Home Blog Page 276

ஐ.தே.க. தலைமைப்பதவியை ஏற்கத் தயார்!

” ஐதேகவின் தற்போதைய தலைவர் உட்பட கட்சியிலுள்ள அனைவரினதும் இணக்கப்பாட்டுடன் கட்சி தலைமைப்பதவி ஒப்படைக்கப்பட்டால் அதனை ஏற்பதற்கு நான் தயார்.”

இவ்வாறு ஐதேக உறுப்பினரான முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐதேக தலைமைப்பதவி வழங்கப்பட்டால் அதனை ஏற்பீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஆசிய கிண்ணம் யாருக்கு? இந்தியா, பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!

ஆசிய கிண்ண டி20 கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் இன்று இரவு துபாய் சர்​வ​தேச மைதானத்​தில் இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன.

சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி லீக் சுற்​றில் 3 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்று தனது பிரி​வில் முதலிடம் பிடித்​திருந்​தது. தொடர்ந்து சூப்​பர் 4 சுற்​றி​லும் 3 ஆட்​டங்​களில் வெற்​றியை பதிவு செய்​திருந்​தது.

அதே வேளை​யில் சல்​மான் அலி ஆகா தலை​மையி​லான பாகிஸ்​தான் அணி லீக் சுற்று மற்​றும் சூப்​பர் 4 சுற்​றில் தலா 2 வெற்​றி, ஒரு தோல்​வியை பதிவு செய்​தது.

ஆசிய கோப்பை வரலாற்​றில் பாகிஸ்​தான் அணி முதன்​முறை​யாக தற்​போது​தான் இறு​திப் போட்​டி​யில் விளை​யாடு​கிறது. அந்த அணி லீக் சுற்​றில் 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும், சூப்​பர் 4 சுற்​றில் 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும் இந்​திய அணி​யிடம் தோல்வி அடைந்​திருந்​தது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 8 முறை சாம்பியன் பட்டம் (1984, 1988, 1990, 1995, 2010, 2016, 2018, 2023) வென்றுள்ளது. இதில் 7 முறை 50 ஓவர் போட்டி வடிவிலும், ஒரு முறை டி 20 வடிவிலான தொடரிலும் (2016-ம் ஆண்டு) இந்தியா வாகை சூடி உள்ளது.

பாகிஸ்தான் அணி 2000 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்றிருந்தது. இந்த இரு முறையும் 50 ஓவர் வடிவில் தொடர் நடத்தப்பட்டிருந்தது. டி 20 வடிவில் பாகிஸ்தான் அணி தற்போதுதான் முதன்முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.

இதயம் நொறுங்கிப்போய் இருக்கிறேன்! விஜய் உருக்கம்

 

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன் என்று கரூர் நெரிசல் சம்பவத்துக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
‘ கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்” எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பிரதமர் மோடி இச்சம்பவம் தொடர்பில் தனது எக்ஸ் தள பதிவில்,

” தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

மரக்கறி விலைப்பட்டியல் (28.09.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

தவெக தலைவர் விஜய் கைது? வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு!

 

தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் நள்ளிரவில் கரூர் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கருத்து வெளியிடுகையில்,

“மிகுந்த துயரத்தோடு, கனத்த இதயத்தோடு உங்கள் முன்பு நிற்கிறேன். கரூரில் நடந்தது பெருந்துயரம் குறித்து என்னால் பேச முடியவில்லை
ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை உயிர்கள் பலியானது இல்லை. இனிமேல் இது நடக்கக்கூடாது. இறந்தவர்கள் குடும்பத்துக்கு கனத்த இதயத்தோடு அஞ்சலி செலுத்தினேன்.” என்று குறிப்பிட்டார்.

அரசியல் நோக்கத்தோடு எதையும் சொல்ல விரும்பவில்லை. ஆணையம் சொல்லும் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யார் கைது செய்யப்படுவார்கள்? என்று நீங்கள் கேட்பதற்கு எல்லாம் நான் என்னை உட்படுத்த தயாராக இல்லை” எனவும் முதல்வர் குறிப்பிட்டார்.
‘கேட்ட இடத்தை தரவில்லை, பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறதே..?’ என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்று விட்டார்.

