Home Blog Page 3617

பசறையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

பசறையில் மேலும் இருவருக்கு இன்று (18/02)கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டதாக பசறை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் வீ.இராஜதுரை தெரிவித்தார்.

மீரியபெத்த பகுதியை சேர்ந்த 39 வயது பெண் ஒருவரும் 53 வயதுடைய ஆணொருவருமே இன்று தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

நடராஜா மலர்வேந்தன்

பசறையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

பசறையில் மேலும் இருவருக்கு இன்று (18/02)கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டதாக பசறை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் வீ.இராஜதுரை தெரிவித்தார்.

மீரியபெத்த பகுதியை சேர்ந்த 39 வயது பெண் ஒருவரும் 53 வயதுடைய ஆணொருவருமே இன்று தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

நடராஜா மலர்வேந்தன்

இம்ரான் கானின் நாடாளுமன்ற உரை ரத்து – முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தி!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் நாடாளுமன்ற உரை இரத்து செய்யப்பட்டது ஏமாற்றமளிக்கின்றது நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

 “எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள எண்ணியுள்ள பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான்கானின் விஜயத்தின் போது இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் திடீரென அவரது நாடாளுமன்ற உரை இரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்தின் மீது கொண்ட நம்பிக்கைக்கு எதிரான செயலாகவே பார்க்கமுடிகிறது.

இம்ரான்கானின் இலங்கை நாடாளுமன்ற விசேட உரையில் அவர் எந்த விடயங்களை பேசப்போகிறார் என இலங்கை மக்கள் மட்டுமில்லாது சர்வதேசமே உன்னிப்பாக நோக்கிக் கொண்டிருந்த இந்த சூழ்நிலையில் அவரின் உரை ரத்து செய்யப்பட்ட செய்தி வெளியாகியுள்ளமை பலத்த ஏமாற்றத்தையும் கவலையையும் தோற்றுவித்துள்ளது.

இலங்கையின் நட்பு நாடுகளில் முதன்மையான சர்வதேச ஒற்றுமையை வலியுறுத்தி தனது அரசியலை முன்னெடுக்கும் பாகிஸ்தானிய பிரதமருக்கு இவ்வாறான தர்மசங்கட நிலையை உருவாக்கி அவமானத்தை உண்டாக்கியுள்ள இந்த செயற்பாடானது இலங்கை அரசாங்க ராஜதந்திர போக்கின் தொய்வு நிலையை காட்டுகிறது.

ஜனநாயக வலிமை, நீதி, நியாயத்தை வலியுறுத்தல் உட்பட இலங்கையின் பல்லின மக்களின் பிரச்சினைகளை இலங்கை நாடாளுமன்றத்தில் பேசி இலங்கை அரசாங்கத்துக்கு வேண்டுகோளை முன்வைப்பார் என இலங்கை சிறுபான்மை மக்கள் மத்தியில் நம்பிக்கை பரவியிருந்த நிலையிலையே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கமும், சபாநாயகரும் மீள் ஆலோசனை செய்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இலங்கை நாடாளுமன்ற விசேட உரையை உறுதிப்படுத்த முன்வர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

சேலையுடன் வலம்வந்த கவர்ச்சி கன்னி சன்னி லியோன்

பிரபல ஆபாச நடிகை சன்னி லியோன், ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன். இவர் படப்பிடிப்புக்கு கேரள மாநிலம் வந்துள்ளார். கணவர் டேனியல் மற்றும் 3 வளர்ப்பு குழந்தைகளுடன் திருவனந்தபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி உள்ளார்.

இந்நிலையில் சன்னி லியோன், கேரள வழக்கப்படி அழகான சேலை கட்டி, தலையில் மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு, தான் தங்கியுள்ள விடுதியில் தோற்றம் அளிக்கும் போட்டோவை விடுதி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அவரது கணவர் டேனியல், வேட்டியும், குர்தாவும் அணிந்திருக்க, குழந்தைகள் டவுசர்- சட்டையில் போஸ் கொடுத்துள்ளனர்.

