Home Blog Page 3561

மாகாணசபைத் தேர்தல் வேண்டாம் – அபாய சங்கு ஊதுகிறது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

நாட்டை பிளவுபடுத்துவதற்கு எஞ்சியுள்ள ஒரே வழி மாகாணசபை முறைமையாகும். எனவே, தற்போதைய சூழ்நிலையில் மாகாணசபைகளுக்கான தேர்தலை அரசு நடத்தவேகூடாது.” – என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டை பிளவுபடுத்தும் நோக்கிலேயே மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியாவும், மேற்குலகமும் ஜெனிவாத் தொடரில் வலியுறுத்திவருகின்றன. மேற்படி அழுத்தங்களுக்கு அரசு அடிபணியக்கூடாது. மாறாக இந்தியாவையும், மேற்குலகையும் திருப்திப்படுத்துவதற்காக தேர்தல் நடத்தப்படுமானால் பாரிய விளைவுகளை சந்திக்கவேண்டிய நிலை அரசுக்கு ஏற்படும்.

தற்போதைய மாகாணசபை முறைமை என்பது நிர்வாக ரீதியில் வெள்ளை யானையாகும். நாட்டை பிளவுபடுத்துவதற்கு எஞ்சியுள்ள வழியாகவும் அது அமைந்துள்ளது. எனவே, அத்தகைய முறைமைக்கு அரசு உயிர் கொடுக்க முற்படக்கூடாது.

புதிய அரசமைப்பு ஊடாக அபிவிருத்தி சபைகள் உருவாக்கப்பட்டு, பிரிவினைவாத சிந்தனைகள், கோட்பாடுகளை தடைசெய்துவிட்டு வேண்டுமானால் அந்த அபிவிருத்தி சபைகளுக்கு அரசு தேர்தலை நடத்தலாம். அதற்கு முன்னர் நடத்தக்கூடாது. 13ஆவது திருத்தச்சட்டமும் எமது நாட்டுக்கு அவசியம் இல்லை.” – என்றார்.

14,455 பேருக்கு நேற்று கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றப்பட்டது

நாட்டில் கடந்த ஜனவரி 29 ஆம் திகதி முதல் நேற்றுவரை 8 லட்சத்து  84 ஆயிரத்து 164 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. நேற்று மாத்திரம் 14 ஆயிரத்து 455 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இ.தொ.காவின் புதிய தலைவர் யார்? நியமனம் எப்போது?

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவர் எதிர்வரும் மே மாதத்துக்கு பிறகு நியமிக்கப்படவுள்ளார் என அரசியல்  வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக இருந்த ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்து 10 மாதங்கள் கடந்துவிட்டன. ஆனாலும் இ.தொ.காவின் தலைமைப்பதவி இன்னும் வெற்றிடமாகவே உள்ளது.

தொண்டமானின் மறைவின் பின்னர் தலைமைத்துவம் தொடர்பில் இ.தொ.காவுக்குள் மோதல் ஏற்பட்டது. கட்சி பிளவுபடுவதை தடுப்பதற்காக தலைவர் பதவிக்கு எவரும் நியமிக்கப்படவில்லை. தொண்டமானின் மகனான ஜீவன் தொண்டமானுக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இறுதிக்கிரியைகள் முடிவடைந்த பின்னர் தேசியசபைக்கூடி புதிய தலைவரை தெரிவுசெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், சில தடவைகள் தேசியசபை கூடியும் தலைவர் நியமிக்கப்படவில்லை. 10 மாதங்கள் கடந்துள்ளன.

அமரர் ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்து எதிர்வரும் மே மாதத்துடன் ஓராண்டு பூர்த்தியாகின்றது. அதன்பின்னரே புதிய தலைவர் நியமிக்கப்படக்கூடும் என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் ஜீவனுக்கே தலைமைப்பதவி வழங்கப்படலாம் என உள்ளக தகவல்கள் சொல்கின்றன.

2024 ஜனாதிபதித் தேர்தல் – சஜித்துக்கு எதிராக வியூகம் வகுக்கிறாரா சம்பிக்க?

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது மாநாடு அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கடந்த 15 ஆம் திகதி கொழும்பில் கோலாகலமாக நடைபெற்றது. இம்மாநாட்டில் உரையாற்றிய அரசியல் பிரமுகர்கள், தற்போதைய அரசின் செயற்பாடுகளை சரமாரியாக விமர்சித்ததுடன், 2024 இல் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி மலரும் எனவும் நம்பிக்கை வெளியிட்டனர்.

