Home Blog Page 3577

நீதிகோரி யாழ்ப்பாணத்தில் மாபெரும் எழுச்சிப்பேரணி முன்னெடுப்பு!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமும், பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம், யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இருந்து பேரணியாக ஆரம்பமாகி, தற்போது சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுவரும் நல்லை ஆதீனம் முன்பாக சென்று நிறைவடைந்தது.

போராட்டத்தில், வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் , பொதுமக்கள் , சிவில் சமூகத்தினர் , காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் , அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

2024 ஜனாதிபதி வேட்பாளர் – பொதுவேட்பாளருக்கு பொன்சேகா கடும் எதிர்ப்பு

2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரே வேட்பாளராக களமிறங்க வேண்டும் – என்று அக்கட்சியின் தவிசாளர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

” 2024 ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை களமிறக்கமாட்டோம். வாடகை வேட்பாளர்களை களமிறக்கியதால் ஏற்பட்ட விளைவுகள் அனைவருக்கும் தெரியும். எனவே, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்தான் வேட்பாளராக போட்டியிடவேண்டும். அது தொடர்பான அறிவித்தலை முன்கூட்டியே வெளியிட்டுள்ளமை வரவேற்கக்கூடிய விடயமாகும். அப்போதுதான் மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படும்.” – எனவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியையும் இணைத்துக்கொண்டு கூட்டணியாக பயணிப்பதற்கு நாம் தயார். ஆனால் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் ஐ.தே.கவில் இருந்தால் அது சாத்தியப்படாது எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

தமிழக மக்களுக்கு நன்மை தரவே கெப்டனும் கூட்டணி – டிடிவி தினகரன்

தமிழக மக்களுக்கு நன்மை தர தேமுதிகவுடன் அமமுக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறோம் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் பிரச்சினை காரணமாக அக்கூட்டணியில் இருந்து விலகி அமமுகவில் சேர்ந்தது. தற்போது அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதல்வர் வேட்பாளராக டிடிவி தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்குச் சென்ற டிடிவி தினகரன், அங்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார்.

அவரை சுதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் வந்து அழைத்துச் சென்றனர். பின்னர் அலுவலகத்துக்குச் சென்ற டிடிவி தினகரன், விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தேர்தல் வியூகம், பிரச்சார அம்சங்கள் உள்ளிட்டவை குறித்துப் பேசப்பட்டதாகத் தெரிகிறது.

சந்திப்புக்கு பின்னர் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக மக்களுக்கு நன்மை தர தேமுதிகவுடன் அமமுக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறோம். காவிரி டெல்டா மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அமமுகவிற்கு தொண்டர்கள் உள்ளனர்  என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

HNB Finance PLC இன் அநுராதபுரம் கிளை தமக்கே சொந்தமான புதிய கட்டடத்திற்கு மாற்றப்படுகிறது

20 வருடங்களாக இலங்கையிலுள்ள வர்த்தக பெருமக்களிடம் நன்மதிப்பு மிக்க நிதிச் சேவையை வழங்கிய HNB Finance PLC அநுராதபுரம் கிளையை இல. 64, அபய பிளேஸ் புதிய நகரம் என்ற விலாசத்தில் அமைந்துள்ள சகல வசதிகள் கொண்ட தமக்கே சொந்தமான கட்டடத்திற்கு அண்மையில் மாற்றியுள்ளது.

HNB Financeஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத்தின் தலைமையில் நாட்டில் நிலவும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய அநுராதபுரம் கிளையின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு சமமாக அநுராதபுரம் நகரை மையமாகக் கொண்டு விசேட மேம்பாட்டு செயற்திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன் அதன்போது HNB Financeஇன் சேவை தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அநுராதபுரம் கிளையின் அங்குரார்ப்பண நிகழ்வின் போது கருத்து தெரிவித்த HNB Finance PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத், ‘கலாச்சார மற்றும் சமூக ரீதியில் இலங்கையின் பெறுமதி மிக்க இந்த நகரில் எமது சேவைகளை மிகவும் துரிதமாகவும் மற்றும் சிறப்பாகவும் வழங்கி இந்த பிரதேசத்திலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக முன்னரை விட அதிகமான பங்களிப்பை வழங்க முடியுமென என நான் எதிர்பார்க்கின்றேன்.