சன்னி லியோன் சேலை அணிந்துள்ள போட்டோ, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

காதலிக்காக ஒட்டகக் குட்டியை களவாடிய காதலன் கைது!

உலகின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 14 ஆம் திகதி சர்வதேச காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் காதலர்கள் பலர் தங்களுக்கு பிரியமானவர்களுக்கு பல்வேறு விதமான பரிசுகளை வழங்கி மகிழ்ச்சிப் படுத்தினர்.

இதன் ஒரு பகுதியாக துபாயில் வசித்து வரும் அமீரக வாலிபர் ஒருவரின் காதலிக்கு காதலர் தினத்தையொட்டி பிறந்த நாள் வந்தது. எனவே, அன்று ஏதாவது ஒரு பரிசளிக்க வழங்க வேண்டும் என அவர் திட்டமிட்டார்.

இதையடுத்து அந்த பகுதியில் ஒட்டகங்கள் இருந்த பண்ணைக்கு சென்று அதன் உரிமையாளருக்கு தெரியாமல் ஒட்டக குட்டி ஒன்றை எடுத்து வந்து காதலிக்கு காதலர் தின பரிசாகவும், பிறந்த நாள் பரிசாகவும் கொடுத்தார். இதனால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். எனினும் இந்த ஒட்டக குட்டி எப்படி கிடைத்தது? என்பது குறித்து காதலி அவரிடம் கேட்கவில்லை.

இந்த நிலையில் ஒட்டக பண்ணையின் உரிமையாளர் தனது பண்ணையில் ஒட்டகம் ஒன்றின் குட்டியை பிறந்து சில மணி நேரங்களே காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் பொலிஸில் முறைப்பாடு தெரிவித்தார். இதன்படி பொலிஸார் விசாரணையை தொடங்கினர்.

காணாமல் போன ஒட்டக குட்டியை பொலிஸார் தேடி வருவதாக தகவல் கிடைத்ததும் அமீரக வாலிபரும், அவரது காதலியும் அதிர்ச்சியடைந்தனர். பொலிசுக்கு பயந்து அந்த வாலிபர் காதலியிடம் இருந்த ஒட்டக குட்டியை வாங்கி அதனை திருடிய பண்ணையின் வாசலின் முன்பு விட்டார். அதன் பின்னர் பொலிசுக்கு அழைப்பை ஏற்படுத்தி  ஒட்டக குட்டி ஒன்று பண்ணையின் வெளியில் நிற்பதாக கூறினார்.

அதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார்ர் தகவல் தெரிவித்த வாலிபரிடம் விசாரித்தார். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். அந்த பண்ணைக்கும், அடுத்த பண்ணைக்கும் இடையே சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

இந்த தூரத்தை கடந்து ஒட்டக குட்டி வர வாய்ப்பில்லை. எனவே சந்தேகம் அடைந்த பொலிஸார்  அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், தான் ஒட்டக குட்டியை திருடி தனது காதலிக்கு காதலர் தின அன்பளிப்பாகவும், பிறந்த நாள் பரிசாகவும் வழங்கியதை ஒப்புக் கொண்டார். மேலும் இதற்காக இரவு நேரத்தில் அந்த பண்ணைக்கு சென்று திருடியதாக கூறினார். இந்த திருட்டை மறைக்க பல்வேறு பொய்களை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் ஒட்டக குட்டியை திருடிய வாலிபரையும், திருடிய ஒட்டகத்தை பரிசாக பெற்ற காதலியையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். தொடர்ந்து அவர்கள் மீது விசாரணை நடந்து வருகிறது.

துபாய் நகரில் காதலிக்கு அன்பளிப்பாக வழங்க ஒட்டக குட்டியை திருடிய சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘இம்ரான் கானை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர வேண்டாம்’

கொரோனா வைரஸ் தாக்கத்தால்பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பாராளுமன்றத்திற்கு அழைத்து வர வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வௌிவிவகார அமைச்சிடம் எழுத்து மூலம் கோரியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரை பாராளுமன்றத்திற்கு அழைப்பதாக இருந்தால், பாராளுமன்ற ஊழியர்கள் அனைவரையும் அழைக்க வேண்டி ஏற்படுவதாகவும், தற்போதைய சூழ்நிலையில் அது பொருத்தம் இல்லை​​யெனவும் சபாநாயகர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன், அவர் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பதுளையில் இதுவரை ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று!

