Home Blog Page 3564

குளவிக்கொட்டால் மஸ்கெலியாவில் 15 மாணவர்கள் பாதிப்பு

மஸ்கெலியா, காட்மோர் தமிழ் வித்தியாலய மாணவர்கள் 15 பேர் இன்று மதியம் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

பாடசாலை முடிவடைந்து வீடு திரும்பும் வழியிலேயே இவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

சம்பவத்தின் பின்னர் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நான்கு மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

‘பெருந்தோட்டங்கள் பறிபோகும் அபாயம்’ – தடுத்து நிறுத்துமா இ.தொ.கா. ?

“பெருந்தோட்ட காணிகளை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு புதிய அமைச்சரவை பத்திரத்தை முன்வைக்க அரசு ஏற்பாடு செய்து வருகின்றது. பெருந்தோட்டத்துறை சார்ந்த, அரசில் உள்ள, எமது பிரதிநிதிகள் இதனை தடுத்து நிறுத்துவார்களா?” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற, பெருந்தோட்ட அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனை குழுவின் இரண்டாவது கூட்டத்தில் பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார், கூட்ட முடிவில் பின்வருமாறு தெரிவித்தார்.”பெருந்தோட்ட அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனை குழுவின் இரண்டாவது கூட்டம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அதிலே அரசை பிரதிநித்துவப்படுத்தும், மாத்தளை தொடக்கம் மாத்தறை வரையான சகல எம்பீக்களும் பல்வேறு தேவைகளுக்கு தோட்ட காணிகளை எடுப்பது தொடர்பிலேயே பேசினர்.

கிராம விரிவாக்கம், நகர விரிவாக்கம், பல்கலைக்கழக விரிவாக்கம் என ஒரு சாரார், இன்னும் ஒரு சாரார், பயிரிடப்படாத காணிகளை வெளியாருக்கு விவசாயத்திற்கு வழங்க வேண்டும் என்கின்றனர். மொத்தத்தில் பெருந்தோட்ட காணிகளை வேறு தேவைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அரசை சார்ந்த பல எம்பீக்களும் பெருந்தோட்ட காணி சுவீகரிப்பு இழுத்தடிப்பாக உள்ளது என குறைகூறினர். அமைச்சரை நேரடியாக தலையிட்டு, விரைவாக தோட்ட காணிகளை எடுக்கும் வழிமுறையை செய்து தருமாறு கேட்டனர்.

அதன் போது, தற்போதுள்ள சட்ட சிக்கலை நீக்கி, பெருந்தோட்ட காணிகளை விரைவாகவும், இலகுவாகவும் வேறு தேவைகளுக்கு எடுக்கக்கூடிய வகையில் அமைச்சரவை பத்திரமொன்று முன்வைக்கப்படுமென கூறப்பட்டது. மொத்தத்தில் எதிர்வரும் நாட்களில் பெருந்தோட்ட காணிகளை காப்பாற்றிக்கொள்வது பெரும்மொரு சவாலாக மாறப்போகிறது.

அரசாங்கத்தை பிரதிநித்துவப்படுத்தும் எமது பிரதிநிதிகள், இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுப்பார்களா என தெரியவில்லை. இவ் அமைச்சரவை ஆலோசனை குழு கூட்டத்தில், அரச பக்கமாக பெயரிடப்பட்டிருந்த மலையக பிரதிநிதி பிரசன்னமாகியும் இருக்கவில்லை. இவ்வாறு மெளனமாக இருந்துவிட்டு, இறுதியில் காணிகளை எடுப்பதற்கு நியாமாம் கூற முற்படுவார்கள் என்ற நிலையே வெளிப்படுகின்றது.” என்றார்.

ஜெனிவா தீர்மானத்தை நிராகரித்தது இலங்கை – உள்ளக பொறிமுறையே ஏற்பு!

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதிலும் ஜக்கிய நாடுகள் அமைப்பின் சகல நிறுவனங்களுடன் தொடர்ச்சியாக இணைந்து செயற்படுவதாக அரசாங்கம் இன்று (25) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளது.

இலங்கை இறைமை கொண்ட நாடாகும். அந்த நிலையை தொடர்ச்சியாக பாதுகாப்பதே அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும் என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையும் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக இன்று (24) பாராளுமன்றத்தில் அமைச்சர் விசேட அறிக்கை ஒன்றை விடுத்து உரையாற்றினார்.

இந்த பிரேரணை தேவையற்ற ஒன்றாகும். இது இலங்கை சட்டத்திற்கு முரண்பட்டதாகும் என்று குறிப்பிட்ட அமைச்சர் இந்த பிரேரணைக்கு பேரவையில் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

பிரேரணை தொடர்பான விபரங்கள் அடங்கிய ஆவணங்களை அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அரசாங்கம் பொறுப்பு கூறல் விடயத்தை இலங்கை ஊடாக உள்ளூர் பொறிமுறையின் ஊடாக முன்னெடுக்கும் என்றும் கூறிய அமைச்சர், தனி ஈழ நாட்டை இலங்கையில் கட்டியெழுப்பும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய சிலர் தற்பொழுது அதனை வேறு ஒரு விதத்தில் முயற்சிக்கின்றனர். எல்.ரி.ரி.ஈ இனர் அன்று மேற்கொண்ட மனித உரிமைகள் குறித்து அன்று எவரும் குறிப்பிடவில்லை.

