Home Blog Page 3484

அட ஈஸ்வரா ! ‘சந்தா’ இன்றி சந்திக்கு வந்த சங்கங்கள்!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கு தொழிற்சங்க பேதம் மறந்து மலையகத்திலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் போராடின. அதன் பலனாக தற்போது ஆயிரம் ரூபா கிடைத்திருந்தாலும் ஆயிரம் பிரச்சினைகளும் தலைதூக்கியுள்ளன. வழமையைவிடவும் தொழிலாளர்கள்மீது தொழில் சுமைகள் திணிக்கப்பட்டுள்ளதுடன், வேலை நாட்களும் குறைக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல தொழிற்சங்கங்களுக்கும் ஆயிரத்தால் நெருக்கடி – தலையிடி – கஷ்ட காலம் என்றே கூறவேண்டும்.

ஆயிரம் ரூபா விடயத்தில் கம்பனிகளின் அழுத்தங்களுக்கு பணியாமல் தொழிற்சங்கங்கள் சமராடின. இதனால் தொழிற்சங்கங்களுக்கு எதிராக பழிவாங்கும் படலத்தை பெருந்தோட்டக் கம்பனிகள் கட்டவிழ்த்துவிட்டுள்ளன. தொழிற்சங்கத்தை பலவீனமடையச்செய்தால் தொழிலாளர்களின் கொட்டத்தையும் அடக்கிவிடலாம் என்பதே கம்பனிகளின் கணக்கு.

இதன்படி தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து மாதாந்தம் சந்தாவை அறிவிட்டு, தொழிற்சங்கங்களின் வங்கிக்கணக்கில் வைப்பிலிடும் நடைமுறையை கம்பனிகள் இடைநிறுத்தியுள்ளன. இனிமேல் தாம் அந்த பணியை செய்யப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளன. இதனால் வழிதெரியாமல் தொழிற்சங்கங்கள் விழிபிதுங்கி நிற்கின்றன.

தொழிலாளர்களின் சந்தாப்பணத்தை நம்பியே தொழிற்சங்கங்களின் நிர்வாக இயந்திரம் சுழல்கின்றது. நூற்றுக்கணக்கானவர்கள் தொழிற்சங்க அலுவலகங்களில் பணியாற்றுகின்றனர்.

மலையகத்திலுள்ள முக்கிய தொழிற்சங்கமொன்றில் கடந்த மாதம் தொழிலாளர்களுக்கு பாதி சம்பளமே வழங்கப்பட்டுள்ளது. இம்முறை வழங்கப்படுமா என்பதும் கேள்விக்குறியே. தொழிலாளர்களிடமிருந்து நேரடியாக சந்தாவை வசூலித்துக்கொள்ளுமாறு இடித்துரைக்கப்பட்டுள்ளதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தோட்ட நிர்வாகங்கள் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்போமா என்றுகூட தொழிற்சங்கங்கள் சிந்திக்க தொடங்கியுள்ளன.

தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க கட்டமைப்பு என்பது அவசியம். ஆரம்பகாலத்தில் சந்தா இன்றிதான் தொழிற்சங்கங்கள் இயங்கின. அதன்பின்னர் தோட்டவாரியாக வசூலிக்கப்பட்டன. அதன்பின்னர் சம்பளத்தில் இருந்து கம்பனிகள் வசூலித்து, தொழிற்சங்கங்களுக்கு வழங்கும் நடைமுறை வந்தது.மலையக தொழிற்சங்கங்களின் கடந்த செயற்பாடுகள் தொழிலாளர்கள் சினம்கொள்ள வைத்துள்ளன. எனவே, சந்தா நிறுத்தப்பட்டதுகூட பலருக்கு சந்தோஷம்தான். ஆனால் சங்கமின்றி பயணிப்பது ஒரு சறுக்கலாகவே அமையும். எனவே, தமது பயணத்தை தொழிற்சங்கங்கள் மாற்றிக்கொண்டால் தொழிலாளர்களிடமிருந்து சந்தா வசூலிப்பது சவாலுக்குரிய விடயமாக அமையாது.

– மலைமகன் –

பின்வாங்கப்போவது யார்? உச்சம் தொடும் கம்மன்பில – சாகர சொற்போர்!

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்துக்குமிடையிலான சொற்சமர் நீடிக்கின்றது.

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து அதற்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் ” கொரோனா நெருக்கடியால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் விதத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளமை ஏற்கமுடியாது.