பதுளை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. நேற்று மாத்திரம் 38தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் பதுளை மாவட்டத்தில் இதுவரை 1,000பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. கடந்துள்ள 17 நாட்களில் 833 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கண்டி மாவட்டத்தில் நேற்று 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

” பெருந்தோட்ட மக்களின் வலி நிறைந்த போராட்டத்தை அரசு புரிந்துகொள்ள வேண்டும்”

” இன்று வாழ்க்கைச்செலவு உச்சம் தொட்டுள்ளது. இந்நிலையிலும் ஆயிரம் ரூபா குறித்து மட்டுமே பேசப்படுகின்றது. அத்துடன், கூட்டு ஒப்பந்தத்திலுள்ள சலுகைகள் எதுவும் நீக்கப்படாமலேயே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கவேண்டும். இனியாவது அம்மக்களின் வலி நிறைந்த போராட்டத்தை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திரா பிரகாஷ் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

வாழ்க்கை செலவு பாரதூரமாக அதிகரித்துள்ள போதிலும் பெருந்தோட்ட மக்களின் வலி நிறைந்த போராட்டத்தை அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை. இதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கிலும் கொடுத்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

தமிழ் மக்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன. நாட்டில் மத சுதந்திரம் காணப்பட வேண்டும். ஆனால் இலங்கையில் அவ்வாறில்லை. இலங்கை பூகோள ரீதியில் முக்கிய இடத்தை வகிக்கிறது என்பதற்காக தேசிய சொத்துக்களை சர்வதேசத்திற்கு தாரை வார்க்க இடமளிக்க முடியாது.

கொவிட் தடுப்பூசிகளை அரசாங்கம் கொள்வனவு செய்து அனைத்து மக்களுக்கும் வழங்க முடியாதா? இதற்கான பலம் அரசாங்கத்திற்கு இல்லை. மேல் மாகாணம் அபாய வலயமாக பெயரிடப்பட்டுள்ள போதிலும் இங்கு துறைமுகம் உள்ளிட்டவற்றில் தொழில் புரிவபர்களுக்கு முதலில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மத்திய வங்கி மோசடியுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதாகக் கூறியே அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் தற்போது அதனை விட பாரிய மோசடிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அண்மையில் இடம்பெற்ற சீனி இறக்குமதி மூலம் கிடைத்த வருமானமே கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள போதுமானதாகும் என்றார்.

ஒரு இலட்சம் கோடி பண மோசடி – அறுவர் கைது! சினிமாப்பாணியில் சம்பவம்!!

ஒரு இலட்சம் கோடி வெளிநாட்டு பண விவகாரம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவரிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய சிலர் தாம் மத்திய வங்கியில் இருந்து கதைப்பதாக தெரிவித்துள்ளனர். இதன்போது இவரது வங்கிக் கணக்கில் பத்தாயிரம் கோடி ரூபா பணம் அமெரிக்க நாட்டிலிருந்து வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், அதனை வெளியில் எடுப்பதற்கு உதவி செய்வதாகவும் தெரிவித்து, 7500 கோடியை தங்களுக்கு தருமாறும் 2500 கோடியை குறித்த இளைஞருக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ் விடயம் தொடர்பாக அந்த இளைஞரும் கடந்த வருடம் ஜூன் மாதத்திலிருந்து அந்த குழுவினருடன் இணைந்து கொழும்பில் தங்கியுள்ளார். இதேவேளை கொழும்பில் வைத்து அவரது வங்கிக் கணக்கில் ஒரு இலட்சம் கோடி மதிப்பிலான இலங்கை ரூபா வைப்பில் இடப்பட்டுள்ளதாக அந்த குழு இளைஞரிடம் தெரிவித்துள்ளது. எனினும் பணம் எடுக்க முடியாத நிலையில் மீண்டும் அவர் வவுனியாவிற்கு வந்துள்ளார்.

