Home Blog Page 3487

ரொனால்டோவின் செயலால் கடுப்பில் கோலா நிறுவனம்

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் செயலால் கொக்காகோலா நிறுவனத்துக்கு சுமார் 4 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.

பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மேசை மீதிருந்த கோகோ-கோலா போத்தல்களை அகற்றிவிட்டு தண்ணீர் போத்தலை வைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

யூரோ 2020 கால்பந்து தொடரின் போர்சுக்கல் போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன்னதாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோகோ-கோலா போத்தல்களை அகற்றிவிட்டு தண்ணீர் போத்தலை வைத்தார்.

அந்த வைரல் வீடியோவில், பத்திரிகையாளர் சந்திப்புக்கு ரொனால்டோ வந்தவுடன் மேசைமீது கோலா போத்தல்கள் இருந்ததை பார்த்து அதிருப்தியடைந்தார். உடனே முன்னால் இருந்த 2 கோலா போத்தல்களை எடுத்துவிட்டு, தண்ணீர் போத்தலை தூக்கி, “அகுவா” என தெரிவித்ததோடு (தண்ணீருக்கான போர்ச்சுக்கீசிய வார்த்தை) மக்கள் குளிர்பானங்களுக்கு பதிலாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சமிக்ஞை செய்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் போர்ச்சுகல் அணியின் மேலாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் கலந்து கொண்டார். இருப்பினும், சேவையில் வைக்கப்பட்டிருந்த கோலா போத்தல்களை அவர் அகற்றவில்லை. யூரோ 2020 போட்டிக்கான ஸ்பான்சர்களில் கோகோ கோலாவும் ஒன்றாகும்.

‘கடன் தவணையை தள்ளுபடி செய்யவும்’ – இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை

அதிபர் மற்றும் ஆசிரியர்கள் வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு சலுகை வழங்குமாறு நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது – என்று குறித்த சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் கோவிட் -19 தொற்றுநோய் தீவிரமாகப் பரவியுள்ளதனால் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கிட்டத்தட்ட இவ் வருடம் மூன்று மாதங்களாகப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.இத்தகைய சூழ்நிலையில். மாணவர்களுடைய கல்வியை நிகழ்நிலை மூலம் புதுப்பிப்பதற்காக தேவையான கருவிகளை மற்றும் டேட்டாக்களை அரசாங்க நிதியுதவி இன்றி தங்கள் தனிப்பட்ட செலவில் கொள்வனவு செய்வதன் மூலமே கற்பித்தல் செயல்பாடுகள் நடைபெறுகிறது.

அரச சேவையில் 24 ஆண்டுகால கடுமையான சம்பள முரண்பாடுகள் காரணமாக ஆசிரியர்களும் அதிபர்களும் அல்லற்படுகின்றமை அனைவரும் அறிந்த விடயமாகும்.

தரம் 1 ஆசிரியரின் குறைந்தபட்ச தினசரி ஊதியம் சுமார் 1498 ரூபாய் ஆகும். 2-1 2 -2 3 -1 மற்றும் 3 -2 தரம் ஆசிரியர்களின் தினசரி சம்பளம் அதைவிடக் குறைவாகும். இந்தச் சூழ்நிலையில் பெரும்பான்மையான ஆசிரியர்கள் கடுமையான பொருளாதார கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.

எனவே, குருசேதா போன்ற பல்வேறு வங்கிக் கடன் திட்டங்களால் பெறப்பட்ட கடன்களுக்கான மாதாந்த தவணைகளையும் அதற்கான வட்டியையும் திருப்பிச் செலுத்த வேண்டாம் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்த மாதத்திலிருந்து (  ஜூன்) மீண்டும் பாடசாலைகள் திறக்கும் வரை கடன் தள்ளுபடி வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சேவை கேட்டுக்கொள்கிறது.

மேலும், சில ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தமது தனிச் சம்பளத்தில் மாத்திரமே வாழ்க்கையைக் கொண்டு நடத்துகின்றார்கள் என்பதுடன் தனியார் வகுப்புகள் நடத்துவது, வேறு பல வருமானங்களை நம்பி கடன் வாங்கிய ஆசிரியர்கள் அனேகமானோர் உள்ளனர் என்பதையும், இதனால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் குறிப்பாக சுட்டிக் காட்டுகின்றோம்.