எனவே, இந்நிலைமைக்கு பொறுப்பேற்று துறைசார் அமைச்சர் பதவி விலக வேண்டும். ” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கடந்த 12 ஆம் திகதி மாலை விசேட அறிக்கையொன்றை விடுத்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை  நடத்தினார்.

“எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கான முடிவை வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவே எடுத்தது. அது அரசின் முடிவு. ஜனாதிபதி மற்றும் பிரதமரை பாதுகாக்கவே, நெருக்கடியான நிலையிலும் விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பை நான் சுயமாக முன்வந்து விடுத்தேன்.

எனவே, இவ்விவகாரம் தொடர்பில் பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்துக்கு பகிரங்கமாக சவால் விடுக்கின்றேன்.” – என்று கம்மன்பில குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் 13 ஆம் திகதி ஊடகவியலாளர் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் காமினி லொக்குகேயும், பொதுச்செயலாளர் சாகர காரியவசமும் இதில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கம்மன்பிலவுக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே குறித்த ஊடக சந்திப்பில் சாகர பங்கேற்கவிருந்தார். எனினும் ,இறுதி நேரத்தில் ஊடக சந்திப்பு இரத்து செய்யப்பட்டது.

அதன்பின்னர் சாகர தலைமையில் மொட்டு கட்சி தலைமையகத்தில் கூட்டமொன்று நடைபெற்றது. இதன்போது தான் விடுத்த அறிக்கை தொடர்பான நிலைப்பாட்டில் இன்னும் மாற்றம் இல்லை, கட்சியும் அதே நிலைப்பாட்டில்தான் உள்ளது என சாகர அறிவித்தார்.

இந்நிலையில் இதற்கு நேற்று பதிலடி கொடுத்த கம்மன்பில, மொட்டு கட்சியின் செயலாளர் தான் விடுத்த அறிக்கையை மீளப்பெறவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் என்னுடன் விவாதத்துக்கு வரவேண்டும்.” – என்று குறிப்பிட்டார். இவ்வாறு இருவருக்குமிடையில் சொற்போர் நீடிக்கின்றது.

‘டெஸ்ட் சாம்பியன்ஷிப்’ – உலக கிண்ணத்தை வெல்லப்போகும் அணி எது?

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் இன்றுஇலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பொதுவான இடத்தில் விளையாடப்போகும் முதல் டெஸ்ட் இது தான். மேலும் விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி எந்த ஐ.சி.சி. கிண்ணத்தையும் வென்றதில்லை.

இதேபோல் நியூசிலாந்து அணி கடந்த இரண்டு உலக கோப்பை போட்டிகளின் (50 ஓவர்) இறுதிசுற்றில் தோற்று இருக்கிறது. இரு அணிகளும் ஐ.சி.சி. கோப்பையை கையில் ஏந்தும் தருணத்துக்காக காத்திருப்பதால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

‘கொரோனா’வால் மேலும் 51 பேர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 51 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளனர்.  இது தொடர்பான தகவல் நேற்றிரவு வெளியிடப்பட்டது. இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 425 ஆக அதிகரித்துள்ளது.

பஸில் நாடு திரும்பியதும் மற்றுமொரு நாடகம் அரங்கேறும்!

பஸில் ராஜபக்ச நாடு திரும்பியகையோடு எரிபொருட்களின் விலை குறைப்பு என்ற நாடகம்கூட அரங்கேற்றப்படலாம் – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினரான பந்துல லால் பண்டாரிகொட கூறியவை வருமாறு,

” அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருட்களின் விலை குறைக்கப்படவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது. எனவே, அனுதாபம், கவலை தெரிவிக்காமல் எரிபொருட்களின் விலையை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ராஜபக்சக்கலால் ஒரு மேசையில் தேநீர் குடிக்கும்போதுகூட இப்பிரச்சினையை தீர்க்க முடியும். நிலைமை இவ்வாறிருக்கையில் பந்து அங்கும், இங்குமாறு பறிமாற்றப்படுகின்றது.

தற்போதைய அரசியல் சர்வபலம் படைத்த நபரா பஸில் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனினும், பஸில் ராஜபக்ச நாடு திரும்பியகையோடு புதிய நாடகமொன்றுகூட அரங்கேறலாம். அவர் வந்த பின்னர் எரிபொருட்களின் விலைகூட குறைக்கப்படலாம்.” – என்றார்.

அதேவேளை, அமெரிக்கா சென்றுள்ள பஸில் ராஜபக்ச எதிர்வரும் 23 ஆம் திகதி நாடு திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கம்மன்பிலவுக்கு ஐ.தே.க. நேசக்கரம்? சஜித் அணியின் நகர்வு குறித்தும் விசனம்!!

” அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரவேண்டிய நம்பிக்கையில்லாப் பிரேரணையை தனி ஒருவரை இலக்கு வைத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக அரசாங்கமே பலமடையும். எனவே, தனி ஒருவருக்கு எதிராக பிரேரணை முன்வைக்கப்பட்டமை வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகும்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, பிளவடைந்துள்ள அரசாங்கத்தை மீள ஒன்றிணைக்கும் முயற்சியையே பிரேரணை ஊடாக ஐக்கிய மக்கள் செய்துள்ளது என ஐ.தே.கவின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டாரவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதிகார பரவலுக்காக தமிழர் சிந்திய இரத்தம் பயனற்றுபோகக்கூடாது – மனோ

13ஆம் திருத்தத்தின்படி மாகாணசபைகளுக்கு உரித்தான மருத்துவமனைகளை மத்திய அரசு சுவீகரிக்கும் தீர்மானத்தை அமைச்சரவை மேற்கொண்டமை அரசியலமைப்புக்கு முரணானது என்பதை அமைச்சரவையில் சுட்டிக்காட்டினேன் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கூறியுள்ளமை பாராட்டுக்குரியது. ஆனால், அதற்கான காரணமாக தமிழ் மக்கள் தனது கட்சிக்கு வாக்களித்து, தனக்கு அரசியல் பலத்தை தராமையே எனவும் அவர் மேலும் கூறியுள்ளமை கவலைக்குரியது.

உண்மையில் ராஜபக்ச அரசின் “அதிகார பரவலாக்கலுக்கு” எதிரான பெருந்தேசியவாத நிலைப்பாடே இதற்கு காரணம். எனவே அமைச்சர் இதுபற்றி தனது அரசுக்குள்ளே விடாமல் போராட வேண்டும். அவருக்கு அரசுக்குள்ளே இருக்கும் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகள், இது தொடர்பில் ஆதரவளிக்க வேண்டும் இது எம் கோரிக்கை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் விவரித்து கூறியுள்ளதாவது,

அமைச்சரவை தீர்மானத்தின்படி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளை, மத்திய அரசு சுவீகரிப்பது தொடர்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின்படி, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மாகாண வைத்தியசாலைகளும் பறிக்கப்படும்.

ஆகவே இவை பற்றி வடக்கில், கிழக்கில், மலையகத்தில் இருந்து அரசுக்குள் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் மற்றும் சமகாலத்தில் எதிரணியில் இருந்து அரசு பக்கம் சென்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்பீக்களும் தமது எதிர்ப்புகளை காட்ட வேண்டும்.

உண்மையில், 13ம் திருத்தத்தை முழுமையாக அமுல் செயயும்படியே, இந்திய அரசாங்கம், ஐநா மனித உரிமை ஆணையம், ஐரோப்பிய பாராளுமன்றம் என்பவை கோதாபய ராஜபக்ச அரசாங்கத்தை திரும்ப, திரும்ப கூறுகின்றன.

13ம் திருத்தத்தை முழுக்க அமுல் செய்வதை நிறுத்தியது ஒருபுறமிருக்க, இப்போது இருப்பதையும் பறிக்கும் செயன்முறையை இந்த அரசு மேற்கொள்கிறது. இது நிச்சயமாக, இந்திய அரசுடனான உறவு, செப்டம்பரில் அடுத்து வரும் ஐநா மனித உரிமை ஆணையரின் வாய்மொழி அறிக்கை, ஐரோப்பிய பாராளுமன்ற ஜிஎஸ்பி+ விவகாரம் ஆகியவற்றில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அமைச்சர் தனது ஜனாதிபதிக்கு எடுத்து கூற வேண்டும். பார்க்கப்போனால், இந்த ஜனாதிபதிக்கு உள்நாட்டு அரசியல் சட்டமும் தெரியவில்லை. இலங்கை பற்றிய வெளிநாட்டு நகர்வுகளும் தெரியவில்லை போல் எமக்கு தெரிகிறது.

13ம் திருத்தத்தின்படி மாகாணசபைகளுக்கு உரித்தான மருத்துவமனைகளை மத்திய அரசு சுவீகரிக்கும் தீர்மானத்தை அமைச்சரவை மேற்கொண்டமை அரசியலமைப்புக்கு முரணானது என்பதை அமைச்சரவையில் சுட்டிக்காட்டினேன் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கூறியுள்ளமை பாராட்டுக்குரியது.
ஆனால், அதற்கான காரணமாக தமிழ் மக்கள் தனது கட்சிக்கு வாக்களித்து, தனக்கு அரசியல் பலத்தை தராமையே எனவும், அது தமிழ் மக்களின் தீர்க்கதரிசனமற்ற தீர்மானமே எனவும் அவர் மேலும் கூறியுள்ளமை கவலைக்குரியது.

