Home Blog Page 3485

டயகமவில் 3 நாட்களில் 17 பேர் கைது – 570 லீற்றர் கசிப்பும், 75 சாராய போத்தல்களும் மீட்பு!

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட 17 பேர் கடந்த 3 நாட்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி சுற்றிவளைப்பு, தேடுதல்களின்போது 75 சாராய போத்தல்களும், 570 லீற்றர் கசிப்பும், கசிப்பு தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

க.கிசாந்தன்

காசாமீது இஸ்ரேல் படையினர் மீண்டும் வான்வழித் தாக்குதல்

போர் நிறுத்தத்துக்கு பிறகு முதல் முறையாக காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் வான்வழி தாக்குதலை நடத்தியது.

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான இந்த மோதலின் மையமாக கிழக்கு ஜெருசலேம் நகரம் இருந்து வருகிறது. இந்த நகரம் யாருக்குச் சொந்தம் என்பதில்தான் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் நீடிக்கிறது.

இந்த சூழலில் கடந்த மாதம் முதல் வாரத்தில் ஜெருசலேம் நகரில் அல் அக்சா மசூதி அமைந்துள்ள பகுதியில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேல் போலீசாருக்கும் இடையே கடுமையான மோதல் சம்பவங்கள் அரங்கேறின.

அதனைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் போராளிகள் அல் அக்சா மசூதி பகுதியில் இருந்து இஸ்ரேல் படைகள் விலக வேண்டும் என எச்சரிக்கும் விதமாக இஸ்ரேல் நகரங்கள் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்கினர்.‌ இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா நகர் மீது வான்வழி தாக்குதலை தொடுத்தது.

கடந்த மாதம் 10 ஆம் திகதி இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட இந்த சண்டை இடைவிடாமல் 11 நாட்களுக்கு தொடர்ந்தது. இதில் இரு தரப்பிலும் சேர்த்து 250-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த உயிரிழப்பில் பெரும் பகுதி காசாவில் நிகழ்ந்தது.

இருதரப்பு மோதலில் அப்பாவி மக்கள் உயிரிழப்பது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்திய நிலையில், சர்வதேச சமூகம் கொடுத்த அழுத்தத்தின் பேரில் கடந்த மாதம் 21- ஆம் திகதி இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. இதனால் காசாவில் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருந்தது.

இந்தநிலையில் ஹமாஸ் போராளிகளின் கடும் எதிர்ப்பை மீறி ஜெருசலேம் நகரில் யூதர்கள் நேற்று முன்தினம் பேரணி நடத்தினர்.

இதனால் கோபமடைந்த ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலின் தெற்கு நகரங்களை குறிவைத்து வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட பலூன்களை பறக்க விட்டனர்.

இந்த பலூன்கள் தரையில் விழுந்து வெடித்ததில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பற்றியதாக இஸ்ரேல் தீயணைப்பு துறை தெரிவித்தது.

இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை காசா நகரில் ஹமாஸ் போராளிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தியது.

ஹமாஸ் போராளிகளின் பயிற்சி மையங்கள், பதுங்கு குழிகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து போர் விமானங்கள் 10 நிமிடங்களுக்கும் மேலாக குண்டு மழை பொழிந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேசமயம் இந்த வான்வழி தாக்குதலால் காசா நகரில் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றி இஸ்ரேல் ராணுவம் குறிப்பிடவில்லை.

சண்டை நிறுத்தத்துக்கு பிறகு இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பெரிய மோதல் இதுவாகும். இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

‘இணையவழி மது விற்பனைக்கு அனுமதி மறுப்பு’

இணையம் ஊடாக மதுபானங்களை விற்பனை செய்வதற்கு கொவிட்  -19 தடுப்புக்கான செயலணி அனுமதி மறுத்துள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்தி சில்வா தெரிவித்தார்.

பயணக்கட்டுப்பாட்டால் நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இணையம் ஊடாக மது விற்பனை செய்வதற்கு கலால் திணைக்களம் திட்டமிட்டது. இதற்கு நிதி அமைச்சும் கொள்கை ரீதியில் அனுமதி வழங்கியது.

