Home Blog Page 3488

மத்திய மாகாணத்தில் 14 நாட்களில் 3,823 பேருக்கு கொரோனா

மத்திய மாகாணத்தில் ஜுன் முதலாம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதியில் 3 ஆயிரத்து 823 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் கண்டி மாவட்டத்தில் 1,731 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 1,464 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 628 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

ஜனாதிபதி – கூட்டமைப்பு சந்திப்பு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு

இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் நாளை மாலை நடைபெறவிருந்த நேரடிப் பேச்சு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுப் பற்றிய விவரம் வெளிவந்ததால் தெற்கில் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அழுத்தத்தையடுத்தே அவர் பேச்சை இப்போதைக்குத் தள்ளிப்போடும் முடிவை எடுத்திருக்கின்றார் எனக் கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய பேச்சுத் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி செயலகம் இன்று மாலை அறிவித்துள்ளது என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

‘கொரோனா’ ஊழித்தாண்டவம் – நாட்டில் மேலும் 55 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் மேலும் 55 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று வெளியிட்டுள்ளார்.

33 ஆண்களும், 22 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2ஆயிரத்து 315 ஆக அதிகரித்துள்ளது.

‘சாபக்கேடான அரசால் அதளபாதாளத்தை நோக்கி நாடு’ – ராதா குற்றச்சாட்டு

இலங்கை தற்போது அதளபாதாளத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. மக்கள் வைத்த நம்பிக்கையும் தவிடுபொடியாகி விட்டது. இந்த அரசாங்கம் நாட்டிற்கே சாபக்கேடான அரசாங்கமாகும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க்க பல சதி முயற்சிகளை மேற்கொண்டு நாட்டை கைப்பற்றி இன்று முழுநாட்டு மக்களையும் அதளபாதாளத்தில் தள்ளுகிறது இந்த அரசாங்கம். ஒருபக்கம் தோட்டத்தொழிலாளர்கள் மிகப்பெரிய பொருளாதார சிக்கலை எதிர்க்கொள்கின்றனர். பெற்றோல் விலையை அதிகரித்து முச்சக்கரவண்டி சாரதிகள் வயிற்றில் அடித்து விட்டார்கள்,

உரத்தை பதுக்கி வைத்து விவசாயிகளின் வயிற்றில் அடித்து விட்டார்கள்,எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதைத்தவிர வாழ்வாதரத்தை இழந்தவர்களுக்கு 5000 நிவாரண தொகை தருவதாக கூறி அதையும் ஏமாற்றி விட்டனர்.

இதைத்தைவிர மதகுருமார்கள், இசைக்கலைஞர்கள், சிறுவியாபாரிகள் என ஒட்டுமொத்த நாட்டுமக்களின் வாழ்க்கையிலும் வயிற்றில் அடித்த இந்த அரசாங்கம் உண்மையில் நாட்டிற்கும் நாட்டுமக்களுக்கும் சாபக்கேடான அரசாங்கம். ” – என்றார்.

நிருபர் – நீலமேகம் பிரசாந்த்

 

‘ஜனாதிபதி செயலாளரை உடன் நீக்கவும்’ – முறுத்தெட்டுவ ஆனந்த தேரர் வலியுறுத்து

ஜனாதிபதி செயலாளர் பிபி ஜயசுந்தரவை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அபயராம விகாரையின் விகாராதிபதி முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் வலியுறுத்தினார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

” நாட்டு மக்களின் ஆதரவை குறுகிய காலப்பகுதியில் இழந்த அரசாங்கமாக கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமே காணப்படுகின்றது. ஜனாதிபதிக்கு இந்நிலைமை ஏற்படுவதற்கு பிபி ஜயசுந்தரதான் காரணம். எனவே, அவரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பாரிய எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

மக்களின் மனம் அறிந்த ஒருவரை அப்பதவிக்கு நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.”  -எனவும் தேரர் வலியுறுத்தினார்.

நாட்டில் மேலும் 1,843 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் ஆயிரத்து 843 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு லட்சத்து 27 ஆயிரத்து 765 ஆக அதிகரித்துள்ளது.

அ.தி.மு.கவை அழியவிடமாட்டேன் – சசிகலா சபதம்

மதுரையை சேர்ந்த குபேந்திரன் என்ற ஆதரவாளரிடம் சசிகலா நேற்று மீண்டும் பேசி உள்ளார்.

சசிகலா தொடர்ந்து தொண்டர்களுடன் பேசி வரும் நிலையில், நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பி. உள்பட 16 பேர் அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நேற்று நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், மதுரையை சேர்ந்த குபேந்திரன் என்ற ஆதரவாளரிடம் சசிகலா நேற்று மீண்டும் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:

கட்சிக்காரர்கள் எல்லாம் மிகவும் வருத்தப்படுகிறீர்கள். தொண்டர்கள் எல்லாரும் என்னுடன் இருக்கும்போது, கட்சியை அழிய விடமாட்டேன். விரைவில் தொண்டர்களை சந்திக்க வருகிறேன்.

1987-ம் ஆண்டு எம்ஜிஆர் இறந்தபோது ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சினையை உடன் இருந்து எதிர்கொண்டுள்ளேன். அதில் இருந்து மீண்டு வந்துதான் ஆட்சியை அமைத்தோம்.

எனவே, இவர்கள் செய்வது எல்லாம் எனக்கு புதிது இல்லை. ஜெயலலிதாபோல நாமும் தொண்டர்களுடன் வந்து காட்டி, ஆட்சியையும் அமைப்போம்.