அத்துடன் நீண்டகாலமாக வாடிக்கையாளர் பெருமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள நம்பிக்கைப் பிணைப்புடன் மிகவும் இடவசதிகளைக் கொண்ட புதிய அலுவலக சூழல் ஒன்றுக்கு செல்வதற்கு HNB Finance புதிதாக ஆரம்பித்த தங்கக் கடன் சேவைகள் மற்றும் ஏனைய நிதி சேவைகளுடன் அனைத்து நிதி சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் எமது வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க எமக்கு சந்தர்ப்பம் உள்ளது.’ என தெரிவித்தார்.

HNB Finance தொடர்பாக

2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE தற்போது புதிய வர்த்தகத் துறைகள் வரை விஸ்தீரமடைந்துள்ளது.

சேமிப்பு, தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் மற்றும் குத்தகை சேவை போன்ற நிதி திட்டங்களுக்கு மேலதிகமாக HNB FINANCE சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME) கடன்களையும் வழங்குகிறது.

“Christmas Giveaway” வெற்றியாளர்களுக்கு பரிசில்களை வழங்கிய HNB Finance

கொவிட் தொற்றுநோய் காரணமாக பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வீட்டிலிருந்து நத்தார் பண்டிகையை கொண்டாடிய இலங்கையர்களுக்கு அபூர்வமான அனுபவத்தை வழங்கும் முகமாக HNB Finance PLCஇனால் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “Christmas Giveaway Alert” மேம்பாட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

கடந்த வருடம் டிசெம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மேம்பாட்டு போட்டி வேலைத் திட்டத்திற்காக ஆயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் தளத்தின் ஊடாக நிதி சேவை மேம்பாடுகளில் முன்னணியிலுள்ள நிறுவனம் அண்மையில் நத்தார் பண்டிகை தொடர்பில் தமது இணையத்தளத்திலும் மற்றும் முகப் புத்தகத்தின் ஊடாகவும் ஆரம்பித்த இந்த “Christmas Giveaway” மேம்பாட்டு போட்டியின் மூலம் முன்வைத்த பல்வேறு போட்டிகளுக்கு பங்குபற்றி வெற்றி பெற்றவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

கொவிட் தொற்றுநோய் காரணமாகக வீட்டிற்குள் இருந்தவாரே நத்தார் பட்டிகையை கொண்டாடிய இலங்கையர்களுக்காக டிஜிட்டல் தளத்திற்குள் பல்வேறு சவால்களை வழங்வழங்குவதோடு HNB Financeஇன் நிதி சேவைகள் குறித்து புரிந்துணர்வைப் பெற்றுக் கொடுத்தல் இந்த மேம்பாட்டு வேலைத் திட்டத்தின் நோக்கமாகும்.

அண்மையில் நிறுவனத்தின் நிதி சேவைகள் டிஜிட்டல் வழியூடாக வாடிக்கையாளரிடம் கொண்டுசெல்வது தொடர்பில் HNB Finance பாரிய முதலீடுகளை செய்துள்ளதுடன் கொவிட் தொற்றுநோயுடன் டிஜிட்டல் ஊடகத்திற்கு ஈடுபடுத்துவது துரிதமடைந்துள்ளதால் நிதித்துறையில் டிஜிட்டல் ஊடகப் பயன்பாட்டில் முன்னணிலை அடைய HNB Finance நிறுவனத்திற்கு முடிந்துள்ளது.

HNB FINANCE தொடர்பாக

2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE PLC இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். Fitch Rating நிறுவனத்தினால் வழங்கப்படும் தேசிய நீண்டகால A(lka) தரப்படுத்தலை நிறுவனத்தினால் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது.

60 கிளைகள் மற்றும் 10 சேவை மத்திய நிலையங்களைக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள HNB FINANCE PLCஇனால் திட்டமிடப்பட்டுள்ள நிதி சேவைகளுடன் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவு (SME) கடன்கள், லீசிங் சேவைகள், தங்கக் கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், கல்விக் கடன், சேமிப்பு மற்றும் நீண்டகால வைப்பு வசதிகள் உள்ளிட்ட நிதிச் சேவைகள் இதில் பிரதானமானவையாகும்.

பஸ்ஸை பிடிக்க ஆட்டோவை கடத்திய மாணவர்கள் – பதுளையில் சம்பவம்!