எனவே மேலே குறித்த காட்டப்பட்ட நிலைமைகளுக்கு ஏற்ப நாட்டில் நாளுக்கு நாள் உயரும் வாழ்க்கை செலவுகள் மத்தியிலும், அவர்களின் மிகக் குறைந்த சம்பளத்துடன் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீட்டெடுப்பதற்கு நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு இந்தச் சலுகையை வழங்குவது உங்கள் பொறுப்பு என்பதையும் நாங்கள் வலியுறுத்துகிறோம் என உபதலைவர் பிரதீப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடிதத்தின் பிரதிகளை ஜனாதிபதி, கல்வி அமைச்சர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

‘பதுளையில் 3,814 பேருக்கு இதுவரை கொரோனா – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி’

பதுளை மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,814 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, கொரோனாவால் பதுளை மாவட்டத்தில் இதுவரை சுமார் 40 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பசறை பகுதியிலேயே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொவிட் தொற்றனால் உயிரிழந்துள்ளனர்.

71 வயதுடைய நபர் (தந்தை) , 72 வயதுயடைய அவரது மனைவி (தாய்) மற்றும் 22 வயதுடைய மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தாயும், மகளும் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருந்த நிலையில் தந்தை நேற்று உயிரிழந்துள்ளார்.

பயணத்தடைக்கு மத்தியில் ஹெரோயின் கடத்தியவர் கம்பளையில் கைது!

நாட்டில் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில், கொழும்பிலிருந்து மிகவும் சூட்சுமமான முறையில் கம்பளைக்கு ஹெரோயின் கடந்திய நபரொருவர் கம்பளை பொலிஸாரால் நேற்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவரிடமிருந்து 3 கிராம் 500 மில்லிகிராம் ஹேரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கம்பளை, கங்கவட்ட பகுதியில் வசிக்கும் 41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து எவ்வாறு ஹெரோயின் கடத்தப்பட்டுள்ளது, எவ்வளவு காலம் விற்பனை செய்ப்பட்டுவந்துள்ளது, இதன் பின்னணியில் செயற்படுபவர்கள் யார் என்பன உள்ளிட்ட விடயங்களைக் கண்டறிவதற்காக கம்பளை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கம்பளை நிருபர் – லாவண்யா

ரணிலின் ஆட்டம் விரைவில் – ஆவணம் கையளிப்பு

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்கவை பெயரிடுமாறுகோரும் ஆவணத்தை தேர்தல் ஆணைக்குழுவிடம், ஐ.தே.கவின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார இன்று கையளித்தார்.

அதன்பின்னர் இது தொடர்பான அறிவித்தல் அடங்கிய அரசிதழை தேர்தல் ஆணைக்குழு வெளியிடும்.

எதிர்வரும் 22 அல்லது 23 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஸ்கெலியாவில் 53 பேருக்கும், ராகலையில் 28 பேருக்கும் கொரோனா!

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 162 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரவுகளும், வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,

பொவந்தலாவ – 04

ஹங்குராந்கெத்த – 03

ஹட்டன் – 05

கந்தபளை – 21

கொத்மலை – 04

லிந்துலை -03

மஸ்கெலியா – 53

மத்துரட்ட – 07

நோட்டன் பிரிட்ஜ் – 03

நுவரெலியா – 14

பூண்டுலோயா – 05

பட்டிபொல – 06

ராகலை – 28

தலவாக்கலை – 02

உடபுஸல்லாவை – 05

 

அணு ஆயுதங்களை குவிக்கும் 9 நாடுகள்! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

உலகின் 9 நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. அவை அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வட கொரியா ஆகும்.

சுவீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (எஸ்.ஐ.பி.ஆர்.ஐ.) பல்வேறு நாடுகளின் அணு ஆயுத குவிப்பு பற்றி விரிவாக ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தயாரித்து, அதை ‘எஸ்.ஐ.பி.ஆர்.ஐ. ஆண்டு புத்தகம் 2021’ என்ற தலைப்பில் வெளியிட்டு, உலக அரங்கை அலற வைத்திருக்கிறது. அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* உலகின் 9 நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. அவை அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வட கொரியா ஆகும்.

