Home Blog Page 3486

மக்கள் சட்டத்தை மறந்தால் பயணத்தடை தொடரும் – சுகாதார தரப்பு எச்சரிக்கை

” பயணக்கட்டுப்பாடுகளை மக்கள் மீறும்நிலை நீடித்தால் பயணத்தடையையும் நீடிக்கவேண்டிய நிலை ஏற்படும்.” – என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் நேற்று தெரிவித்தார்.

” தனிமைப்படுத்தல் சட்டத்தையும், பயணக்கட்டுப்பாட்டு நடைமுறைகளையும் உரியவகையில் பின்பற்றுமாறு நாட்டு மக்களிடம் மீண்டும் கேட்டுக்கொள்கின்றோம். எனினும், சட்டத்திட்டங்களைமீறுச்செயற்படும் சம்பவங்கள் நாளாந்தம் அதிகரித்துவருகின்றன.

எனவே, பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் மக்கள் உரியவகையில் செயற்படுவார்களா என்ற அச்சநிலை உருவாகியுள்ளது. நடைமுறைகளை மக்கள் தொடர்ச்சியாக மீறினால் பயணக்கட்டுப்பாட்டை மேலும் ஒரு அல்லது இரு வாரங்களுக்கு பயணத்தடையை நீடிக்கவேண்டும் என்ற பரிந்துரை முன்வைக்கப்படும். இதைவிட வேறுவழியில்லை.” – என்றும் அவர் கூறினார்.

போவை தோட்ட நிர்வாகத்தின் கொட்டத்தை அடக்கிய செந்தில் தொண்டமான்!

போவை தோட்டத்தில் கடந்த ஒருவார காலமாக நிர்வாகத்தால் தோட்டத் தொழிளாலர்களுக்கு 20 கிலோ கொழுந்தை பறிக்குமாறு கொடுக்கப்பட்டுவந்த அழுத்தங்கள் மற்றும் அரைநாள் பெயர் வழங்கப்பட்டுவந்தமைக்கு பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளரும், இ.தொ.காவின் உபத் தலைவருமான செந்தில் தொண்டமானின் தலையீட்டால் தீர்வு கிடைத்துள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நாட் சம்பளமாக 1000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அப்புதளை போவை தோட்டத்தில் தோட்ட நிர்வாகத்தால் 20 கிலோ கொழுந்தை பறித்தால் மாத்திரமே நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்றும் இல்லாவிட்டால் அரை பெயர்தான் வழங்கப்படும் என்றும் தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த விடயம் தொடர்பில் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு தொழிலாளர்கள் கொண்டுவந்ததையடுத்து உடனடியாக தோட்டத்துக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு நிர்வாகத்துடன் அவர் கலந்துரையாடலை நடத்தினார்.

தொழிலாளர்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் கடுமையான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடுமென நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், உடனடியாக பிரச்சினைக்கு தீர்வை வழங்க வேண்டுமெனவும் அரைநாள் சம்பளம் வழங்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் முழுநாள் சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்றும் நிர்வாகத்துக்கு கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்ததார்.

ஆனால் தோட்ட முகாமையாளர் கம்பனி நிர்வாகத்தினர் கூறுவதைத்தான் செய்ய முடியுமென கூறியதால் அன்று முதல் 5 கிலோ கொழுந்தைதான் தொழிலாளர்கள் பறிப்பார்கள் என்றும், சரியான தீர்வு வழங்கப்படவில்லை என்றால் போவை தோட்டத்தில் 5 கிலோ கொழுந்தை பறிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிப்பது போன்று கிளனனோர்,தம்பேத்தன,பிட்ராத்மலை, நாயபெத்த உள்ளிட்ட தோட்டங்களிலும் 5 கிலோ கொழுந்தை பறிக்கும் நிலை ஏற்படுமென செந்தில் தொண்டமான் எச்சரித்துடன் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல நேரிடும் என்றும் நிர்வாகத்திடம் திட்டவட்டமாக கூறினார்.

செந்தில் தொண்டமானின் பணிப்புரையின் பிரகாரம் போவை தோட்டத்தில் அன்று முதல்  நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் 5 கிலோ கொழுந்தையே தொழிலாளர்கள் பறித்துவந்தனர். இதனால் உடனடியாக தலையீட்டை மேற்கொண்ட தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருவதாகவும் வழமைபோன்று கொழுந்தை பறிக்குமாறும் கோரிக்கை விடுக்குமாறும் செந்தில் தொண்டமானிடம் வேண்டியது.