எனினும், இத்திட்டத்துக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட பல தரப்புகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டன.  இதனையடுத்து கொவிட் தடுப்புக்கான செயலணி அனுமதி வழங்கினால் மட்டுமே குறித்த சேவை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், அதற்கான அனுமதியை வழங்க குறித்த செயலணி மறுத்துள்ளது.

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நாளை ஆரம்பம் – இறுதி போட்டிகு இந்தியா நுழைந்தது எப்படி?

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின்றது.

இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பொதுவான இடத்தில் விளையாடப்போகும் முதல் டெஸ்ட் இது தான். மேலும் விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி எந்த ஐ.சி.சி. கிண்ணத்தையும் வென்றதில்லை.

இதேபோல் நியூசிலாந்து அணி கடந்த இரண்டு உலக கோப்பை போட்டிகளின் (50 ஓவர்) இறுதிசுற்றில் தோற்று இருக்கிறது. இரு அணிகளும் ஐ.சி.சி. கோப்பையை கையில் ஏந்தும் தருணத்துக்காக காத்திருப்பதால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதற்கு முன்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பற்றியும், அதில் இந்திய அணி எப்படி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது என்பது பற்றியும் இங்கு புரட்டி பார்க்கலாம்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகம்

ஒரு நாள் மற்றும் 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் உலக கோப்பை நடத்தப்பட்டு வந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) உலக கோப்பையை 2019-ம் ஆண்டில்
அறிமுகப்படுத்தியது.

இதற்குரிய காலக்கட்டமாக 2019 முதல் 2021-ம் ஆண்டு வரை நிர்ணயிக்கப்பட்டன. 9 அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மொத்தம் 6 இரு நாட்டு டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும். இதில் 3 தொடர் வெளிநாட்டில் இடம் பெற வேண்டும்.

ஒவ்வொரு தொடருக்கும் அதிகபட்சமாக 120 புள்ளிகள் வழங்கப்படும். அதாவது 2 போட்டி கொண்ட தொடராக இருந்தால் டெஸ்ட் வெற்றிக்கு 60 புள்ளிகளும், டிரா ஆனால் வெற்றிக்குரிய புள்ளியில் 3-ல் ஒரு பங்காக 20 புள்ளியும் வழங்கப்படும். இதுவே 3 போட்டி கொண்ட தொடராக இருந்தால் வெற்றிக்கு 40 புள்ளிகளும், 4 போட்டிகள் என்றால் வெற்றிக்கு 30 புள்ளிகளும் கிடைக்கும்.

அசத்திய இந்தியா

இதன்படி தங்களது பயணத்தை கம்பீரமாக தொடங்கிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் (2-0), தென்ஆப்பிரிக்கா (3-0), வங்காளதேசம் (2-0), ஆஸ்திரேலியா (2-1), இங்கிலாந்து (3-1) ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் வெற்றி வாகை
சூடியது. நியூசிலாந்தில் நடந்த 2 டெஸ்டுகளில் மட்டும் தோல்வியை தழுவியது.

இலங்கை, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஒரு கட்டத்தில் இந்திய அணி அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடம் வகித்தது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா அரக்கன் புகுந்ததால் நிறைய போட்டிகளை திட்டமிட்டபடி நடத்த முடியாமல் தள்ளிவைக்க வேண்டியதாகி விட்டது. சில டெஸ்ட் தொடர்கள் ரத்தாகின. இதனால் புள்ளி வழங்கும் விதிமுறையில் ஐ.சி.சி. மாற்றங்களை கொண்டு வந்தது.

வெற்றிக்கு வழங்கப்படும் புள்ளிகள் சதவீதம் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. இதனால் இந்திய அணிக்கு திடீரென சிக்கல் உருவானது. அதாவது இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் தொடரில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.கடந்த பிப்ரவரி-மார்ச் மாதத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

அதன் பிறகு அஸ்வின்-அக்‌ஷர் பட்டேலின் சுழல் ஜாலத்தால் இங்கிலாந்தை சுருட்டிய இந்திய அணி எஞ்சிய 3 டெஸ்டிலும் வெற்றிக்கனியை பறித்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்று வாய்ப்பை உறுதி செய்ததுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடித்தது. இந்திய அணி தாங்கள் ஆடிய எல்லா டெஸ்டிலும் வெற்றி பெற்றிருந்தால் மொத்தம் 720 புள்ளிகள் பெற்றிருக்கும். ஆனால் 520 புள்ளிகள் மட்டுமே எடுத்ததால் அதன் சதவீதம் 72.2 ஆக கணக்கிடப்பட்டது.