* உலகளவில் குவிக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 80 ஆகும். இவற்றில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆயுதங்கள் இரு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷியா வசமே உள்ளன.

* கடந்த ஆண்டு ஜனவரி நிலவரப்படி சீனாவிடம் 320, பாகிஸ்தானிடம் 160, இந்தியாவிடம் 150 அணு ஆயுதங்கள் இருந்தன.

* சீனாவைப் பொறுத்தமட்டில் அது அணு ஆயுதங்களின் குறிப்பிடத்தக்க நவீனமயமாக்கல் மற்றும் ஆயுதங்கள குவிப்பின் நடுவில் உள்ளது.

* இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத இருப்பை விஸ்தரித்து வருவதாக தெரிகிறது.

* ரஷியாவிடம்தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் 6,375 அணு ஆயுதங்கள் உள்ளன. அதற்கு அடுத்த நிலையில் அமெரிக்கா (5,800) உள்ளது. இங்கிலாந்திடம் 225, பிரான்சிடம் 290, இஸ்ரேலிடம் 90, வடகொரியாவிடம் 40-50 அணு ஆயுதங்கள் இருக்கின்றன.

* சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய வல்லரசு நாடுகள் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் அல்லது பிரிக்கப்பட்ட புளூட்டோனியம் ஆகியவற்றையே தங்கள் அணு ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்துகின்றன.

* இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் ஏவுகணை சோதனைகள் பற்றி அறிக்கைகளை வெளியிடுகின்றன. ஆனால் அவற்றில் நிலை அல்லது அணு ஆயுதங்களின் அளவு பற்றி எந்த தகவலையும் அளிப்பதில்லை.

* உலகமெங்கும் உள்ள 13 ஆயிரத்து 80 அணு ஆயுதங்களில் 2,000 அணுகுண்டுகள், அதிக செயல்பாட்டு எச்சரிக்கையுடன் இருக்கின்றன.

* சவூதி அரேபியா, இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய 5 நாடுகள் 2016-20 ஆண்டுகள் இடையே அதிகளவிலான ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளன.

* சவூதி அரேபியா உலகளவிலான ஆயுத இறக்குமதியில் 11 சதவீதத்தையும், இந்தியா 9.5 சதவீதத்தையும் இந்த கால கட்டத்தில் செய்துள்ளன.

இவ்வாறு அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளன.

இந்த புத்தகத்தில் வெளியாகி உள்ள அணு ஆயுதங்கள் இருப்பு, ஆயுத இறக்குமதி, அணு ஆயுதங்களுக்கு கச்சாப்பொருளாக பயன்படுத்தப்படக்கூடிய பொருட்கள் பற்றிய தகவல்கள் உலக அரங்கை அதிர வைத்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்துக்கு இலங்கை பதிலடி

இலங்கையின் இறையாண்மையை சவாலுக்குட்படுத்தி அரசமைப்பில் மாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுப்பதற்கான அதிகாரம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கிடையாது. இவ்விவகாரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு உரிய வகையில் தலையிடும் – என்று அரசு அறிவித்துள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள GSP+ வரிச் சலுகை மற்றும் அதனால் கிடைக்கும் பிரதிபலன்களை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துமாறு கோரும் தீர்மானமொன்றை ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றம் கடந்த 10 ஆம் திகதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இலங்கை அரசுக்கு பலவந்தப்படுத்தல் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச்செய்ய இயலாது போயுள்ளமை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல கூறியவை வருமாறு,

” ஆடைக் கைத்தொழில் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள்மீதே ஜி.எல்.பி. பிளஸ் வரிச்சலுகை தாக்கம் செலுத்துகின்றது.எனவே, துறைசார் விடயங்கள் தொடர்பில் கோரிக்கை முன்வைப்பதற்கான உரிமை சம்பந்தப்பட்ட ஒன்றியத்துக்கு இருக்கின்றது. குறிப்பாக சிறுவர் ஊழியர்கள் மற்றும் ஆடைத்தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கான அடிப்படை வசதிகள் மறுக்கப்படுமானால் அவை தொடர்பில் கேள்வி எழுப்பலாம்.