இ.போ.ச. பஸ் சென்றுவிட்டதினால், மாணவர்கள் இருவர், அப்பஸ்சைப் பிடிக்க வீதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவைக் கடத்திச்சென்றபோது, அவ் ஆட்டோ விபத்துக்குள்ளாகியதில், அவ்விருமாணவர்களும் படு காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து ஹப்புத்தளை பகுதியின் மேல் விகாரகலை எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.

ஹப்புத்தளையிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 8 இல் கல்வி கற்றுவந்த இம்மாணவர்கள் விபத்தில் கடுங்காயங்களுக்குள்ளானதினால், ஹப்புத்தளை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, ஆரம்ப சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அதையடுத்து, அவ்விருவரும் தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சைக்குற்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்விருமாணவர்களும் பாடசாலைவிட்டு, வீடுசெல்ல இ.போ.ச. பஸ் தரிப்பிடத்திற்கு சென்றனர். பஸ்சென்றுவிட்டதை அறிந்த இம்மாணவர்கள் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவைக் கடத்திக்கொண்டு, குறிப்பிட்ட பஸ்சைப்பிடிக்கச்சென்றனர். ஆனால், கடத்திச்சென்ற ஆட்டோ, பாதையை விட்டு விலகி, தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது.

எம். செல்வராஜா, பதுளை

HNB Finance PLC தொடர்ச்சியாக நான்காவது முறையும் இலங்கையில் “வேலை செய்வதற்கு சிறந்த நிறுவனங்கள்” (Best Work Places) வரிசைக்கு தெரிவு

சிறந்த சேவைச் சூழலை தமது ஊழியர்களுக்கு வழங்குவதற்காக துரித அர்ப்பபணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance தொடர்ச்சியாக நான்காவது தடவையும் வேலை செய்வதற்கு சிறந்த நிறுவனங்கள் 40க்குள் இடம்பிடித்துள்ளது.

Best Work Places விருது வழங்கும் நிகழ்வு ஜனவரி 21ஆம் திகதி ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றதுடன் இதன்போது Extra Large Enterprise Category பிரிவில் வெண்கல விருதொன்றையும் வென்றெடுக்க HNB Financeஆல் முடிந்துள்ளது.

பேராசிரியர் ரவி பெர்னாண்து மற்றும் HNBஇன் தலைவர் தினேஷ் வீரக்கொடி ஆகியோரும் இந்த விருது வழங்கும் விழாவில் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த HNB Finance PLCஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத், “தொடர்ச்சியாக நான்காவது தடவையும் நாட்டில் வேலை செய்வதற்கு சிறந்த நிறுவனங்கள் 40க்குள் இணைய கிடைத்தமையானது எமக்கு கிடைத்த விசேட வெற்றியாகும்.

விசேடமாக பாரிய சவால்களுக்கு மத்தியில் கடந்த சென்ற வருடத்திற்குள் நிறுவனத்தின் நடவடிக்கைகளை துரிதமான அர்ப்பணிப்புடன் மேற்கொள்வதற்கு எமது ஊழியர்கள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டதுடன் புத்தாக்கங்களின் மூலம் நிறுவனம் வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கு அவர்களால் முடிந்தது. ஊழியர்களுக்கு நம்பிக்கையான வேலைச் சூழலை ஏற்படுத்த முடியுமானால் சிறந்த வர்த்தக செயல்திறனை எந்தவொரு வர்தகத்திற்குள் உருவாக்க முடியுமென்பதை நாம் உறுதியாக நம்புகின்றோம்.

எமது சேவையின் தரம் மற்றும் ஒப்பிட முடியாத தன்மை ஆகியன இந்த மதிப்பீட்டின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

கடந்த சில வருடங்களாகவே HNB Financeஇனால் சேவை கலாச்சாரத்தை அமுலாக்குதல், ஆட்சேர்ப்பு நடைமுறை, பாரபட்சமில்லாமல், தகைமையை அடிப்படையாகக் கொண்ட பதவி உயர்வுகளை வழங்குதல் மற்றும் ஊழியர்களின் இலக்குகளை அடைய உற்சாகப்படுத்துதல் போன்ற சிறந்த நிறுவன ரீதியான அடிப்படைவாதங்களை தமது நிர்வாக வியூகங்களுக்குள் உள்ளடக்கி நடைமுறைப்படுத்தியதன் விளைவாக கடந்த 4 வருடம் முழுவதும் தொடர்ச்சியாக இந்த விருது வழங்கும் நிகழ்வில் நிறுவனம் கௌரவிக்கப்பட்டமை
HNB Finance 2017ஆம் ஆண்டில் சிறந்த தொழில் வழங்குநராக ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் வேலை செய்வதற்கு சிறந்தத இடமாக வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டது.