உண்மையில் ராஜபக்ச அரசின் “அதிகார பரவலாக்கலுக்கு” எதிரான பெருந்தேசியவாத நிலைப்பாடே இதற்கு காரணம். எனவே அமைச்சர் இதுபற்றி தனது அரசுக்குள்ளே விடாமல் போராட வேண்டும். அவருக்கு அரசுகுள்ளே இருக்கும் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகள், இது தொடர்பில் ஆதரவளிக்க வேண்டும்.

இந்நாட்டில், அதிகார பரவலுக்காக தமிழ் மக்கள் சிந்திய இரத்தம், கொடுத்த விலை என்பவை சில அமைச்சரவை தீர்மானங்களால் சுலபமாக பறி போக கூடாது. இந்த உண்மை, அரசில் இருக்கும் தமிழ், முஸ்லிம் முழு அமைச்சர்கள், அரை அமைச்சர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள், எம்பீக்கள் ஆகியோருக்கு தெரிய வேண்டும்.

காலை வாரினார் ரணில் – சஜித் பக்கம் தாவுகிறார் ஜோன்! கசிந்தது ஆதாரம்!!

” பொதுத்தேர்தலில் போட்டியிட இருந்தேன். எனினும், தேசியப்பட்டியல் நியமனம் என கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார். இதன்படி தேசியப்பட்டியலில் எனது பெயர் முதலாவதாக பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஏமாற்றிவிட்டார்.

தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் ஊடாக வாய்ப்பு வழங்கப்படாது என ரணில் அறிவித்திருந்தார். எனினும், அதற்கு எதிரான வகையில் தற்போது முடிவெடுத்துள்ளார். அரசியலே எனக்கு வெறுத்துவிட்டது. ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் எதிர்காலத்தில் பார்க்கலாம். “

இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கோப் குழுவின் விசேட கூட்டம் நடத்தப்படும் திகதி வெளியானது

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) விசேட கூட்டத்தை எதிர்வரும் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்துவதற்கு அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தீர்மானித்துள்ளார்.

குழு உறுப்பினர்களுக்காக நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில் கோப் குழுவினால் 09வது பாராளுமன்றத்தில் இதுவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ள 02 அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மதிப்பாய்வு செய்யப்படவுள்ளது.

அத்துடன், எதிர்காலத்தில் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்படவேண்டிய நிறுவனங்கள் யாவை என்பது குறித்தும் இக்கூட்டத்தில் தீர்மானிக்க எதிர்பார்த்திருப்பதாக அக்குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

கொவிட் 19 சவாலுக்கு மத்தியில் கோப் குழுவின் கூட்டங்களை ஒன்லைன் முறைமையில் (online) ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுப்பது குறித்தும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

இதற்கமைய சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் கணக்காளர் ஆகியோருடன் சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளரை மாத்திரம் குழுவின் முன்னிலையில் அழைப்பது மற்றும் ஏனையவர்களை ஒன்லைன் முறைமையின் கீழ் இணைத்துக் கொள்வது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்படவுள்ளது.

‘அதிகாரப்பகிர்வு குறித்து கூட்டமைப்புக்கு டில்லி வழங்கிய புதிய உறுதிமொழி’

இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், இலங்கைக்கான இந்திய தூதுவருக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று நடைபெற்றது.

வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையின் அபிவிருத்தி, அதிகாரப் பகிர்வு தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் மற்றும் சுமந்திரன் எம்.பி. ஆகியோரும் சந்திப்பில் பங்கேற்றனர்.

அதேவேளை, அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவினை உயர் ஸ்தானிகர் இச்சந்திப்பில் எடுத்துரைத்துள்ளார் என இந்திய தூதரகத்தின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

செய்தி

யோஷித ராஜபக்ச கைது

0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ச , கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ச , இன்று (17) காலை லஞ்ச அல்லது...

அமெரிக்கா இல்லையென்றால் இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது!

0
அமெரிக்காவின் ஆதரவு இல்லாவிட்டால், இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருந்திருக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். “நான் இல்லாவிட்டால் இங்கு இஸ்ரேல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் இஸ்ரேலுக்காக நான் செய்த காரியங்களைச்...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...