேதமடைந்துள்ள – மீள்குடியேற முடியாத நிலையில் உள்ள வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு 50 லட்சம் ரூபா ……..!
(வெள்ளம், மண்சரிவு இரண்டுக்கும் பொருந்தும்)

🛑அபாய வலயங்களுக்கு மீண்டும் செல்வதற்கு இடமளிக்கமாட்டோம். அரச காணி வழங்கப்படும். அரச காணி இல்லாவிட்டால் காணி வாங்குவதற்கு 50 லட்சம் ரூபாவரை கொடுப்பனவு வழங்கப்படும்.

🛑பகுதியளவு சேதமடைந்துள்ள வீடுகளை புனரமைப்பதற்கு அதிகபட்சமாக 25 லட்சம்ரூபாவரை வழங்கப்படும். (நான்கு கட்டங்களாக இதற்குரிய மதிப்பீடு இடம்பெறும்.)

🛑அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு 10 லட்சம் ரூபா இழப்பீடு
ஜனாதிபதி அநுர நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரையில் இருந்து மேற்படி தொகுப்பு…

மேற்படி திட்டங்களுக்காக இடைக்கால கணக்கறிக்கை முன்வைக்கப்படும்.
இதனை நிறைவேற்றிக்கொள்வதற்காக நாடாளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி கூடும்.
கொடுப்பனவு தொடர்பான நடைமுறைகள் அடங்கிய சுற்றரிக்கையும் வெளியிடப்படவுள்ளது.

2 மில்லியன் பேர் பாதிப்பு: 607 பேர் உயிரிழப்பு!

2 மில்லியன் பேர் பாதிப்பு: 607 பேர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

214 பேர் காணாமல்போயுள்ளனர்.

4 ஆயிரத்து 164 வீடுகள் முழமையாகவும், 67 ஆயிரத்து 505 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

43 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலையால் 5 லட்சத்து 86 ஆயிரத்து குடும்பங்களைச் சேர்ந்த 20 லட்சத்து 82 ஆயிரத்து 195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாலைதீவினால் இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாலைதீவினால் 25,000 டின்மீன் பெட்டிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

14 கொள்கலன்களில் அடைக்கப்பட்ட இந்த டின்மீன் தொகை, இன்று (05) பிற்பகல், மாலைதீவு உயர் ஸ்தானிகரால் இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதுடன், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) செயல்பாட்டு பணிப்பாளர் பிரிகேடியர் ரொஷான் தர்மவிக்ரம, மேற்கு கடற்படைப் பகுதியின் பிரதிப் பிராந்தியத் கட்டளை அதிகாரி கொமடோர் அருண விஜேவர்தன மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் டயனா பெரேரா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உணவுப் பொருட்களை வழங்குவது உள்ளிட்ட அரசாங்கத்தின் நிவாரண வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மாலைதீவு அரசாங்கம் இந்த நன்கொடையை வழங்கியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு இந்த உணவுப் பொருட்களை உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

காவத்தை சம்பவம்: பாதிக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும்!

0
கஹாவத்தை, நீலாகாமம் இலக்கம் 01 தோட்டப்பிரிவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ராஜாராம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "கஹாவத்தை...

புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் மாணவர்களுக்கான QR அடையாள அட்டை அறிமுகம்!

0
கண்டி மாவட்டம், கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில், மாணவர்களுக்கான QR முறைமையிலான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (23) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நவீன முறையின்...

ஹார்முஸ் நீரிணையில் கட்டணம் வசூலித்தது ஈரான்: அமெரிக்கா சீற்றம்!

0
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்குப் ஈரான் புதிய சுங்கக் கட்டணத்தை விதித்துள்ளதாகவும், அதிலிருந்து பெறப்பட்ட முதல் வருவாய் அந்நாட்டின் மத்திய வங்கியில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் துணை...