இவர்கள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை கொலை செய்ய முயற்சித்தனர். எதிர் தரப்பில் பலரை கொன்றனர். உள்ளூரில் மாத்திரமன்றி இந்தியாவின் முன்னால் பிரதமர் ரஜீவ் காந்தியையும் கொலை செய்தனர். ஈ.பீ.ஆர்.எல்.எப் ஜ சேர்ந்த பலரை கொலை செய்தனர். ஆனால் அவர்கள் தற்பொழுது மௌனம் காக்கின்றனர் என்றும் கூறினார்.

30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாடு பிளவுப்படுவதை இராணுவத்தினர் தடுத்து மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் கூறினார்.

மனித உரிமைகள் பேரவை எந்தவித அடிப்படையும் இன்றி இலங்கையில் உள் விவகாரங்களில் தலையிடுவதற்காக மேற்கொள்ளும் முயற்சியை நிராகரிப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திர தன்மையை முன்னெடுத்து மக்களின் மனித உரிமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பாதுகாப்பதற்கு சமகால அரசாங்கம் செயல்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மனித உரிமைகள் ஆணையாளரான மிச்சேல் பெச்சலட் இலங்கைக்கு எதிராக சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாக பிரித்து பார்க்க முடியும். எல்.ரி.ரி.ஈ அமைப்புடன் இடம்பெற்ற மோதலில் அந்த அமைப்பு தோல்வியடைந்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் உயிரிழப்புக்கள் குறித்து விசாரணை செய்வதில் உள்ள முரண்பாடுகள் மற்றும் கடந்த அரசாங்கத்தை தோல்வியடைய செய்து நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதில் ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்ஷவின் நிர்வாகத்தினால் முடிந்துள்ளமை விசேட அம்சமாகும்.

நாடொன்றில் உலக விடயங்கள் குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் கருத்து தெரிவிக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை சீர்குழைக்கும் வகையில் எதிர்க்கட்சியினர் முன்வைத்த விடயங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு பின்புலமாக அமைந்ததாகவும், இவர்கள் ஒன்றிணைந்த வகையில் செயற்பட்டுள்ளமை தெளிவாகுகின்றது என்றும் குறிப்பிட்டார்.

நாட்டின் சுகாதார நிலைமையை பாதுகாப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை அறியாமல் அதுதொடர்பாக மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கையிட்டுள்ளார்.

கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நாடுகள் மத்தியில் இலங்கை முன்னிலையில் காணப்படுகின்றது. இருப்பினும் இதுதொடர்பாக அறியாமல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த அரசாங்க காலத்தில் மாகாண சபை முறையில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது திருத்தம் தொடர்பில் வாக்களிப்பை நடத்துவதற்கு முடியாத நிலை ஏற்பட்டது. முன்னால் ஜனாதிபதி பிரதமருக்கு இடையில் இருந்து வந்த கருத்து முரண்பாடுகள் காரணமாக நாடு மேலும் சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டது. இதற்கு அமைவாக மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் உயர்நீதிமன்றம் வரையில் விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனை சரி செய்வதற்கு ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்ஷவிற்கு தெளிவான மக்கள் ஆணை கிடைத்ததாக அமைச்சர் தினேஸ் குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.

சில நாடுகளுடன் கருத்து வேறுப்பாடுகள் இருந்த போதிலும் வெளிநாட்டு அமைச்சு மாத்திரம் இன்றி ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியில் இணைந்து செயற்பாடுகள் முன்னெடுப்பதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.

நடிகர் மாதவனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலான நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பையில் வசித்து வரும் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே மனோஜ் பாஜ்பாய், கார்த்திக் ஆர்யன், ரன்பீர் கபூர், அமீர் கான் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது நடிகர் மாதவனுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

டுவிட்டர் பதிவு மூலம் இதனை உறுதிப்படுத்தி உள்ள மாதவன், தான் உடல்நலம் தேறி வருவதாக குறிப்பிட்டுள்ளார். அவர் விரைவில் நலம்பெற ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் மாதவன் தற்போது ராக்கெட்ரி எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

21/4 தாக்குதல் – பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்குமாறு சஜித் வலியுறுத்து!

21/4 பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை கண்டறியும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். தேவையேற்படின் சர்வதேச கண்காணிப்பாளர்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 21/4 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான 2ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” அமெரிக்காவில் நடைபெற்ற செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, பிரதான சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். விசாரணை குழுவின் அறிக்கையும் முழுமையாக வெளியிடப்பட்டது. செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை புத்தகக் கடைகளில்கூட வாங்கலாம்.

