Home Blog Page 3618

கொரோனாவால் 3 நாட்களில் 25 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸால் நாட்டில் கடந்துள்ள மூன்று நாட்களில் மாத்திரம் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 409 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா முதலாவது அலையின்போது 13 பேர் மாத்திரமே உயிரிழந்தனர்.இதன்படி கொரோனாவால் இதுவரை மொத்தமாக 409 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாத்திரம் 13 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகின.

கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் ஆரம்ப பாடசாலை – ராஜமணி பிரசாந்த் யோசனை

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கொமர்ஷல் பகுதியை மையமாகக் கொண்டு தரம் ஐந்து வரை கல்வி கற்க கூடிய வகையில் ஆரம்ப பிரிவு பாடசாலை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என கொட்டக்கலை பிரதேச சபை தவிசாளர் இராஜமணி பிரசாந்த் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கோரிக்கை முன்வைத்தார்.

நுவரெலியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இவ்வருடத்திற்கான முதல் அமர்வு நுவரெலியா பிரதேச செயலகத்தில் நேற்று (16) நடைபெற்றது.

நுவரெலியா பிரதேச செயலாளர் விதுர சம்பத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் குமாரவேல் தொண்டமான் இந்த முதல் அமர்வை தலைமை தாங்கி நடத்தினார்.

இதன் போது பிரதேசவாரியாக அபிவிருத்தி தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய கொட்டக்கலை பிரதேச சபை தவிசாளர் இராஜமணி பிரசாத் மேற்குறித்த கோரிக்கையை முன்வைத்தார்.

இதில் அவர் மேலும் தெரிவித்ததாவது.

கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஆகில் தோட்டத்தில் பட்டதாரிகள் காணப்படுகின்ற போதிலும் அத்தோட்ட மாணவர்களுக்கான ஒரு ஆரம்ப பாடசாலை இதுவரை காலமும் அமைக்கப்படவில்லை என பலராலும் பிரதேச சபைக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஆகில் தோட்டம் ஹட்டன் வலயகல்விக்கும் நுவரெலியா வலையக்கல்விக்கும் உரித்துடையதாக காணப்படுகிறது.

இதற்கு முக்கியமான காரணம் ஆகில் தோட்டம் தனியார் தோட்டமாகும் அதேநேரத்தில் இத்தோட்டம் இரண்டு கல்வி வலையங்களுக்கு உரித்தான தோட்டமாகும்.

ஆகையால் நீண்டகாலமாக இத்தோட்டத்தில் ஒரு ஆரம்ப பாடசாலை ஒன்றை அமைக்க சிக்கல் நிலை தோன்றியுள்ளது.
என சுட்டிக்காட்டிய தவிசாளர் இத்தோட்டத்தில் ஆரம்ப பிரிவு மாணவர்கள் வெவ்வேறு தூரத்து பாடசாலைகளுக்கு சென்று சிரமத்தை எதிர்கொண்டு கற்க்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

இதே போல ஆகில் தோட்டம் ,கொமர்ஷல் பகுதி ஆகிய மேலும் அருகில் உள்ள தோட்டங்களை உள்ளடக்கிய ஆரம்ப பிரிவு மாணவர்களும் அதே சிரமத்தை எதிர் கொள்கின்றனர்.

எனவே கொமர்ஷல் பகுதியை மத்திய பகுதியாக கொண்டு தரம் ஐந்து வரை வகுப்புகள் கொண்ட பாடசாலை ஒன்றை கொமர்ஷல் பகுதியில் அமைக்க வேண்டியது அவசியமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் கொமர்ஷல் பகுதியை மத்திய பகுதியாக கொண்டு ஆரம்ப பாடசாலை ஒன்றை அமைக்க கொட்டக்கலை கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு அருகில் தரிசு இடம் காணப்படுவதாகவும் , அவ்விடத்தை பெற்று அங்கு பாடசாலை அமைக்க முடியுமெனவும் அபிவிருத்தி குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதனால் ஆகில் தோட்டம் மற்றும் கொமர்ஷல் பகுதி உள்ளிட்ட அருகில் உள்ள தோட்டங்களை சார்ந்த ஆரம்ப பிரிவு மாணவர்கள் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரை கல்வி கற்க உதவியாக இருப்பதுடன் தரம் ஆறுக்கு கொட்டக்கலை பிரதேச பாடசாலைகளுக்கு செல்ல முடியும் என்பதையும் அபிவிருத்தி குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