அத்துடன் 2018இல் Extra Large Size Enterprise’ பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றது.

மேலும் 2017ஆம் ஆண்டில் பெருமை மற்றும் ஆலோசனைகளுக்காக விசேட விருதிதும் HNB Financeக்கு கிடைத்தது.

அத்துடன் 2019இல் ஆசியாவிலேயே வேலை செய்வதற்கு சிறந்த நிறுவனங்கள் 25க்குள் பட்டியலிடப்பட்ட ஒரேயொரு இலங்கையின் நிதி நிறுவனமாக HNB Finance இடம்பிடித்துள்ளது.

இந்த விருதுகளுக்கு பரிந்துரை செய்தது Great Place to Work குழு உட்பட Trust Index® Employee Survey மற்றும் Culture Audit® ஆகிய சுயாதீன பல குழுக்களால் மேற்கொள்ளப்படுகிறது.

இது முழுக்க முழுக்க ஊழியர்களுடன் தொடர்புகளுடன் மேற்கொள்ளப்படுவதுடன் ஊழியர் பின்னூட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் விருதாகும்.

HNB Finance தொடர்பில்

2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE PLC இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். Fitch Rating நிறுவனத்தினால் வழங்கப்படும் தேசிய நீண்டகால A(lka) தரப்படுத்தலை நிறுவனத்தினால் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது.

60 கிளைகள் மற்றும் 10 சேவை மத்திய நிலையங்களைக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள HNB FINANCE PLCஇனால் திட்டமிடப்பட்டுள்ள நிதி சேவைகளுடன் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவு (SME) கடன்கள், லீசிங் சேவைகள், தங்கக் கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், கல்விக் கடன், சேமிப்பு மற்றும் நீண்டகால வைப்பு வசதிகள் உள்ளிட்ட நிதிச் சேவைகள் இதில் பிரதானமானவையாகும்.

கொவிட்-19 நோய்தடுப்பு வேலைத்திட்டத்திற்கு தனியார் சுகாதார ஊழியர்களையும் உள்ளடக்கியமை தொடர்பில் அரசிற்கு நன்றி தெரிவிக்கும் APHNH

இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் கொவிட்-19 நோய்த்தடுப்பு வேலைத்திட்டத்திற்கு தனியார் பிரிவு சுகாதார ஊழியர்களையும் உள்ளடக்குவதற்கு அண்மையில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் தமது வரவேற்பை தனியார் மருத்துவமனை மற்றும் பராமரிப்பு நிலைய சங்கம் (APHNH) தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வாரங்களுக்குள் ஒருதொகை தடுப்பு மருந்துகள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கும் APHNH சுகாதார ஊழியர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் உதவி ஊழியர்கள் போன்ற தனியார் பிரிவுகளிலுள்ள அனைவருக்கும் இந்த தடுப்பு மருந்து வழங்கும் செயற்பாட்டை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முடியுமென சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த APHNHஇன் தலைவர் கலாநிதி லக்கித் பீரிஸ், “கொவிட்-19 தேசிய நோய்த்தடுப்பு வேலைத்திட்டத்திற்கு தனியார் பிரிவிலுள்ள மருத்துவ ஊழியர்களையும் உள்ளடக்கியமை குறித்து சுகாதார அமைச்சிற்கும் மற்றும் முதன்மை சுகாதார சேவைகள், தொற்றுநோய் மற்றும் கொவிட் தொற்றுநோய் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் அரசாங்க அமைச்சர்களுக்கான சங்கம் என்ற வகையில் எமது வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு நிலவும் இந்த சந்தர்ப்பத்தில் முன் வரிசையிலுள்ள சுகாதார ஊழியர்களுக்காக தடுப்பு மருந்துகளை பெற்றுக் கொடுப்பது குறித்து அரச அதிகாரிகளுக்கு APHNH தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளது. என்றபோதிலும் தனியார் பிரிவிலுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களது முழுமையான தடுப்பு மருந்துகள் இதுவரை கிடைக்கவிலையெனவும் நாட்டிற்கான அதிகமான தடுப்பு மருந்து தொகையொன்று மிக விரைவில் தமக்கு வழங்கப்படுமெனவும் சங்கம் எதிர்பார்த்துள்ளது.