நியூசிலாந்து எப்படி?

ஆஸ்திரேலியாவுக்கும் இறுதிப்போட்டிக்கு முன்னேற பிரகாசமான வாய்ப்பு தென்பட்டது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக தென்ஆப்பிரிக்காவுக்கு சென்று விளையாட மறுத்ததால் அவர்களின் வாய்ப்பு பறிபோனது. நியூசிலாந்து அணி 5 தொடரில் விளையாடி 3-ல் வெற்றியும் (இந்தியாவுக்கு எதிராக 2-0, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2-0, பாகிஸ்தானுக்கு எதிராக 2-0) ஒன்றில் தோல்வியும் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (0-3) ஒன்றில் டிராவும் (இலங்கைக்கு எதிராக 1-1) கண்டு 70 சதவீதத்துடன் 2-வது இடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

‘அத்தியாவசிய சேவை என்ற போர்வையில் மாடு கடத்திய மூவர் டயகமவில் கைது’

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து அத்தியாவசிய சேவை என்ற போர்வையில் இறைச்சிக்காக பசுமாட்டை கடத்திய மூவர் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டயகம, சந்திரிகாமம் பகுதியிலிருந்து அக்கரபத்தனைக்கே இறைச்சிக்காக மாடு இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் டயகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய டயகம எல்லைக்குள்ளேயே மடக்கிப்பிடிக்கப்பட்டனர்.

பசு மாடு மீட்கப்பட்டுள்ளதுடன், லொறியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் சந்திரகாமம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய சேவை என்ற போர்வையில் கடத்தலுக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

க.கிசாந்தன்

கம்மன்பிலவுக்கு ‘அரசியல் பொறி’ – நாளை பிரேரணை கையளிப்பு!

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கையெழுத்து திரட்டும் நடவடிக்கையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நேற்று ஆரம்பித்த நிலையில் இன்றும் எம்.பிக்கள் சிலர் கையொப்பமிடவுள்ளனர்.

அதன்பின்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் நாளை (18) கையளிக்கப்படவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரின் கூற்றின்படி அமைச்சரவையின் அனுமதியின்றி வலுசக்தி அமைச்சர் தன்னிச்சையாக எரிபொருட்களின் விலையை அதிகரித்தமை, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தியமை உட்பட 10 காரணங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் முன்வைக்கப்படவுள்ளன.

இப்பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி என்பனவும் ஆதரவு வழங்கவுள்ளன என்று தெரியவருகின்றது.

அதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள பஸில் ஆதரவு உறுப்பினர்கள் சிலர் ஆதரித்து வாக்களிக்காவிட்டாலும் நடுநிலை வகிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கொழும்பு 516, இரத்தினபுரி 127, கண்டியில் 93 பேருக்கும் நேற்று கொரோனா

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக

கொழும்பு – 516

கம்பஹா – 561

களுத்துறை – 156

குருணாகல் – 137

காலி – 59

மாத்தறை – 91

கேகாலை – 40

பதுளை – 13

அம்பாறை – 35

மாத்தளை – 41

அநுராதபுரம்- 38

முல்லைத்தீவு – 13

மன்னார் – 03

வவுனியா – 22

திருகோணமலை – 24

நுவரெலியா – 26

கண்டி – 93

இரத்தினபுரி – 127

புத்தளம் – 121

யாழ்ப்பாணம் – 103

கிளிநொச்சி – 15

பொலன்னறுவை – 7

அம்பாந்தோட்டை  – 40

மொனறாகலை – 4

மட்டக்களப்பு – 134

 

 

“ஆளும், எதிரணி எம்.பிக்கள் ரணிலுடன் சங்கமம்” – செயலாளர் பரபரப்பு தகவல்

” 42 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு அரசியலமைப்பையே மாற்றியமைத்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சி வசம் தற்போதுள்ள ஒரு ஆசனத்தை 60 ஆக்குவதென்பது ‘சிம்பிளான’ விடயமாகும்.” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்கவை பெயரிடுமாறுகோரும் ஆவணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார நேற்று தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளித்தார்.