அதேநேரத்தில் இக் குழு கூட்டத்திற்கு தலைமையேற்றிருந்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரமேஸ்வரன் மற்றும் வீ.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இக்கோரிக்கையை ஏற்றதுடன் கல்வி வலைய உதவி பணிப்பாளர் எஸ். மோகன்ராஜ் கவனத்திற்கு தெரிவிக்கப்பட்டதுடன் இதற்கான தீர்வினை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பெற்று தருவதாகவும் தெரிவித்தார்

இலங்கையில் பா.ஜ.கவை ஆரம்பிக்கும் திட்டம் உள்ளது – சிவசேனை தலைவர் பரபரப்பு தகவல்

இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கான நோக்கம் உள்ளதாக இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் BBC செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள இந்துத்துவவாதிகளுக்கே இவ்வாறான நோக்கம் உள்ளதாக தான் உறுதிபடக் கூறுவதாகவும் மறவன்புலவு க. சச்சிதானந்தன் கூறியதாக BBC செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய பாரதிய ஜனதா கட்சி இலங்கையிலும் நேபாளத்திலும் அரசியல் செயற்பாடுகளை விஸ்தரிக்க தீர்மானித்துள்ளதாக அண்மையில் வௌியாகிய அறிவிப்பிற்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நேபாள வௌிவிவகார அமைச்சர் Pradeep Kumar Gyawali தமது ட்விட்டர் தளத்தில் எதிர்ப்பை பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் உள்விவகார அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவருமான அமித் ஷாவின் கருத்துக்களுக்கு நேபாள அரசு தனது எதிர்ப்பை உத்தியோகபூர்வமாக தெரிவிப்பதாகவும் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேபாளத்தின் எதிர்ப்பு குறித்து, இந்தியாவிற்கான நேபாள தூதுவர் Nilamber Acharya, இந்திய வெளிவிவகார அமைச்சின் நேபாள மற்றும் பூட்டானுக்கான இணைப்பு செயலாளருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய பாரதிய ஜனதா கட்சி இலங்கை மற்றும் நேபாளத்தில் தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அமித் ஷா தெரிவித்ததாக, இந்திய திரிபுரா மாநில முதலமைச்சரும் பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவருமான Biplab Kumar Deb அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஆயிரம் ரூபா விடயத்திலும் அரசு ‘பெயில்’ ஆகக்கூடாது!

“ஆடத்தெரியாதவனுக்கு மேடை கோணலாம் என்பதுபோல்தான் ஆயிரம் ரூபா விடயத்தில் அரசாங்கம் நடந்து கொள்கின்றது. சம்பள நிர்ணய சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும். கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள சலுகைகளும் நீக்கப்படக்கூடாது. இதனை செய்யாவிட்டால் சம்பள உயர்வு விவகாரத்திலும் அரசு பெயில் என்பது உறுதியாகிவிடும்.”

இவ்வாறு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

https://www.facebook.com/sjbsrilanka/videos/222905532901874

கடல் அலை இரண்டு மீற்றர் வரை மேலெழும் : நாளை காலை வரை எச்சரிக்கை

மன்னார், காலி ஊடான ஹம்பாந்தோட்டை வரையான கரையோர பகுதிகளில் கடல் அலை அதிக சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறித்த பகுதிகளில் கடல் அலையின் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை மேலெழும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் அலையின் சீற்றம் அதிகரிக்கின்றமையினால், கடல் நீர் நிலப்பரப்பிற்குள் வரும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (16) காலை 09.00 மணி முதல் நாளை (17) காலை 09.00 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சொஃப்ட்லொஜிக் லைஃப் ‘வியாதி வியாதி’ எண்ணக்கருவை புதிய இயல்பாக்கத்திற்காக ‘நல்ல வியாதி’ என்ற கலாசாரத்தை ஏற்படுத்த முனைகின்றது