நான் கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

39 மனைவிகள்! 94 பிள்ளைகள்! உலகின் சாதனைக்குடும்ப குலவிளக்கு அணைந்தது!

உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் காலமானார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிஸரோம் பிரதேசத்திலுள்ள நகரில் நான்கு தளங்கள் கொண்ட வீட்டில் சுமார் நானூறு பேர் கொண்ட தனது குடும்ப உறுப்பினர்களுடன் வாழ்ந்து வந்த Ziona   உடல் நலக்குறைவினால் காலமானார். இறக்கும்போது இவருக்கு வயது 76.

மிஸரோம் பிரதேசத்தின் Aizawl என்ற இடத்தை சேர்ந்த Ziona குறிப்பிட்ட மதப்பிரிவை பின்பற்றுபவர். அந்த மதத்தின் பலதார மணம் எனப்படுகின்ற திருமண முறை அனுமதிக்கப்பட்ட ஒன்று என்று கூறப்படுகிறது.

1959 ஆம் ஆண்டு தனது 15 ஆவது வயதில் முதல் திருமணத்திற்குள் காலடி எடுத்துவைத்த Ziona 2004 ஆம் ஆண்டு 25 வயதுப்பெண்ணை மணந்துகொண்டதுடன் நிறுத்திக்கொண்டார். இவருக்கு 33 பேரப்பிள்ளைகளும் ஒரேயொரு பூட்டக்குழுந்தையும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் ஆரம்பத்தில் இரத்த அழுத்தம் – நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்ட Ziona மேலதிக சிகிச்சைக்காக நகர்புற வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லவேண்டியிருந்தார். ஜூன் 11 ஆம் திகதிமுதல் சுயநினைவற்ற நிலைக்கு சென்றார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்தினார்.

2011 ஆம் ஆண்டு உலகின் அபூர்வ மனிதர்கள் என்ற தொடரில் Ziona இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டா, சம்பந்தன் நாளை அவசர சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நாளை இடம்பெறவுள்ளது.

இரா. சம்பந்தன் எம்.பியும், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை 4.30 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஜி.எஸ்.பி. வரிச் சலுகையைத் தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்குவதற்கான நிபந்தனையாக ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இலங்கை வழங்கிய உறுதிமொழிப்படி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இலங்கை நீக்கி, மாற்ற வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை இலங்கை இழக்கும் ஆபத்து நிலைமை குறித்து காட்டமான கருத்தை கூட்ட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசுக்கும் நாட்டுக்கும் வெளிநாட்டு செலாவணியை ஈட்டித் தரும் ஒரே மார்க்கம் ஜி.எஸ்.பி. வரிச் சலுகை மூலமான ஏற்றுமதிதான். இப்போதைய நெருக்கடி நிலையில் அது இரத்துச் செய்யப்பட்டால், நாட்டுக்குப் பெருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

இந்த இக்கட்டான நிலைமையைச் சமாளிக்கவே முதல் படியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சு நடத்த ஜனாதிபதி முன்வந்துள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இதுவரை உத்தியோகபூர்வமான பேச்சுக்கள் எதையும் நடத்தவில்லை.

“புதிய அரசுடன் பேச்சு நடத்த நாம் தயார். ஆனால், அரசுப் பக்கத்தில் ஜனாதிபதிதான் எம்மைப் பேச்சுக்கு அழைக்க வேண்டும். அந்த அழைப்புக்கு நாம் காத்திருக்கிறோம்” என்று கூட்டமைப்பினர் ஏற்கனவே கருத்துக்களை வெளியிட்டு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்பஹாவில் 526 – இரத்தினபுரியில் 260 – பதுளையில் 98 பேருக்கும் கொரோனா

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக வருமாறு,

கொழும்பு –287

கம்பஹா – 526

களுத்துறை – 155

கேகாலை –77

குருணாகல் – 59

காலி – 134

மாத்தறை – 12

பதுளை – 98

அம்பாறை – 29

மாத்தளை – 40

அநுராதபுரம் – 8

முல்லைத்தீவு – 1

மன்னார் – 5

வவுனியா – 13

திருகோணமலை – 31

நுவரெலியா – 123

கண்டி – 93

இரத்தினபுரி – 260

புத்தளம் – 91

யாழ்ப்பாணம் –61

கிளிநொச்சி –30

பொலன்னறுவை –15

அம்பாந்தோட்டை – 35

மொனறாகலை – 29

மட்டக்களப்பு –47

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

மெஸ்ஸி சாதனை: அல்ஜீரியாவை வீழ்த்தியது அர்ஜென்டினா

0
அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி தனது ஆறாவது உலகக் கோப்பை தொடரில் வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளார். அல்ஜீரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் மூன்று கோல்களை அடித்து அசத்தியதுடன், உலகக் கோப்பையில் அதிக கோல்கள்...

கல்வி அபிவிருத்தி உதவிக் கல்விப் பணிப்பாளராக நிக்கலஸ் நியமனம்!

0
நுவரெலியா கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்தி உதவிக் கல்விப் பணிப்பாளராக நிக்கலஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதத்தை நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் டீ.எம்.எஸ்.டி.திஸாநாயக்கவிடமிருந்து பெற்றுக்கொண்டார். நுவரெலியா கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்தி உதவிக் கல்விப்...

செம்மணி அகழ்வுத் தளத்தை வெள்ளியன்று நேரில் பார்வையிடுகின்றார் நீதி அமைச்சர்

0
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகப் பிரதானிகள் ஆகியோர் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிடவுள்ளனர். செம்மணி மனிதப் புதைகுழி...