அத்துடன் அரைநாள் சம்பளம் வழங்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் முழுநாள் சம்பளம் வழங்கப்படும் என்றும் நிர்வாகத்தால் செந்தில் தொண்டமானுக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போவை தோட்ட விவகாரத்துக்கு உடனடியாக தலையீட்டை மேற்கொண்டு தீர்வை பெற்றுக்கொடுத்துள்ள செந்தில் தொண்டமானுக்கு தோட்டத் தொழிலாளர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

செய்தி – செந்தில் தொண்டமானின் ஊடகப்பிரிவு

ஜுன் 22 ஆம் திகதி விஜய் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

முன்னணி நடிகராக இருக்கும் விஜய் பிறந்தநாளில் இரட்டை விருந்து கிடைக்கும் என்று ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நடிகர் விஜய் ஜூன் 22 ஆம் தேதி தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதற்காக ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் அன்றைய தினத்தில் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 66’ தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இந்தப் படத்திற்காக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளியுடன் விஜய் கைகோர்க்க உள்ளதாகவும், படத்தை தில் ராஜு தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், விஜய் தற்போது நடித்து வரும், ‘தளபதி 65’ படத்தின் போஸ்டர் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இரண்டு படங்கள் பற்றிய அறிவிப்பு விஜய் பிறந்தநாளில் வர இருப்பதால் இரட்டை விருந்து கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை – திமுத் கருணாரத்ன 11ஆவது இடத்தில்!

டெஸ்ட் தரவரிசைக்கான பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனைப் பின்னுக்குத் தள்ளி ஆஸி.வீரர் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஸ்மித் 891 புள்ளிகளுடனும், வில்லியம்சன் 886 புள்ளிகளுடனும் முறையே முதலிரண்டு இடத்தில் உள்ளனர்.

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன 11 ஆவது இடத்திலும், அஞ்சலோ மெத்யூஸ் 25 ஆவது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சாளர்களுக்கான பட்டியலில் சுரங்க லக்மால் 21ஆவது இடத்தில் உள்ளார்.

‘மக்கள் என் பக்கமே – பிரேரணையை எதிர்கொள்ள தயார் – சாகரவுக்கு நன்றி’

” சாகர காரியவசம் வெளியிட்ட அறிக்கையால் மக்களும், அரசாங்க தலைவர்களும் என் பக்கம் உள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. எனவே, அவ்வாறானதொரு அறிக்கையை வெளியிட்டதற்காக சாகரவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

தனக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் விரைவில் பதிலளிப்பேன். மக்கள் என் பக்கம், ஜனாதிபதி, பிரதமர், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என்பக்கமே உள்ளனர் என்பது சாகர வெளியிட்ட அறிக்கையின் பின்னர் எனக்கு அறியக்கூடியதாக உள்ளது. எனது பலமும் நிரூபனமாகியுள்ளது. சாகரவுக்கு நன்றி.” – என்றார்.

கடன்களை மீளப்பெறும்போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைக்கவும்

கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களின் கடன்களை மீளப்பெறும் போது அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இன்று (16) அ மத்திய வங்கி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து மத்திய வங்கி அதிகாரிகளுடன் அலரிமாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவது தொடர்பில் இதன்போது மத்திய வங்கி பிரதிநிதிகள்  வ பிரதமருக்கு விளக்கமளித்தனர்.

இவ்வாறான தொற்று நிலைமைக்கு மத்தியில் நிதிக் கடன்களை பெற்றுக்கொண்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது  பிரதமர் மஹிந்த ராஜபக்சவிசேட கவனம் செலுத்தினார்.

எனவே கடன்களை மீளப்பெறும் போது கடன்களை பெற்றுக்கொண்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கௌரவ பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தவணை கட்டணங்களை செலுத்தும் போது வட்டி தொகையை முதலில் செலுத்த வேண்டியிருப்பதால் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு கடனாளிகள் தள்ளப்பட்டுள்ளதுடன், வட்டி மற்றும் கடன் தொகையை செலுத்துவதற்கான முறையில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பிலும் இதன்போது பிரதமர் கவனம் செலுத்தினார்.

’26 கிலோ கொழுந்து பறித்தால்தான் 1000 ரூபா’ – லங்கா தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்

” ஆயிரம் ரூபா சம்பளம் வேண்டுமென்றால் 26 கிலோ கொழுந்து பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் கட்டளையிடுகின்றது. அதுமட்டுமல்ல வேலை நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்முடியாது. எமது தொழில் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்.” – என வலியுறுத்தி மஸ்கெலியா, லங்கா தோட்டத் தொழிலாளர்கள் இன்று கனவயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என சம்பள நிர்ணய சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டு அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது.

முன்னர் செய்த வேலையின் அளவுக்கே இந்த சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது, மேலதிகமாக எதையும் செய்யவேண்டியதில்லை என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு விடுத்தன.

எனினும், ஒரு மாதம் மட்டுமே எமக்கு ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. அதன்பின்னர் உரிய வகையில் சம்பளம் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டும் லங்கா தோட்டத் தொழிலாளர்கள், அதற்கான காரணங்களையும் குறிப்பிட்டனர்.