புதிய இயல்பாக்கத்திற்கான சவால்களை ஒன்றிணைந்து வெற்றி கொள்வதற்கு இலங்கைக்கு வழி கூறும் நாட்டின் சிறந்த சுகாதார காப்புறுதி சேவை வழங்குனரான சொஃப்ட்லொஜிக் லைஃப் தமது விசேட ‘வியாதி வியாதி’ வர்த்தக நாம வியாபாரம் ஊடாக முதியோர் மற்றும் பிள்ளைகளுக்கான சரீர மற்றும் மனநிலையை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக பின்புலத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கமைய நாம் அனைவரும் எதிர்கொள்ளும் தொற்று நிலையில் மக்களின் சரீர மற்றும் மன ஆரோக்கியம் தொடர்பாக அழுத்தத்துடன் இருக்கும் இலங்கையர்களுக்கு ‘நல்ல வியாதி’ என்ற எண்ணக்கருவை ஏற்படுத்தி, கொவிட்-19 காரணமாக ஏற்படும் கெட்ட வியாதிகளுக்கு எதிராக குடும்பமாக போராடுவது தொடர்பான கலந்துரையாடல்களை சமூகத்தில் ஏற்படுத்தும் ஒரே வர்த்தக நாமமாக சொஃப்ட்லொஜிக் லைஃப் உள்ளது.

தொழில், கல்வி, வியாபாரம், செயற்பாட்டு மற்றும் சமூக வியூகங்கள் சூழவுள்ள புதிய இயல்பாக்க பாவனைகள் மற்றும் விதிகளானவை, பெரும்பாலும் மனிதர்களதும் அவர்களது வாழ்க்கைக்கும் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் தாக்கம் செலுத்துகின்றன.

அத்தகைய நிலைமையின் கீழ் அநேகரின் கவனம் திரும்பாத முக்கிய காரணியான கொவிட்-19 தொற்று மனநிலை மற்றும் தனிநபர் நடத்தைகளுக்கு பல்வேறு வகையில் அழுத்தம் கொடுப்பதாக சொஃப்ட்லொஜிக் லைஃப் புரிந்துகொண்டுள்ளது. அனைத்து இலங்கையர்களுக்கும் உயர்தர வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் உள்ள வர்த்தக நாமமாக சொஃப்ட்லொஜிக் லைஃப் மனநிலை ஆரோக்கியம் தொடர்பாக விசேட கவனத்தை செலுத்தி தொற்று நோய் காரணமாக ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்வதற்கு தேவையான அழுத்தங்கள் தொடர்பாக நபர்கள் மற்றும் குடும்பங்களின் புரிந்துணர்வை அதிகரிப்பதற்கு மக்களை அறிவுறுத்துவது தமது நிறுவனத்தின் கூட்டாண்மை பொறுப்பாக கொண்டுள்ளது. ஒரே இலங்கை குடும்பமாக ‘நல்ல வியாதி’ (குடும்பமாக நல்ல வியாதி) ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நம்பும் சொஃப்ட்லொஜிக் லைஃப் இந்த நம்பிக்கையற்ற காலத்தில் அனைத்து நபர்களும் அனைவருடனும் சந்தோஷமாகவும் நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ்வதற்கான குடும்பமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சொஃப்ட்லொஜிக் லைஃப் சந்தைப்படுத்தல் பிரிவின் உபதலைவர் கவி ராஜபக்ஸ ‘ கொவிட்-19 தொற்று குடும்பங்களுக்கு போன்று தனிநபர் வாழ்க்கையிலும் அனைத்து பிரிவுகளுக்கும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பெற்றோருக்கு குடும்பம் மற்றும் தொழில் ஆகிய இரண்டையும் ஒருசேர கவனிக்க வேண்டியுள்ளதால் அழுத்தம், கோபம் போன்ற தேவையற்ற மன நிலை ஏற்பட்டுள்ளது. பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லாதபடியால் நண்பர்களுடன் இணைந்து செயற்பட, பாட விதானங்களை செய்வதற்கு முடியாமை, அனைத்து நேரங்களிலும் ஒரே மாதிரி இருக்க வேண்டியுள்ளது. பிள்ளைகள் வீட்டில் இருந்தபோதிலும் பெற்றோரும் வீட்டிலிருந்து தமது தொழில்களை செய்ய வேண்டியுள்ளதால் பிள்ளைகள் மீதான கவனம் குறைவதால், வயதுக்கு வந்த பிள்;ளைகள் தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்துவது போன்ற ஏனைய சுகாதார சீர்கேடான பழக்கத்திற்கு உட்பட்டனர். எதிர்காலத்திலும் இவ்வாறே வாழ வேண்டும் என அவர்கள் நினைத்ததே இதன் பாரதூரமான நிலையாகும். பிள்ளைகளுக்கு மேலதிகமாக வெளிச் சமூகத்தை பழகுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத வயதுவந்த பெற்றோர், இளைஞர்கள் வீட்டிற்குள் முடங்கி வாழும் திருமணமாகாத இளைஞர்கள் போன்ற அனைவருக்கும
் இந்த தனிமையானது எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தி அவர்கள் மனநிலையை பாதித்துள்ளது’ என கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த கவி ராஜபக்ஸ ‘எமது வாடிக்கையாளர்களது வாழ்க்கை நிலைமைய மேம்படுத்த அடிக்கடி நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு வாய்ந்த இலங்கை வர்ததக நாமம் என்ற வகையில் மனநிலையை கவனத்தில் கொள்ளும்போது கொவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக எதிர்பாராத மாற்றங்களுடன் வெற்றிகரமாக குடும்;ப மற்றும் தனிநபர் வாழ்க்கையை ஏற்படுத்துவது தொடர்பாக நன்கு அவதானித்தோம். அனைத்து இலங்கையர்களுக்கும் நேர்மறையான மாற்றத்த ஏற்படுத்தவதற்கும், குடும்பமாக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியது தொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தோம். அதற்காக நாம் விருது வென்ற எமது வியாதி, வியாதி வியாபாரத்தை பயன்படுத்தினோம். மக்களுக்கு போன்று விசேடமாக எமது இளம் பரம்பரையினருக்கு தொற்று ஏற்படக்கூடிய அபாய நிலை அழுத்ததை குறைப்பதற்காக பலமான தொடர்பாடலை ஏற்படுத்தவும் மக்கள் மத்தியில் அது தொடர்பான கலந்துரையாடல்களை ஏற்படுத்தவும் நாம் நடவடிக்கை எடுத்தோம்’ என கூறினார்.