“எமது ஊழியர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிடாமை குறித்து நாம் நன்றியுள்ளவர்களாக இருப்பதுடன், இந்த தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கைகளின் ஊடாக முழுமைப்படுத்த முடிவது தனியார் பிரிவிலுள்ள குறிப்பிடத்தக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவ சேவையிலுள்ள ஒரு பிரிவினர் மாத்திரமே என நாம் புரிந்து கொண்டோம்.

மிக விரைவில் தடுப்பு மருந்து ஒரு தொகை நாட்டிற்கு கிடைத்தவுடன் இந்த வேலைத்திட்டத்தினை மேலும் விஸ்தரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நிர்வாக ஊழியர்கள் உள்ளிட்ட தனியார் பிரிவிலுள்ள ஏனைய சுகாதார ஊழியர்களுக்கும் அதனை விஸ்தரிக்க முடியுமென நம்புகின்றேன்.

சுகாதார பிரிவிலுள்ள அனைத்து உறுப்பினர்களையும் முன் வரிசையிலுள்ள சுகாதார ஊழியர்களைப் போலவே கருதுவோம்.” என கலாநிதி பீரிஸ் தெரிவித்தார்.

நாட்டில் கொவிட்-19 தொற்றுநோய் பிரதிபலிப்பின் போது தனியார் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளின் காரணமாக அவர்களது சுகாதார ஊழியர்களும் இந்த வைரஸிற்கு அதிகமாக பாதிக்கப்பட்டதுடன் அவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட இவ்வாறான தீர்மானம் காலத்திற்கு ஏற்றதாகும்.

தொற்றுநோய்க்கு மத்தியில் நோயாளர்களுக்கு உரிய நேரத்தில் சுகாதார சேவைகளை தொடர்ச்சியாக பெற்றுக் கொடுத்ததற்கு மேலதிகமாக கொவிட்-19 காரணமாக தேசிய சுகாதார கட்டமைப்பிற்கு சுமத்தப்பட்ட பாரத்தை குறைப்பதற்காகவும் தனியார் பிரிவினால் இடைப்பட்ட சுகாதார சேவைகளை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளையும் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்படும் கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கும் வேலைத்திட்டத்தின் நிர்வகிப்பு செயற்பாடுகள் குறித்து அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக தனியார் பிரிவு தயாராக இருப்பதாக கலாநிதி பீரிஸ் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட மத்திய நிலையங்களுடன் இணைந்து தனியார் மருத்துவமனைகளிலும் கொவிட்-19 தடுப்பு மருந்து மத்திய நிலையங்களாக நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி அளித்திருந்தால் இந்த வேலைத்திட்டம் மிகவும் விஸ்தரிப்புடன் முன்னெடுத்துச் செல்ல முடியுமென APHNH குறிப்பிட்டுள்ளது.

பதுளையில் 6 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று

பதுளை பொலிஸ் நிலையத்தில், ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என்று பதுளை மாநகர பொது சுகாதாரப் பரிசோதகர் டி.டபிள்யு. பியல்பத்ம தெரிவித்தார்.

கொவிட் 19 தொற்றின் அறிகுறிகள், மேற்படி அறுவருக்கு தென்பட்டதினால், அவர்களுக்கு ‘ரிபட் என்டிஜன்’ பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து,

அவர்களுக்கு கொவிட் – 19 தொற்று உறுதியாகியிருப்பமை தெரியவந்துள்ளதாகவும் பொதுசுகாதாரப் பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.

பொலிசாருக்கான பதவி உயர்வு தொடர்பாக, அவர்களுக்கு விசேட பயிற்சிப்பாட நெறிகள் தற்போது பதுளைப் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இப்பாடநெறிகளை மேற்கொண்டிருக்கும் ஆறு பொலிசாருக்கு தடிமன் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டிருந்தமையினால், சந்தேகத்தின் பேரில், அவர்களுக்கு ‘ரிபட்என்டிஜன்’ இன்று மேற்கொள்ளப்பட்டன.