‘43’ எனும் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்துள்ள சம்பிக்க ரணவக்கவும் மாநாட்டில் பங்கேற்று ராஜபக்சக்களை தனக்கே உரிய பாணியில் கடுமையாக விளாசித் தள்ளினார்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமிக்கும் நோக்கிலேயே ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து சம்பிக்க ரணவக்க தனது சகாக்களுடன் வெளியேறினார். எனினும், அவர் இன்னும் உறுப்புரிமை பெறவில்லை. ராஜித சேனாரத்ன, குமார வெல்கம ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியில் உறுப்புரிமையை பெற்றிருந்தாலும் சம்பிக்க விவகாரமே இன்னும் இழுபறியில் இருக்கின்றது.

முதலாவது மாநாட்டுக்கு முன்னர் இப்பிரச்சினைக்கு முடிவு காணப்படும் என அறிவிப்புகள் வெளியாகியிருந்தாலும், குழப்பநிலை நீடிப்பதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக சம்பிக்க ரணவக்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவர் பதவியை வழங்குவதற்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். மறுபுறத்தில் அதிகாரமற்ற பதவியை ஏற்பதற்கு சம்பிக்கவும் தயாரில்லை. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவர் 43 எனும் இயக்கத்தை ஆரம்பித்துள்ளார்.

மாநாட்டுக்கு முன்னர் சம்பிக்க ரணவக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது ‘43’ எனும் அரசியல் இயக்கத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் ஓர் கிளையாக கொண்டு நடத்துமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இதற்கிடையில் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்தே சம்பிக்க இவ்வாறானதொரு இயக்கத்தை ஆரம்பித்துள்ளார் என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியானது சஜித் பிரேமதாசவை பெயரிட்டுள்ளது. ஆக சஜித்துக்கு எதிராக சம்பிக்க செயற்படுவாரா என்ற வினாவும் எழுகின்றது.

சச்சின் டெண்டுல்கருக்கும் கொரோனா வைரஸ் தொற்று

மாஸ்டர் பிளாஸ்டர் என அழைக்கப்படும் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மருத்துவர்களின் அறிவுறையின்படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சச்சின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை சச்சின் டெண்டுல்கரின் குடும்ப உறுப்பினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இனிதான் எனது ஆட்டம் உச்சம் தொடும் – ஷகிலா

”இப்போது தான் அரசியலில் நுழைந்துள்ளேன். இனி போக போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” என நடிகை ஷகிலா கூறினார்.

1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின.

அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்.

பெண்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் அரசியலுக்கு வந்து இருக்கிறேன். நடிகை என்பதை தாண்டி ஒரு தனி அடையாளம், தனி அதிகாரம் பெற விரும்புகிறேன். நல்லது செய்ய வேண்டும் என்றாலும் கூட ஒரு ‘பவர்’ வேண்டும்.

நிச்சயமாக எனது தேவைக்காக மட்டுமே அரசியலுக்கு வரவில்லை. காங்கிரசில் இருந்து குஷ்பு விலகியதால், அந்த இடத்தை நிரப்புவதற்காக நான் வந்துள்ளேனா? என்று கேட்கிறார்கள். நிச்சயமாக இல்லை. குஷ்புவுடன் என்னை ஒப்பிட வேண்டாம். எனக்கு அவர் சீனியர். காங்கிரசில் நான் இணைந்தது போல, இந்த கட்சியில் இருந்து அவர் விலகிச் சென்றதற்கும் ஒரு காரணம் இருக்கும்.

கட்சித் தலைமை அனுமதி அளிக்கும் பட்சத்தில் நிச்சயம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன். அரசியல் ஒருபுறம் இருந்தாலும் எனது சினிமா பயணம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, ‘சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளீர்கள். உங்களது அடுத்த கட்ட நகர்வுகள் எப்படி இருக்கும்? தேர்தல் களத்தில் மற்ற கட்சிகளை அதிரடியாக விமர்சித்து பேசுவீர்களா?’, என்று நிருபர்கள் ஷகிலாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, “ஏன்… இப்பவே இத்தனை கேள்வி கேக்குறீங்க… அரசியலுக்கு இப்போதான் வந்திருக்கேன். கொஞ்சம் கொஞ்சமா பல விஷயங்களை கத்துக்கிட்டு இருக்கேன். இனி என் ஆட்டத்தை போகப்போக பார்ப்பீங்க, என சிரித்தபடி கூறினார்.

“20 சிக்ஸர்கள்” இந்திய அணியை பந்தாடியது இங்கிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 2ஆவது ஒருநாள் போட்டி புனேயில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற  இங்கிலாந்து அணி தலைவர் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ஓட்டங்களைக் குவித்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 108 ஓட்டங்களையும், ரிஷப் பண்ட் 77 ஓட்டங்களையும் பெற்றனர்.