ஆனால் 21/4 தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் முழுமையாக சமர்ப்பிக்கப்படவில்லை. இணைப்புகள் ஒளிக்கப்படுகின்றன. சுயாதீன விசாரணை அரசியல் மயப்படுத்தப்படுகின்றது. இதனை ஏற்கமுடியாது. தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள், திட்டமிட்டவர்கள் என அனைவரையும் கண்டறியவேண்டும்.”  என்றும் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

தொண்டமானின் மகள் தலைமையில் இ.தொ.காவின் மகளிர் தின நிகழ்வு நாளை!

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வுகள் ,இ.தொ.காவின் தலைமையகமான சௌமிய பவனில் நாளை முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

நிர்வாகச் செயலாளர் விஜயலக்மி தொண்டமான் தலைமையில் மேற்படி நிகழ்வுகள் இடம்பெறும் என இ.தொ.காவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந் நிகழ்வில் வரவேற்புரையை மகளிர் இயக்குனர் திருமதி. தேவமாகிரட் நிகழ்த்தவுள்ளார்.

மாவட்ட பிரதிநிதி திருமதி. ஜீவராணி, திருமதி. ராஜேஸ்வரி ஆகியோர்களின் சிறப்புரைகளும் இதில் இடம்பெறவுள்ளன.

இ.தொ.கா. நிர்வாக உபதலைவரும் சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து, பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பொ. சிவராஜா, சிரேஷ்ட இயக்குனர் எஸ்.ராஜமணி, கணக்காளர் ஆர்.ரமேஸ் மற்றும் மத்திய காரியாலய உத்தியோகஸ்தர்களும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

பல்வேறு கலாசார நிகழ்வுகளும் இதில் இடம் பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வேனில் இருந்து விழுந்து 5 வயது சிறுமி பலி! வெல்லவாய பகுதியில் சோகம்!!

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரந்தகொல்ல ஹுனுகெட்டிய பகுதியில் முன்பள்ளி மாணவர்களை பாடசாலை நிறைவடைந்து ஏற்றிச்சென்ற வேனின் கதவு வழியாக, வீதியில் தவறி விழுந்து ஐந்து வயது சிறுமியொருவர் இன்று நண்பகல் வேளையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வ்விபத்து தொடர்பாக வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடராஜா மலர்வேந்தன்

பதுளையில் மேலும் நான்கு பொலிஸாருக்கு கொரோனா

பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டிய பொலிஸ் நிலையத்தில் நான்கு பொலிஸார் கொரோனா வைரஸ் தொற்றுக்கிழக்காகியுள்ளமை தெரியவந்துள்ளது.

கடந்த 23 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை 25-03-2021ல் (இன்று) வெளியானபோது, மேற்படி கொவிட் 19 தொற்று நிலை உறுதியாகியுள்ளது.

கொரோனா தொற்று குறித்த தகவல் கிடைத்ததும், கந்தகெட்டிய பொலிஸ் நிலையப்
பொறுப்பதிகாரி டபள்யு. எம். சிரிவர்தனவுடன் தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட பொலிஸ் நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என்று வினவியபோது,

அதற்கு அவர், கொவிட் –  19 தொற்றுக்கிழக்கான நான்கு பொலிசாரில் ஒருவர் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர். ஏனைய மூவரும் விடுமுறையில் இருந்தவர்கள். ஆகையினால், இந் நால்வரும் மக்களுடனோ, ஏனைய பொலிசாருடனோ நெருங்கிப் பழகக்கூடிய சந்தர்ப்பமற்றவர்கள். ஆகையினால், பொலிஸ் நிலையத்தை மூட வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், பொது சுகாதாரப் பிரிவினர் எடுக்கும் முடிவிற்கு இணங்குவோம்” – என்று கூறினார்.

எம். செல்வராஜா, பதுளை

அரச கூட்டணிக்குள் வெட்டு, குத்து தொடர்கிறது – சுதந்திரக்கட்சி கவலை!

அரச கூட்டணிக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு பாராபட்சம் தொடர்கின்றது. அது இன்னும் குறையவே இல்லை என்று சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே தயாசிறி ஜயசேகர இவ்வாறு கூறினார்.

” இது நாம் உருவாக்கிய அரசு. அதனுடன் இணைந்து பயணிக்கவே விரும்புகின்றோம். தேர்தலிலும் கூட்டணியாகவே பயணிக்க உத்தேசித்துள்ளோம். எனினும், கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டால் தொடர்ந்தும் மௌனம் காக்கமுடியாது. ” எனவும் அவர் கூறினார்.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து 25.03.2021 இன்று காலை 09 மணியளவில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமொன்று மிதப்பதைக்கண்டு அது தொடர்பில் பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா அல்லது நீர் தேக்கத்தில் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து நீர்தேக்கத்தில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. சுமார் 30ற்கும் 35ற்கும் இடையிலான வயது மதிக்கதக்க பெண் எனவும் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

க.கிசாந்தன்

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...