அதன் அறிக்கைக்கமைய கோவிட் 19தொற்று உறுதியாகியுள்ளமை தெரியவந்துள்ளது. இத்தகவலை, பதுளைப் பொலிஸ் நிலைய சிரேஸ்ட பொலிஸ் அதிபர் வசந்தக கந்தவத்தை உறுதிப்படுத்தினார்.

பதுளை மாவட்டத்தின் பதுளை, மடுல்சீமை, மகியங்கனை, ரிதிமாலியத்தை மற்றும் கிராந்துரு கோட்டை ஆகிய பொலிஸ் நிலையங்களின் தெரிவுசெய்யப்பட்ட பொலிசார், மேற்படி பதவி உயர்வுக்கான பாடநெறிகளை தற்போதுப துளைபொலிஸ் நிலையபயிற்சிக்கூடத்தில்முன்னெடுத்துவருகின்றனர்.

வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஆறு பொலிசார், பிந்துனுவௌகோவிட்19 தொற்று சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனரென்றும், பயிற்சி பாடநெறிகளை மேற்கொண்டிருக்கும் ஏனைய பொலிசாருக்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் என்டிஜன்மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், பதுளை மாநகர பொதுசுகாதாரப்பரிசோதகர்டி.டபள்யு. பியல்பத்ம மேலும் தெரிவித்தார்.

எம். செல்வராஜ, பதுளை

நோயாளர்கள், ஊழியர்கள் மற்றும் வெளியில் இருந்து வருவோரின் பாதுகாப்பு மற்றும் அவர்களது ஆரோக்கியம் ஆகியவற்றை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் நவலோக்க மருத்துவமனை குழுமம்

சர்வதேச தரத்தில் ஆரோக்கியமான சேவைகளுக்காக பாதுகாப்பான விதத்தில் பிரவேசிப்பதற்காக உள்ள சந்தர்ப்பத்தை விஸ்தரித்து நாட்டின் தனியார் மருத்துவ சேவைகளின் முன்னோடி மருத்துவமனை குழுமமான நவலோக்க வளைப்பின்னல் தமது நோயாளர்கள், ஊழியர்கள் மற்றும் மருத்துவமனைக்கு வருவோரின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக புதிய விதிமுறைகள் பலவற்றை நடைமுறைப்படுத்தியுள்ளது.

சமூகத்திற்குள் அன்றாடம் எதிர்படும் கொவிட்-19 தொற்றுநோய் அதிகரிப்புடன் மருத்துவமனை குழுமம் இந்த நடைமுறையை அமுல்படுத்தியுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் நிறுவனம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றினால் வெளியிடப்பட்ட வழிநடத்தல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சுகாதார அளவீடுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவதற்கு நவலோக்க மருத்துவமனை குழுமம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மருத்துவமனை வளாகத்திற்குள் வைரஸ் நோய் பரவுதல் அல்லது நோய்த் தொற்றுக்குள்ளாகும் சந்தர்ப்பத்தை துரிதமாக கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச மருத்துவ ஆய்வு நிறுவனங்களினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள முறைமைகளை உகந்த முறையில் படிப்பினையாகக் கொண்டு அந்த முறைமைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நவலோக்க மருத்துவமனை குழுமத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“சமூகத்திலிருந்து வெளியாகும் கொவிட் -19 வைரஸின் உச்ச அளவு பரவும் எண்ணிக்கையுடன் நவலோக்க மருத்துவமனை குழுமத்தின் நோக்கமானது நோயாளர்கள், ஊழியர்கள் மற்றும் சமூகத்தை பாதுகாத்து மருத்துவ சேவையை வழமை போன்று நடத்திக் கொண்டு செல்வது உண்மையிலேயே சிறந்த விடயமாகும்.

இந்த உலகளாவிய தொற்றுநோய் காரணமாக நாடும் மற்றும் இலங்கையர்களாக இந்த நோயிலிருந்து பாதுகாத்தல் மற்றும் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் பொறுப்பு குறித்தும் புதிதாக சிந்தித்துப் பார்ப்பதற்கு சமூகத்தை தூண்டினோம்.

விசேடமாக முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல், சிறந்த சுகாதார பழக்க வழக்கங்களை பின்பற்றுதல் போன்றவற்றின் மூலம் கொவிட் தொற்றுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு முடியுமென்பதை நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.”