பின்னர் 337 என்ற  வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. 43.3 ஓவர்களில் 337 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை எளிதாக வீழ்த்தியது.

ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஸ்டோக்சின் அதிரடியான ஆட்டமே இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாகும். அதிகபட்சமாக ஜேசன் ராய் 55, ஜானி பேர்ஸ்டோ 124, ஸ்டோக்ஸ் 99 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து அணியின் மொத்த சிக்சர் எண்ணிக்கை 20 ஆகும். அதில் ஜானி பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ் ஆகிய 2-பேரும் சேர்ந்து 17 சிக்சர்களை அடித்துள்ளனர். இந்திய அணி மொத்தமாகவே 17 சிக்சர்கள் மட்டுமே அடித்திருந்தது.

இந்நிலையில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர்.

மலையக கரப்பந்தாட்ட வீராங்கனை சாதனை – ஒப்பந்தம் செய்தது மாலைதீவு!

பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஸ்பிரிங்வெலி தோட்ட , மேமலை பிரிவில் வசிக்கும் செல்வி. ஜெயராம் திலக்ஸனா என்ற கரப்பந்தாட்ட வீராங்கனை மாலைதீவு கரப்பந்தாட்ட கழகம் ஒன்றில் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்ப்பட்டுள்ளார்.

கடந்த மாத இறுதியில் இருந்து காலியில் இடம்பெற்ற கெலக்ஸி கோப்பைக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெற்றது. இதில் இலங்கை மகளிர் கரப்பந்தாட்ட தரப்படுத்தலில் உள்ள முதல் 8 அணிகள் பங்குப்பற்றுவது வழமையாகும்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கரப்பந்தாட்ட அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி மேமலை தோட்டத்தைச் சேர்ந்த திலக்ஸனா, சிரிசாந்தி ஆகிய வீராங்கனைகள் விளையாடினர். இவர்களில் திலக்ஸனா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரில் பிரகாசித்தமையின் காரணமாக மாலைதீவு கரப்பந்தாட்ட விளையாட்டு கழகம் ஒன்றிற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு கரப்பந்தாட்ட விளையாட்டு கழகம் ஒன்றில் விளையாட ஒப்பந்தமான முதல் இலங்கை வீராங்கனை என்ற பெருமையையும் இவர் தனதாக்கி கொண்டுள்ளார். இது குறித்து இவ்வீராங்கனையின் பாடசாலை பயிற்சி ஆசிரியரும் தற்போதைய வேவல்ஹின்ன தமிழ் வித்தியாலய உப அதிபருமான என்.சுந்தராஜ் கருத்து தெரிவிக்கையில்

மலையகத்தின் புரட்சி லயத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதற்கு திலக்ஸனா சிறந்த முன்னுதாரணம். இவர் 2012 ஆம் ஆண்டு எனது பயிற்சியின் மேமலை தமிழ் வித்தியாலய கரப்பந்தாட்ட அணிக்கு விளையாடி பல வெற்றிகளுக்கு காரணமானார்.இவரது வளர்ச்சி மலையகத்திற்கு முன்னுதாரணமாக இருப்பதையிட்டு பெருமை அடைகின்றேன் என குறிப்பிட்டார்.

இவ் வீராங்கனை இப்பகுதியில் உள்ள விரியும் சிறகுகள் விளையாட்டு கழகத்தின் அங்கத்தவர் ஆவார்.

பசறை நிருபர்

மலையக கரப்பந்தாட்ட வீராங்கனை சாதனை – ஒப்பந்தம் செய்தது மாலைதீவு!

பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஸ்பிரிங்வெலி தோட்ட , மேமலை பிரிவில் வசிக்கும் செல்வி. ஜெயராம் திலக்ஸனா என்ற கரப்பந்தாட்ட வீராங்கனை மாலைதீவு கரப்பந்தாட்ட கழகம் ஒன்றில் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்ப்பட்டுள்ளார்.

கடந்த மாத இறுதியில் இருந்து காலியில் இடம்பெற்ற கெலக்ஸி கோப்பைக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெற்றது. இதில் இலங்கை மகளிர் கரப்பந்தாட்ட தரப்படுத்தலில் உள்ள முதல் 8 அணிகள் பங்குப்பற்றுவது வழமையாகும்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கரப்பந்தாட்ட அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி மேமலை தோட்டத்தைச் சேர்ந்த திலக்ஸனா, சிரிசாந்தி ஆகிய வீராங்கனைகள் விளையாடினர். இவர்களில் திலக்ஸனா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரில் பிரகாசித்தமையின் காரணமாக மாலைதீவு கரப்பந்தாட்ட விளையாட்டு கழகம் ஒன்றிற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு கரப்பந்தாட்ட விளையாட்டு கழகம் ஒன்றில் விளையாட ஒப்பந்தமான முதல் இலங்கை வீராங்கனை என்ற பெருமையையும் இவர் தனதாக்கி கொண்டுள்ளார். இது குறித்து இவ்வீராங்கனையின் பாடசாலை பயிற்சி ஆசிரியரும் தற்போதைய வேவல்ஹின்ன தமிழ் வித்தியாலய உப அதிபருமான என்.சுந்தராஜ் கருத்து தெரிவிக்கையில்