இலங்கை காப்புறுதி துறையின் போக்கை மாற்றி 2018 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய வியாதி வியாதி என்ற படைப்பாற்றல் கொண்ட, செயற்திறன் கொண்ட உயர் சேவை போன்று மனங்களை ஈர்;க்கும் காப்புறுதி துறையின் அதிக பேச்சுக்கு இடமான தொடர்பாடல் நிகழ்ச்சியாக அமைந்தது.

2019 ஆம் ஆண்டு நுககநை விருது வழங்கும் நிகழ்வில் ‘Brand of the Year’ விருதை வென்றெடுத்தமையும் குறிப்பிடத்தக்கது என்பதுடன் அந்த விருது விழாவில் பாராட்டப்பட்ட ஒரு நிதி நிறுவனம் என்ற பெயரையும் பெற்றது. தற்போது சொஃப்ட்லொஜிக் லைஃப் இன் நோக்கம் இந்த செயற்திட்டம் ஊடாக இலங்கையர்களது கவனத்தை ஈர்ப்பதாகும். இந்த சோதனை காலத்தில் பலமாக செயற்படுவதற்காக குடும்பமாக அவர்களது சரீர ஆரோக்கியத்தை நன்றாக அறிந்து நல்ல வியாதி செயற்திட்டத்திற்காக பெரியவர்களையும் பிள்ளைகளையும் ஊக்குவிப்பதாகும்.

சொஃப்ட்லொஜிக் லைஃப் தொடர்பாக

சொஃப்ட்லொஜிக் லைஃப் காப்புறுதி நிறுவனம் இலங்கையில் சுகாதாரம், நுகர்வோர் பொருட்கள், தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம், மோட்டார் மற்றும் நிதி சேவை உள்ளிட்ட துறைகளில் பாரிய வளர்ச்சியையும் பன்முகப்படுத்தலையும் கொண்ட வர்த்தக வலையமைப்பை உடைய சொஃப்ட்லொஜிக் குழுமத்தின் உறுப்பினரான சொஃப்ட்லொஜிக் கெப்பிட்டல் பிஎல்சி உரிமத்தின் கீழ் உள்ளது. நிறுவனத்தின் குறிப்பிடக்கூடிய பங்காளர்களாக உலக முதலீட்டாளரான LeapFrog investment உள்ளது.