அதேவேளை, சென்னையில் உள்ள விஜய்யின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விஜய் மற்றும் கூட்ட ஏற்பாளர்கள்மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்யவுள்ளனர்.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலி!

தமிழகம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் கரூர் மாநகரை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.

கரூர் சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நேற்றிரவு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
முன்னதாக காலை 10.30 மணிக்கு விஜய் பிரச்சாரம் செய்ய காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாமக்கல்லில் பிரச்சாரம் செய்துவிட்டு பிற்பகல் 3 மணிக்கு பிறகு தான் விஜய் அங்கிருந்து கிளம்பினார்.

இதற்கிடையே கரூர் வேலுசாமிபுரத்தில் நண்பகல் 12 மணி முதலே தொண்டர்கள், ரசிகர்கள் திரள ஆரம்பித்தனர். கரூர் மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையத்தில் இருந்தே கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரச்சார பேருந்து மிகவும் மெதுவாக நகர்ந்தது. இதனால், இரவு 7.15 மணிக்குதான் பிரச்சார இடத்துக்கு விஜய் வர முடிந்தது.

ஏற்கனவே குறுகிய இடமான அங்கு விஜய் பேச ஆரம்பித்தபோது, அவரது மைக் வேலை செய்யவில்லை. அவரது பேச்சை கேட்பதற்காக பின்னால் இருப்பவர்கள் நெருங்கியடித்தபடி பிரச்சார பேருந்தை நோக்கி வந்தனர். இதனால் முன்னால் காத்திருந்தவர்கள் நெரிசலில் சிக்கி மூச்சு திணறினர்.

இதனால், விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே பலர் அடுத்தடுத்து மயங்கி விழத் தொடங்கினர். மேலும், அப்பகுதியில் இருந்த மரக்கிளை உடைந்து விழுந்ததிலும் சிலர் காயமடைந்தனர். இதனால் பேச்சை நிறுத்திய விஜய், தனது பிரச்சார பேருந்தில் இருந்து தண்ணீர் பாட்டில்களை வழங்கினார்.

ஆனால் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக பலர் தொடர்ந்து மயக்கமடைந்தனர். அவர்களுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் கிடைக்காத நிலையில், விஜய் பிரச்சாரத்தை முடித்து கிளம்பிய பின்னரே அவர்களை மீட்க முடிந்தது.

அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 6 குழந்தைகள் உட்பட மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர்.

இவர்கள் அனைவரின் உடல்களும் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. 58-க்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர். இதில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

உயிரிழந்தவர்கள், சிகிச்சையில் உள்ளோரின் குடும்பத்தினரும், உறவினர்களும் மருத்துவக் கல்லூரி முன்பு குழுமியுள்ளனர். அவர்கள் கதறி அழுது துடித்ததால் அப்பகுதி முழுவதும் சோகமயமாக காட்சியளித்தது.

ட்ரம்பை சந்தித்தார் ஜனாதிபதி அநுர!

 

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள நியூயோர்க் நகரத்திற்கு வருகை தந்திருந்த அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த 23 ஆம் திகதி Lotte New York Palace ஹோட்டலில் வழங்கிய சிறப்பு இரவு விருந்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டார்.

இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமோகமாக வரவேற்றதுடன், சிநேகபூர்வ உரையாடலின் பின்னர் இரு அரச தலைவர்களும் புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

போர் முடிந்ததும் பதவி விலகுவேன்: உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு!

 

ரஷ்யா உடனான போர் முடிவுக்கு வந்ததும் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவேன். மீண்டும் அப்பதவிக்கு போட்டியிடமாட்டேன் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டும். எனினும், ரஷ்யா போர் காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முழு அளவில் உக்ரைன் மீது போர் தொடுத்தது. அதில் இருந்து தற்போது வரை சண்டை நீடித்து வருகிறது.

ஜெலன்ஸ்கி கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து ஜனாதிபதியாக இருந்து வருகிறார்.

” ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டால் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடு செய்வேன். ஏனென்றால், தேர்தல் எனது இலக்கு அல்ல. மிகவும் கடினமான காலகட்டத்தில், என் நாட்டுடன் இருக்க வேண்டும், என் நாட்டுக்கு உதவ வேண்டும் என்று நான் மிகவும் விரும்பினேன். போர் முடிவடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு ” என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா

சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா

நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி.

இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன. இந்த சூழலில் ஏற்கெனவே திட்டமிட்டபடி இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான சூப்பர் 4 சுற்று ஆட்டம் நேற்று துபாயில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். ஷுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்களில் வெளியேறினார்.

மறுமுனையில் அபிஷேக் சர்மா வழக்கம் போலவே பேட்டிங்கில் அதிரடி காட்டினார். அவர் 31 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இணைந்து 66 ரன்கள் எடுத்தனர். சஞ்சு சாம்சன், 29 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா, 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் பதும் நிசங்கா 58 பந்துகளில் 108 ரன்கள் விளாசி அசத்தினார். அவருடன் ஓப்பனிங் இறங்கிய குசால் மெண்டிஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த குசால் பெரேரா நிசங்காவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடி காட்டினார். 58 ரன்கள் குவித்த அவர் 12வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிரா செய்தது. இதனையடுத்து சூப்பர் ஓவர் முறைப்படி இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு ஓவர் வழங்கப்பட்டது. இதில் முதலில் ஆடிய இலங்கை அணி, அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் தட்டுத் தடுமாறி இரண்டு விக்கெட்களுக்கு இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தது. 3 ரன்கள் என்ற இலக்குடன் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாவத் முதல் பந்திலேயே 3 ரன்களை எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

2026 இல் அரச செலவீனம் 4,434 பில்லியன் ரூபா!

 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அரச மொத்த செலவீனமாக 4 ஆயிரத்து 434 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று, பதில் நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்ணான்டோவால் முன்வைக்கப்பட்டது.
2026 பாதீட்டில் நிதி அமைச்சுக்கே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 634 பில்லியன் ரூபா இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சுக்கு 455 பில்லியன் ரூபாவும், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கு 554 பில்லியன் ரூபாவும், கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சுக்கு 301 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படவுள்ளது.

அத்துடன், உள்ளாட்சிசபை மற்றும் மாகாணசபைகள் அமைச்சுக்கு 618 பில்லியன் ரூபாவும், பொதுநிர்வாக அமைச்சுக்கு 596 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி நிதி அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுகின்றது. இது 2 ஆம் வாசிப்பாக கருதப்படும். 2 ஆம் வாசிப்புமீதான விவாதம் நவம்பர் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை நடைபெறும். 14 ஆம் திகதி மாலை 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமாகும். பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி நடைபெறும்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

யாழ்.மீனவர்மீது தமிழகத்தில் தாக்குதல்: நாமல் கொதிப்பு!

0
யாழ்.மீனவர்மீது தமிழகத்தில் தாக்குதல்: நாமல் கொதிப்பு! யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் தமிழ்நாட்டின் சில மீனவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சஷ தனது கரிசனையை வெளியிட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தனது...

சுயாதீன நாடுகளின் கொள்கைகளில் அமெரிக்கா இனி தலையிட முடியாது!

0
“பிறநாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதை அமெரிக்காவால் இனி திணிக்க முடியாது. சுதந்திரமான நாடுகள் மீது தனது கொள்கையை திணிக்கும் நிலையில் இனி அமெரிக்கா இல்லை.” என்று ஈரான் பாதுகாப்பு அமைச்சக செய்தித்...

இதொகாவின் பிரதான மே தின கூட்டம், பேரணி ரத்து! தோட்டவாரியாக நடத்த ஏற்பாடு!

0
சர்வதேச தொழிலாளர் தினத்தன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் வழமையாக பிரமாண்டமாக நடத்தப்படும் பிரதான கூட்டம் மற்றும் பேரணி என்பன இம்முறை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார சுமையை...