  மலையகத்தின் புரட்சி லயத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதற்கு திலக்ஸனா சிறந்த முன்னுதாரணம். இவர் 2012 ஆம் ஆண்டு எனது பயிற்சியின் மேமலை தமிழ் வித்தியாலய கரப்பந்தாட்ட அணிக்கு விளையாடி பல வெற்றிகளுக்கு காரணமானார்.இவரது வளர்ச்சி மலையகத்திற்கு முன்னுதாரணமாக இருப்பதையிட்டு பெருமை அடைகின்றேன் என குறிப்பிட்டார்.

இவ் வீராங்கனை இப்பகுதியில் உள்ள விரியும் சிறகுகள் விளையாட்டு கழகத்தின் அங்கத்தவர் ஆவார்.

ஊவாவில் விபத்துகளை கட்டுப்படுத்த ஆளுநர் பிறப்பித்த அதிரடி உத்தரவு

ஊவா மாகாண வீதிகளில் அபாயகரமான இடங்களை அடையாளம் கண்டு, அத்தகைய இடங்களில் வாகனங்களின் வேகத்தடைகள் மற்றும் பாதுகாப்பு வேலிகள் அமைக்க, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு, ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம். முஸம்மில் உத்தரவிட்டார்.

ஊவா மாகாண ஆளுனர் அலுவலகத்தில் 26-03-2021ல் நடைபெற்ற வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், போக்குவரத்துச் சேவை நிறைவேற்று உத்தியோகத்தர்கள் அடங்கிய விசேட கூட்டத்தின்போது, ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம். முஸம்மில் மேற்கண்ட உத்தரவினை விடுத்துள்ளார்.

பசறை – 13வது மைல் கல்லருகே கடந்த 20ந் திகதி நடைபெற்ற கோர பஸ் விபத்தினையடுத்து, இனிமேலும் இவ்வகையிலான விபத்துக்கள் ஏற்படாத வகையில், முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இவ் விபத்தில் 15 பேர் பலியானதுடன், 30க்கு மேற்பட்டோர் காயங்களுக்குள்ளாகினர்.

இவ் விபத்து இடம்பெற்ற இடத்தில் பாதுகாப்பு வேலி உறுதியாக அமைக்கப்பட்டிருக்கின்றது. வேகத்தடைகளும் பாதை மத்தியில் போடப்பட்டுள்ளது. அபாயம் ஏற்படக்கூடிய இடமென்பதை வெளிப்படுத்தும் சமிக்ஞைகளையும் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விபத்திற்கு காரணமான பெருங்கற்பாறையை அகற்றும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அறிக்கை
விபத்துக்குள்ளான என்.டி.6448 என்ற இலக்கத்தையுடைய இத் தனியார் பஸ் கால அட்டவணைக்கு புறம்பாகவே பயணித்துள்ளமை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் அறிக்கையில் மேலும், குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ’20ந் திகதி காலை 6.50 க்கு லுணுகலையிலிருந்து புறப்பட வேண்டிய இப்பஸ், காலை 6.20 க்கு புறப்பட்டுள்ளது. 7.15க்கு இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இப் பஸ் முதல் தினம் 19ந் திகதி இரவு 7.40க்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு 20ந் திகதி அதிகாலை 4.45க்கு லுணுகலை பஸ் நிலையத்திற்கு வந்துள்ளது. கொழும்பிலிருந்து லுணுகலைக்கு வர இப்பஸ் 9 மணித்தியாலங்களும் ஐந்து நிமிடமும் எடுத்துள்ளது. ஒரு மணித்தியாலத்தில் 31.1 கிலோமீட்டர் என்றடிப்படையில், இப் பஸ்சின் வேகம் அமைந்திருந்தது.

பொறுப்பற்ற நிலை, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமை, பாதுகாப்பு வேலி இல்லாமை, வேகத்தடையின்மை ஆகியனவே, இவ்விபத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக’ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே, இராஜாங்க அமைச்சர் திலூம் அமுனுகம ஆகியோருக்கும், அவர்களது செயலாளர்களுக்கும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

எம். செல்வராஜா, பதுளை

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...