இந் நிலையில் நேற்று முன்தினம் குறித்த இளைஞரை மீண்டும் தொடர்புகொண்ட அந்த குழுவினர் பணத்தை மீட்பதற்காக கொழும்பு செல்வதாக தெரிவித்து அவரை வாகனம் ஒன்றில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் இளைஞர் அவர்களுடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இளைஞனின் நண்பன் வழங்கிய தகவலிற்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரிற்கு குறித்த விடயம் தெரியப்படுத்தப்பட்டது. பொலிசார் அந்த குழுவினரை கைது செய்தனர்.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் இளைஞனிடம் வாக்குமூலத்தை பெற்றுள்ளதுடன், இது தொடர்பாக மத்திய வங்கிக்கும் தெரியப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட 6 நபர்களும் கொழும்பு, அவிசாவளை, குருநாகல், மற்றும் வவுனியா போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளதாகவும், அவர்கள் பயன்படுத்திய மூன்று சொகுசு வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டனர்.

இந் நிலையில் சந்தேகநபர்கனை நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை நிர்மாணிக்க டில்லி பச்சைக்கொடி!

கொழும்பு துறைமுகத்தில் மேற்கு முனையத்தை நிர்மாணித்து அதனை அபிவிருத்தி செய்வதற்கான விருப்பத்தை இந்தியா வெளியிட்டுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இது தொடர்பில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலால் கொழும்புக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவ்வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இந்தியாவால் கோரப்பட்டிருந்த கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அந்நாட்டுக்கு வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முன்னதாக தீர்மானம் எடுத்திருந்தாலும் அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அரச பங்காளிக்கட்சிகளே போர்க்கொடி தூக்கின.

இதனால் கிழக்கு முனையத்தை வழங்காதிருக்கும் முடிவை கொழும்பு எடுத்திருந்தது. இதற்கு டில்லி கடும் எதிர்ப்பை வெளியிட்டது. இந்நிலையில் கிழக்கு முனையத்துக்கு பதிலாக துறைமுகத்தின் மேற்கு பரப்பை அபிவிருத்தி (மேற்கு முனையம்) செய்வதற்கான வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு இந்திய தரப்பில் தற்போது பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. அதேபோல இவ்விவகாரம் குறித்து ஜப்பானும் இந்தியாவுடன் ஆலோசனை நடத்திவருவதாக இராஜதந்திர மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு பரப்பை அபிவிருத்தி செய்வதற்கு (மேற்கு முனையம் அமைப்பதற்கு) அரசு சார்பான தொழிற்சங்கங்கள் ஏற்கனவே ஆதரவை வெளியிட்டுள்ளன. எனினும், இதர தொழிற்சங்கங்கள் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

மலையக மக்கள்மீதான வன்முறை குறித்து 19 ஆம் திகதி முத்தரப்பு சந்திப்பு!

0
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள்மீது, நிர்வாக தரப்பினரால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைச் சம்பவங்களை தடுத்து நிறுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (19) நடைபெறவுள்ளது. இது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

கொழும்புத் துறைமுகத்தில் ஐஓஎஸ் சாகர்

0
இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சுனைனா, இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை அடைந்துள்ளது. இது, இந்தப் பணியின் இரண்டாவது கட்டத்தில், அதன் ஏழாவது துறைமுகப் பயணமாகும். இது கடலில் மேற்கொள்ளப்படும் ஒரு தனித்துவமான அனைத்துலக...

நில உரிமைக்காக ஒன்றிணையும் தமிழ் பேசும் சமூகங்கள்: கொட்டக்கலையில் முக்கிய தீர்மானம்!

0
கிழக்கு மாகாண காணி வலையமைப்பு செயற்பாட்டாளர்களுக்கும், மலையக சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சமூக அரசியல் ஆர்வலர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று பிற்பகல் கொட்டக்கலை சுயசக்தி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில்,...