என நவலோக்க மருத்துவ குழுமத்தின் பிரதித் தலைவர் ஹர்ஷித் தர்மதாஸ தெரிவித்தார்.

கொவிட் தொற்றுநோய் சமூகத்தில் பரவுவது அதிகரித்துள்ள நிலைமையில் மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளிலும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவதற்கு நவலோக்க மருத்துவமனை குழுமம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனூடாக மருத்துவமனை வளாத்திற்குள் நோய் பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு நவேலாக்க மருத்துவமனை குழுமத்திற்கு தற்போது முடிந்துள்ளது.

அதன்படி நோயாளர்கள், வெளியிலிருந்து வைத்தியசாலைக்கு வருவோர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்காக வெவ்வேறு சுகாதார பாதுகாப்பு முறைமைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட்-19 நோய் அறிகுறி இருக்கிறதா என மருத்துவமனைக்கு அல்லது இரசாயனகூடத்திற்கு பிரவேசிக்கும் அனைத்து நோயாளர்கள், வெளியில் இருந்து வருவோர் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து பரிசோதிக்கப்படுவது, அனைத்து சந்தர்ப்பங்களிலும் நோயாளர்கள் மற்றும் வெளியிலிருந்து வருவோர் முகக் கவசங்களை அணிவதற்கான ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் தனிப்பட்ட விதமாக பாதுகாப்பு ஆடைகளை அணிந்திருத்தல் அவசியமானது என இதன் அடிப்படையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முழு மருத்துவமனை சூழலும் 12 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

நவலோக்க மருத்துவமனை குழுமத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக நோய் பரவுவதை துரிதமாக கட்டுப்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது.

விசேடமாக நவலோக்க மருத்துவமனை குழுமத்தினால் அண்மையில் அறிமுகம் செய்துள்ள வாகனத்திலிருந்து இரசாயன கூடம் மற்றும் Channeling சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கான வசதிகள், வீட்டிற்கே சென்று மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனை, வீட்டிற்கே சென்று பெற்றுக் கொடுக்கப்படும் மருந்துப் பொருள் சேவை ஆகியன போன்றே டெலிஹெல்த் வசதிகள் மூலம் வீட்டிலிருந்தே பல்வேறு நோய்கள் குறித்த சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை நவலோக்க மருத்துவமனை குழுமத்தினால் பெற்றுக் கொடுக்கப்படுகின்றது.

உலக சுகாதார அமைப்பு மற்றும் சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார வழிநடத்தல்களை கண்டிப்பாக பின்பற்றுவதற்காக நவேலாக்க மருத்துவமனை ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன் உலகளாவிய தொற்றுநோய் நிலைமை நிலவிய சந்தர்ப்பத்தின் போதும் அதிலிருந்து விலகி நோயாளர்கள் மற்றும் பொதுமக்களை பாதுகாப்பதற்காக நவலோக்க குழுமத்திலுள்ள அனைவரினாலும் வழங்கப்பட்ட நடவடிக்கைகள் மிகவும் போற்றத் தக்கது என்பதே எனது கருத்தாகும்.”

என ஹர்ஷித் தர்மதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.

நவலோக்க மருத்துவமனையின் நிபுணத்துவ சிகிச்சை மத்திய நிலையத்தை அமைத்ததனால் அதுவரை இருந்து வந்த நெரிசல்களுக்கு தீர்வு கிடைத்துள்ளதுடன் சமூக இடைவெளியை பேணக்கூடிய இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இந்த மத்திய நிலையம் குறித்து மேற்கொண்ட முதலீடு நவலோக்க மருத்துவமனையின் மேம்மட்ட முகாமைத்துவத்தினால் எடுக்கப்பட்ட தூரநோக்க தீர்மானமாக தெளிவாகத் தெரிகிறது.

இந்த மத்திய நிலையமானது 4 லட்சம் அடி சதுர பரப்பைக் கொண்டுள்ளதுடன் இதில் நிபுணத்துவ மருத்துவ சேவை மத்திய நிலையங்கள் மற்றும் சிறந்த வாகனத் தரிப்பிட வசதிகளையும் கொண்டது.