இதன்படி இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் நாளை 18 ஆம் திகதி வெளியிடும் எனவும், 22 அல்லது 23 ஆம் திகதிகளில் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் பதவியேற்பார் எனவும் தெரியவருகின்றது.

தேர்தல் ஆணைக்குழுவிடம் ஆவணத்தை கையளித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ரங்கே பண்டார கூறியவை வருமாறு,

” ஐக்கிய தேசியக்கட்சி பெற்ற வாக்குகளுக்காகவே ஓர் தேசியப்பட்டில் கிடைத்தது. அது இலவசமாகக் கிடைக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற செல்லவேண்டியது காலத்தின் கட்டாயம். நாட்டுக்காகவும், மக்களுக்காகவுமே அவரை அனுப்புகின்றோம்.

கைவசம் ஒன்றுதான் உள்ளது. அதன் பிரதிபலன் 60 ஆக மாறும். இதன்மூலம் நான்கூறவரும் விடயம் மக்களுக்கு புரியும். அரச மற்றும் எதிரணி உறுப்பினர்கள் ஐ.தே.கவுடன் பேச்சு நடத்திவருகின்றனர். அதன் பலனையும் எதிர்காலத்தில் அறியக்கூடியதாக இருக்கும்.

42 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு அரசையே முன்னெடுக்க முடிந்ததென்றால், அரசியலமைப்பில்கூட திருத்தத்தை மேற்கொள்ள முடியுமென்றால், வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியுமென்றால் ஒன்றை 60 தாக்குவதென்பது ரணிலுக்கு சிம்பிளான விடயம்.” – என்றார்.

‘கேஸ்’ சிலிண்டர்களை பதுக்கினால் ‘1977’ இலக்கத்துக்கு முறையிடவும்!

சமையல் எரிவாயு சிலிண்டர்களை வியாபார நிறுவனங்கள் பதுக்கி வைத்தால் அது தொடர்பில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு முன்வைக்க முடியும் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டும் என லாப் மற்றும் லிட்ரோ கேஸ் நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

லாப் நிறுவனம் 740 ரூபாவால் அதிகரிக்குமாறும் லிட்ரோ கேஸ் நிறுவனம் 670 ரூபாவால் விலையை அதிகரிக்குமாறும் கோரியுள்ளதாக எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழு உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இந்நிலையில் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும் என்பதால் அதனை பதுக்கி வைக்கும் முயற்சியும் இடம்பெறுகின்றது. இந்நிலையிலேயே அது பற்றி முறைப்பாடு செய்ய இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

களவாடப்பட்ட தடுப்பூசிகள் – விசாரணை வேட்டை ஆரம்பம்!

காலி ஹபராதுவ பகுதியில் சீனத் தயாரிப்பான சினோ பாம் தடுப்பூசிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சுமார் 30 தடுப்பூசிகளே இவ்வாறு களவாடப்பட்டுள்ளன எனவும், அவற்றின் பெறுமதி 90 ஆயிரம் ரூபாவெனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரியால் நேற்று ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பணியாற்றிய சாரதி மற்றும் ஊழியர் ஒருவர் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை மேற்கொள்வதற்கு காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால், காலி குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

2 சதாப்தகால காத்திருப்பு: வெற்றிக் கனியை ருசித்தது நோர்வே

0
28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவிற்குத் திரும்பியுள்ள நோர்வே அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் ஈராக் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. பாஸ்டன்...

ரணில், சஜித் அணிகளின் சங்கமம் உறுதி!

0
ஐக்கிய மக்கள் சக்தியும், தமது கட்சியும் இணைவது உறுதி என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பணிப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, இரு தரப்பு...

போர் முடிந்துவிட்டது: எரிபொருள் விலை குறைக்கப்படுமா?

0
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உடன்படிக்கையைத் தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், உள்நாட்டிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய முதல் சந்தர்ப்பத்திலேயே எரிபொருள் விலை குறைப்புக்கான பலன்...