இலங்கை என்பது சுயாதீன நாடாகும். அரசமைப்பின் பிரகாரமே ஆட்சி முன்னெடுக்கப்படுகின்றது. அந்த அரசமைப்பானது மக்கள் இறைமைக்கு உட்படுத்தப்பட்டது. நிறைவேற்று, சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை ஊடாக மக்களின் இறைமை பாதுகாக்கப்படுகின்றது.

எமது நாட்டுக்கு உதவி வழங்கும் ஏதேனுமொரு நிறுவனம் அல்லது ஒன்றியத்துக்கு இறைமையை சவாலுக்குட்படுத்தி, அரசமைப்பை திருத்துமாறு கோருவதற்கான உரிமை எவ்வாறு கிடைக்கின்றது? அவ்வாறு செய்யாவிட்டால் ‘கழுத்தில் துப்பாக்கி வைப்போம்’ என்ற தொனியில் மிரட்டுவது சாதாரண விடயமா? இது எனது கருத்து. வெளிவிவகார அமைச்சு இது விடயத்தில் தலையிட்டு செயற்படும்.” – என்றார்.

“நாட்டில் மீண்டுமொரு அலை ஏற்படும் அபாயம்” – மருத்துவர் சங்கம் எச்சரிக்கை

“பயங்கரமான நிலையிலிருந்து இலங்கை மீண்டுவிட்டது என கூறமுடியாது. எனவே, பயணக்கட்டுப்பாட்டை ஒரேடியாக தளர்த்தினால் மீண்டுமொரு அலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது.” – என்று இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன எச்சரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட பயங்கரமான கட்டத்தை நாம் கடந்துவிட்டோம் என எந்த அடிப்படையிலும் குறிப்பிடமுடியாது. ஏனெனில் சுகாதார அமைச்சின் தரவுகளின் அடிப்படையில் நாளாந்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

எனவே, ஒரேடியாக வழமைக்கு திரும்பும் வகையில் பயணத்தடையை தளர்த்தக்கூடாது. அவ்வாறு செய்தால் மீண்டும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து புதிய அலை உருவாகக்கூடும். எனவே, உரிய மீளாய்வுகளின் பின்னரே பயணத்தடை தளர்த்தப்பட வேண்டும்.” – என்றார்.

கம்மன்பிலவின் தலை குறிவைப்பு! மனோ அணி ஆதரவு – இ.தொ.கா. எதிர்ப்பு!!

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நடைபெற்றது.

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பின்னர் சஜித் பங்கேற்கும் முதல் அரசியல் சந்திப்பு இதுவாகும். இக்கூட்டத்தின்போது சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

குறிப்பாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மேலும் சுமையை திணிக்கும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரிக்கப்பட்டுள்ளதால் அதனை மையப்படுத்தியே வலுசக்தி அமைச்சருக்கு எதிராக பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றம் எதிர்வரும் 22 ஆம் திகதி சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. இதன்போது மேற்படி பிரேரணை கையளிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இப்பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கவுள்ளன.

அரச பங்காளிக்கட்சியான இ.தொ.கா எதிராக வாக்களிக்கவுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக்கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவாக வாக்களிக்கும் என தெரியவருகின்றது.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

போர் முடிந்துவிட்டது: எரிபொருள் விலை குறைக்கப்படுமா?

0
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உடன்படிக்கையைத் தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், உள்நாட்டிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய முதல் சந்தர்ப்பத்திலேயே எரிபொருள் விலை குறைப்புக்கான பலன்...

மெஸ்ஸி சாதனை: அல்ஜீரியாவை வீழ்த்தியது அர்ஜென்டினா

0
அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி தனது ஆறாவது உலகக் கோப்பை தொடரில் வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளார். அல்ஜீரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் மூன்று கோல்களை அடித்து அசத்தியதுடன், உலகக் கோப்பையில் அதிக கோல்கள்...

கல்வி அபிவிருத்தி உதவிக் கல்விப் பணிப்பாளராக நிக்கலஸ் நியமனம்!

0
நுவரெலியா கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்தி உதவிக் கல்விப் பணிப்பாளராக நிக்கலஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதத்தை நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் டீ.எம்.எஸ்.டி.திஸாநாயக்கவிடமிருந்து பெற்றுக்கொண்டார். நுவரெலியா கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்தி உதவிக் கல்விப்...