Home Blog Page 3563

நகைச்சுவை நடிகர் பக்ருவுக்கும் கொரோனா

தமிழில் அற்புத தீவு, தலை எழுத்து, 7-ம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் பக்ரு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா மீண்டும் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. மராட்டியத்தில் அதிகமானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தி நடிகர் நடிகைகள் பலர் கொரோனா தொற்றில் சிக்கி வருகிறார்கள். இரு தினங்களுக்கு முன்பு இந்தி நடிகர்கள் அமீர்கான், கார்த்திக் ஆர்யன், மாதவன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் பக்ருவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழில் அற்புத தீவு, தலை எழுத்து, 7-ம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பக்ரு. மலையாளத்தில் அதிக படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.

இவருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் பக்ரு வெளியிட்டுள்ள பதிவில், ”எனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறி இருக்கிறேன். தற்போது வீட்டில் தனிமையில் இருக்கிறேன். விரைவில் பணிக்கு திரும்புவேன். அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள், முக கவசத்தை தவறாமல் அணியுங்கள், தடுப்பூசி போட்டுக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 31,133 பேருக்கு கொரோனா தொற்று

கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் 31 ஆயிரத்து 133 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இம்மாவட்டத்தில் நேற்று 64 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதர மாவட்டங்களில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையும், அம்மாவட்டங்களில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் முழு எண்ணிக்கையும் வருமாறு,

நாட்டில் 869,709 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

நாட்டில் கடந்த ஜனவரி 29 ஆம் திகதி முதல் நேற்றுவரை 8 லட்சத்து 69 ஆயிரத்து 709 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. நேற்று மாத்திரம் 13 ஆயிரத்து 382 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

“இந்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு”

இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், நல்லை ஆதினம் ஸ்ரீல ஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பிரமச்சாரிய சுவாமிகளை யாழ்ப்பாணத்தில் அவரது ஆலயத்தில் சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றார்.

இலங்கையில் இந்து சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்.

1. பல நாட்களாக கட்டுமானப்பணிகள் முடிவடையாமல் இருக்கும் கோவில்களுக்கு நிதி உதவிகளை வழங்க ஏற்பாடு செய்தல்.

2. அனைத்து கோயில்களிலும் இந்து அறநெறி வகுப்புகளைத் ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்தல்.

3. மத மாற்றத்தைத் தவிர்ப்பதற்கான விழிப்புணர்வுகளை வழங்க ஏற்பாடு செய்தல்.

4. வடக்கு மற்றும் மலையகங்களுக்கு இடையிலான மத யாத்திரைகளை வளர்ப்பதற்கான இருதரப்பு திட்டங்களை உருவாக்குதல்.

ஆகிய விடயங்கள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என செந்தில் தொண்டமானின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளரை விளாசித் தள்ளிய ஆளுங்கட்சி எம்.பி.!

” இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் அவசர புத்தியாலேயே இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றியிருக்கும். எனவே, இனியாவது தவறுகளை திருத்திக்கொண்டு உரிய வகையில் செயற்படுவதற்கு அவர் முன்வரவேண்டும்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தனது பணியை சரிவர நிறைவேற்றுவதற்கு முன்னரே, அவசரப்பட்டு அறிவிப்புகளை விடுக்கின்றார். இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்கு முன்னரே அந்நாட்டின் ஆதரவு கிடைத்துவிட்டது என கருத்து வெளியிட்டார்.

ஆனால் வெளிவிவகாரத்துறையில் அனுபவமுள்ளவர்கள், ஒரு நாடு ஆதரவு வழங்கும் என உறுதியளித்திருந்தால்கூட அதனை முன்கூட்டியே பகிரங்கப்படுத்தமாட்டார்கள். அவ்வாறு பகிரங்கப்படுத்தினால் சம்பந்தப்பட்ட நாட்டுக்கு பிற நாடுகள் அழுத்தங்களை பிரயோகிக்ககூடும்.

பிரேரணைக்கு எதிராகவே வாக்களிக்கப்படும் என மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்தியா தெரியப்படுத்தியிருந்தால், அது தொடர்பில் அறிந்துகொண்ட பின்னர் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மௌனம் காத்திருக்க வேண்டும். அதனை விடுத்து முன்கூட்டியே தகவலை வெளியிட்டால், தமிழ்க் கூட்டமைப்பு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தது. மறுபுறத்தில் அமெரிக்காவுடன் இந்தியாவுடன் கலந்துரையாடியது.

எனவே, இலங்கைக்கு முழு ஆதரவை வழங்க திட்டமிட்டிருந்த இந்திய, வெளிவிவகா அமைச்சின் செயலாளரின் அவசரத்தால் முடிவை மாற்றியிருக்கலாம். இதற்கு முன்னரும் ஜெனிவா தொடர்பில் இந்தியாவால் வழங்கிய உறுதிமொழியை அமைச்சரொருவர் பகிரங்கப்படுத்தியதால் வாக்கெடுப்பின்போது இந்தியாவின் முடிவு மாறியது.

ஆகவே, வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கு போதிய அனுபவம் இல்லாவிட்டால், அனுபவம் இருப்பவர்களிடம் ஆலோசனை பெற்று செயற்படவேண்டும்.

அதேவேளை, வாக்கெடுப்பின்போது நடுநிலை வகித்த 14 நாடுகளுடனும் பேச்சு நடத்தி, நிலைமையை எடுத்துரைத்து எதிர்காலத்தில் அந்நாடுகளின் ஒத்துழைப்பை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.” – என்றார் டிலான் பெரேரா.