” ஆயிரம் ரூபா கிடைப்பதற்கு முன்னர் நாட் சம்பளத்துக்கு பெண்கள் 16 கிலோ கொழுந்து எடுக்க வேண்டும். தற்போது அந்த அளவு 20 கிலோ ஆக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு மூன்று தடவைகள் கொழுந்து அளக்கப்படும். ஒரு தடவைக்கு 2 கிலோ கழிக்கின்றனர். மூன்று தடவைக்கு ஆறு கிலோ கொமிஷ் அடிக்கின்றனர். அப்படியானால் ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு 26 கிலோ பறிக்க வேண்டும்.

கொழுந்து இல்லை. 18 கிலோ பறித்தால்கூட அரைநாள் சம்பளம் வழங்கப்படும் நிலை காணப்படுகின்றது.

ஆண் தொழிலாளர்கள் காலை 8 மணிக்குச்சென்று பிற்பகல் ஒரு மணிக்கு வந்துவிடுவர். தற்போது அவர்களுக்கான வேலை நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தோட்ட நிர்வாகத்தின் இந்த அணுகுமுறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

எனவே, அரசாங்கமும், தொழிற்சங்கங்களும், தொழில் அமைச்சும் தலையிட்டு எமக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.” – என்றனர் தொழிலாளர்கள்.\

க.கிசாந்தன்

‘கம்மன்பில பதவி துறக்கவேண்டும்’ – நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! சாகர மீண்டும் அறிவிப்பு

” எரிபொருட்களின் விலை அதிகரிப்புக்கான பொறுப்பையேற்று வலுசக்தி அமைச்சர் பதவி விலகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இன்னும் இருக்கின்றேன். கட்சியின் நிலைப்பாடும் அதுவே.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று அறிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பது மக்களின் கட்சியாகும். இரகசியமாக செய்யமாட்டோம். செய்வதை வெளிப்படையாகவே செய்வோம் – எனவும் அவர் கூறினார்.

எரிபொருட்களின் விலை அதிகரிப்பையடுத்து மொட்டு கட்சியின் செயலாளர் வெளியிட்ட அறிக்கை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அரசாங்கத்துக்குள்ளும் சலசலப்பை உருவாக்கியது.

இந்நிலையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பானது அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட கூட்டு முடிவாகும் என்ற அறிவிப்பும் வெளியானது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மீண்டும் சர்ச்சையைக் கிளம்பும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் சாகர.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மண்கவ்வும் – அரசு அதிரடி

” வலுசக்தி அமைச்சர் உதயகம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும்பட்சத்தில் அதனை தோற்கடிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று அரசாங்க தரப்பு அறிவித்துள்ளது.

பிரேரணையை தோற்கடிப்பதற்கு தேவையான பலம் அரசாங்கம் வசம் உள்ளது எனவும், ஆளுந்தரப்புக்குள் ஏற்பட்டிருந்த சிறு பிரச்சினைகூட இதன்மூலம் தீரும் எனவும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர்.

வலுசக்தி அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் ரமேஷ் – மக்கள் சேவை விரைவில்

கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைப்பெற்றுவந்த இ.தொ.காவின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஷ்வரன் பூரணமாக குணமடைந்து, தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்து இன்று வீடு திரும்பினார்.

இந்நிலையில் அவர் இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கை ஊடாக ரமேஷ்வரன் தெரிவித்துள்ளவை வருமாறு,

” என்னை உயிர்ப்பித்த இறைவனுக்கு முதலில் நன்றி,  அத்துடன் எனக்கு சிகிச்சையளித்த வைத்திய குழாமினருக்கும், எனக்காக ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபட்ட சர்வமதத் தலைவர்களுக்கும், எனது குடும்ப உறுப்பினர்களுக்கும், மக்களுக்கும், எமது பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், அரசியல் தலைவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தொலைபேசி ஊடாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் நலன் விசாரித்து, நான் மீண்டுவர பிரார்த்தனையில் ஈடுபட்ட அத்தனை நல்லுள்ளங்களுக்கும் மீண்டும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மக்களுக்கான எனது அரசியல் பணி மீண்டும் விரைவில் தொடரும்.” – என்றார்.

ரமேஷ்வரனின் ஊடகப்பிரிவு

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

2 சதாப்தகால காத்திருப்பு: வெற்றிக் கனியை ருசித்தது நோர்வே

0
28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவிற்குத் திரும்பியுள்ள நோர்வே அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் ஈராக் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. பாஸ்டன்...

ரணில், சஜித் அணிகளின் சங்கமம் உறுதி!

0
ஐக்கிய மக்கள் சக்தியும், தமது கட்சியும் இணைவது உறுதி என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பணிப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, இரு தரப்பு...

போர் முடிந்துவிட்டது: எரிபொருள் விலை குறைக்கப்படுமா?

0
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உடன்படிக்கையைத் தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், உள்நாட்டிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய முதல் சந்தர்ப்பத்திலேயே எரிபொருள் விலை குறைப்புக்கான பலன்...