இதில் அமைக்கப்பட்ட அனைத்து நிபுணத்துவ மருத்துவ சேவைப் பிரிவுகளும் அனைத்து வசதிகளுடன் இருப்பதுடன் நோயாளர்களின் தனிப்பட்ட விதமாக பாதுகாத்துக் கொள்வதற்காகவும் மற்றும் சமூக இடைவெளியை பேணுவதற்கும் வழிவகுப்பதுடன் கொவிட் வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் மற்றும் நோய் தொற்றுவதற்கான சந்தர்ப்பம் உச்ச அளவில் குறைக்கக் கூடிய விதத்தில் இந்த சூழலுக்குள் சந்தர்ப்பம் உள்ளது.

நிபுணத்துவ மருத்துவ சேவை மத்திய நிலையத்தின் ஒவ்வொரு மாடியிலும் மருந்தகம் மற்றும் இரசாயனக் கூட வசதிகளைக் கொண்டுள்ளதனால் மருத்துவமனை சூழலில் சனநெரிசல் குறைவடைந்துள்ளதால் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவரிடமிருந்து மற்றுமொருவருக்கு ஏற்படும் சந்தர்ப்பம் முழுமையாக தடுக்க முடியும்.

இந்த நிபுணத்துவ சேவை மத்தியநிலையம் அமைக்கப்பட்டுள்ள விதத்திற்கு ஏற்ப உலகளாவிய தொற்றுநோய் பரவும் இந்த காலகட்டத்தில் இந்த வைரஸால் மீண்டு பாதுகாப்பாக அன்றாட சிகிச்சைகளில் ஈடுபடக் கூய சிறந்த இடமாக நவலோக்க நிபுணத்துவ மருத்துவ சேவை மத்திய நிலையத்தை உறுதியாகக் கூற முடியும்.

வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துதல் மற்றும் நோயாளர்கள், ஊழியர்கள் மற்றும் வெளியில் இருந்து வருவோரை பாதுகாப்பதற்காக முடிந்தளவு உச்ச பாதுகாப்புவிதிமுறைகளை தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், தனிப்பட்ட பாதுகாப்பு அடைகளை அணிதல் போன்ற விடயங்களை மருத்துவமனைக்குள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் தேவைகளுக்கு ஏற்ப வீட்டிற்குள் சுய தனிமைப்படுத்தப்படுதல் போன்ற நடவடிக்கைகளையும் மருத்துவமனையினால் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நவலோக்க வைத்தியசாலை தொடர்பாக

தற்போது நவலோக்க மருத்துவமனை உள்நாடு மற்றும் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் தெற்காசியாவிலேயே முதலாவது 640 Slice CT ஸ்கேனர், இலங்கையில் முதலாவது MRI ஸ்கேனர், முதலாவது 3D ஹோலோஜிக் மெமோகிரஃபி கட்டமைப்பு, முதலாவதாக நிறுவப்பட்ட ரத்தக்குழாய் பைபாஸ் பிரிவு போன்ற சேவைகள் மற்றும் மேலும் பல உயர்ந்த தொழில்நுட்ப வைத்திய உபகரணங்களை இந்த நாட்ற்கு அறிமுகம் செய்வதில் முன்னோடிகளாக திகழ்கின்றன. நவலோக்க மருத்துவமனையினால் சர்வதேச JCI (HOSPITAL ACCREDITATION FROM JOINT COMMISSION INTERNATIONAL) தரப்படுத்தலைப் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது.

தங்க முத்திரையினால் உறுதிப்படுத்தப்பட்ட இந்த தரப்படுத்தலின் ஊடாக சர்வதேச தரத்தில் சுகாதார சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்காக நவலோக்க மருத்துவமனை காட்டும் அர்ப்பணிப்புக்கள் இதில் தெளிவாக பிரதிபலிக்கின்றன.

சமீபித்துள்ள எதிர்காலத்தில் நவலோக்க மருத்துவமனையினால் இந்த வசதிகளை கதிரியக்கவியல் மற்றும் ஏனைய பூரண மருத்துவ சேவகளுக்கு விஸ்தரிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. அதன்போது பயனாளர்களுக்கு CT / MRI ஸ்கேன், X கதிரியக்க ஸ்கேன், US ஸ்கேன், மெமோ கிரஃபி மற்றும் டெக்ஸா போன்ற சேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

முன்கூட்டியே ஒதுக்கப்பட்ட மருத்துவ சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகளை ஈ சேவை ஊடாக மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...