இலங்கை எதிர் மே. தீவுகள் – முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவு

இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மே. தீவுகள் அணி, களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி  முதலாவது இன்னிங்ஸில் 169 ஓட்டங்களைப்பெற்றது. திரிமான்னே 70 ஓட்டங்களையும், திக்வெல்ல 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதன்பின்னர் தமது முதலாவது இன்னிங்சிற்காகமேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 271 ஓட்டங்களை பெற்று கொண்டது.

அதேவேளை,  இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 476 ஓட்டங்களை பெற்றது.  இலங்கை அணியின் பெத்தும் நிசங்க 103 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்தார். அறிமுக போட்டியில் சதமடித்த நான்காவது இலங்கை வீரர் என இடம்பிடித்தார்.

நிரோஷன் திக்வெல்ல 96 ஓட்டங்களையும் ஓசத பெர்ணான்டோ 91 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பின்னர் 375 என்ற வெற்றியிலக்குடன் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கட்களை இழந்து 236 ஓட்டங்களை பெற்றபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது.

2022 இல் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஆரம்பம்!

வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பங்குபற்றலுடன் விசேட நீதிமன்றத்தை நிறுவி உள்ளக விசாரணையை இலங்கை முன்னெடுக்காவிட்டால் சர்வதேச பொறிமுறை செயற்பட தொடங்கிவிடும் .அதனை தடுத்து நிறுத்த முடியாது – என்று ஐ.நாவுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிட பிரதிநிதியும், சிரேஷ்ட இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அடுத்துவரும் அமர்வுகளில் என்ன நடக்கும் என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கை விவகாரம் தொடர்பில் 6 மாதங்களுக்கு ஒரு தடவை மீளாய்வு செய்யப்படும். 2022 செப்டம்பர்வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் திரட்டப்படும் ஆவணங்கள் எல்லாம் 2022 செப்டம்பருக்கு பிறகு உலக நாடுகளிலுள்ள நீதிமன்றங்களுக்கு அனுப்படும். அவ்வாறு நடைபெற்றால் , குறைந்தபட்சம் பிரேரணையை ஆதரித்த 22 நாடுகளிலாவது வழக்கு தொடுக்கப்படும்.

இவ்வாறு வழக்கு தொடுத்தாலும் எதுவும் செய்யமுடியாது என இலங்கை அரசாங்கம் சவால் விடுக்கும்பட்சத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, முதலீடு, சுற்றுலாத்துறை, வர்த்தகம் உள்ளிட்ட விடயங்களில் இறுக்கமான போக்கு கடைபிடிக்கப்படும்.

எனினும், இலங்கைக்கு இன்னுமொரு வாய்ப்பு எஞ்சியுள்ளது. 2022 செப்டம்பர் மாதத்துக்கு முன்னர் சேர். டெஸ்மன் டி சில்வாவாலும் (பரணகம ஆணைக்குழு) , அதற்கு முன்னர் நல்லிணக்க ஆணைக்குழுவாலும் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கமைய நம்பகமான விசாரணை பொறிமுறை உருவாக்கப்படவேண்டும்.

தங்களுக்கு விசுவாசமான நீதிபதிகளை நியமிக்காமல், உலகம் ஏற்றுக்கொள்கின்றனவர்களை அல்லது வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை நீதிபதிகளை உள்ளடக்கிய வகையில் விசேட நீதிமன்றமொன்றை நிறுவி, விசாரணைகளை முன்னெடுத்து தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும். வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கும் அழைக்கப்படவேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் சர்வதேச பொறிமுறை செயற்பட ஆரம்பித்துவிடும். இலங்கை விவகாரம் ஏற்கனவே சர்வதேச மயப்படுத்தப்பட்டிருந்தாலும் அதன் பொறிமுறை செயற்படவில்லை. இனி செயற்பட தொடங்கினால் அதனை நிறுத்த முடியாது.” – என்றார்.

பசறை வாசி உட்பட கொரோனாவால் மேலும் மூவர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளது.

ஜீவன் தலைமையிலேயே இ.தொ.காவின் மகளிர் தின நிகழ்வு – ஊடகப்பிரிவு தகவல்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வு எதிர்வரும் 27ஆம் திகதி கொட்டக்கலை சி.எல்.எப் வளாகத்தில், காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது.

சர்வதேச மகளிர் தினம் கடந்த 8ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வை, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்வுகளுடனும் போட்டிகளுடனும் கூடிய சிறப்பு அம்சங்கள் கொண்ட நிகழ்வாக இடம்பெறவுள்ளது என இ.தொ.காவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை, இ.தொ.காவின் ஊடகப்பிரிவு முன்னதாக வெளியிட்டிருந்த அறிக்கையில் மகளிர் தின நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது எனவும், அந்நிகழ்வுக்கு இ.தொ.காவின் நிர்வாகச் செயலாளர் விஜயலக்மி தொண்டமான் தலைமையேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

‘ஜனாதிபதித் தேர்தலில் நானே வெற்றிபெற்றேன்’ – சஜித் பரபரப்பு தகவல்

” ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதன்படி தீர்மானத்துக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் கூறுகின்றார். நடுநிலை வகித்த நாடுகளின் வாக்குகளையும் இணைத்து கணக்கு சூத்திரம் தயாரித்துள்ளார்.

அப்படியானால்  நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு 69 லட்சம் வாக்குகள் கிடைத்தன. எனக்கு 55 லட்சம் வாக்குகள் கிடைத்தன. 27 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை. தினேஷ் குணவர்தனவின் கணக்கு சூத்திரத்தின் பிரகாரம் அத்தேர்தலில் எனக்கே வெற்றி.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...