எயார்டெல் லங்கா நிறுவனம் தமது ஊழியர்களுக்கு செய்த வேலை

கொவிட்-19 காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நாடு முடக்கப்பட்டதை அடுத்து, எயார்டெல் லங்கா தமது ஊழியர்களது செயற்திறன், கற்றல் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை இரண்டு மடங்காக்கியுள்ளதுடன் அதன் பெறுபேறுகளை தற்போது அனுபவித்து வருகின்றது.

‘தற்போதுள்ள தொற்றுநோயுடன், ஒரு காலத்தில் நேருக்கு நேர் சந்திக்க ஊக்கப்படுத்தப்பட்ட பணியிட கலாசாரம் தற்போது மாற்றடைந்துள்ளது. இவ்வாறான இடையூறானது கற்றல் மற்றும் வளர்ச்சியின் தொடர்ச்சிக்கு ஒரு புதிய சவாலை முன்வைத்தது. பல நிறுவனங்கள் வௌ;வேறு வடிவங்களில் செலவுக் குறைப்பை செய்திருந்தாலும், முன்பைவிட கற்றல் மிக முக்கியமானது என நாம் அறிந்து கொண்டோம். நிறுவனம் மற்றும் தனிநபர்கள் மேலும் தாக்குப்பிடிக்கக்கூடிய, நிலைமைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளக்கூடிய மற்றும் புத்தாக்கத்தை ஏற்றுக்கொள்ள வழி அமைத்தோம்’ என எயார்டெல் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷிஸ் சந்திரா குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு காலாண்டுகளாக நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் 85% இற்கும் அதிகமானோருக்கு டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. பட்டப்படிப்பின் பின்னரான முகாமைத்துவ நிறுவனத்துடன் இணைந்து எயார்டெல் நிறைவேற்று அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு வணிக பாடசாலை ஊடாக விற்பனை தலைமைத்துவ அபிவிருத்தி செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதுவதிர இன்னும் பல பயிற்சி திட்டங்கள் முன்கள ஊழியர் படையணியை இலக்கு வைத்து நடத்தப்பட்டன.

கோர்செராவின் ஈ- லேர்னிங் மற்றும் எயார்டெல்லின் ஐ-லேர்னிங் நிகழ்ச்சிகளில் கல்வி கற்பதற்கு ஊழியர்கள் ஊக்குவிக்கப்பட்டனர், அதன்மூலம் அவர்களது தொழில்சார் அறிவு மேம்படும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. இந்த திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் ஈ-லேர்னிங் சாம்பியன்ஷிப் வழங்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக 4G திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கேற்றனர், அத்துடன் முழுநாட்டிற்கும் 4G LTE சேவைகளை வழங்குவதற்கான முன்னோடியாக ஊழியர்களுக்கு அந்த பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

‘ வலுவான மற்றும் பன்முகப்பட்ட குழுக்களை உருவாக்குவது எமது தலைமைச் செயற்பாடுகளில் மிக முக்கியமானது. எமது ஊழியர்கள் அனைவரும் தொலைதூரத்தில் இருந்தாலும் அவர்களுக்கு தமது பணிகளை செய்வதற்கான திறன்கள் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும். ஆகவே தான் எமது மனிதவள செயல்பாட்டின் அனைத்து அம்சங்களையும் டிஜிட்டல் மயப்படுத்துகின்றோம். இது உற்சாகமூட்டும் பயிற்சிகள், நிர்வாகப் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு போன்ற எளிமையான விடயங்களை குறிக்கின்றது. இவை அனைத்தும் தொலைதூர வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்பட்டன’ என எயார்டெல் லங்கா மனித வள பிரிவின் தலைவர் கனிஷ்க ரணவீர தெரிவித்தார்.

கடந்த இரண்டு காலாண்டுகளில் எயார்டெல் நிறுவனம் முன்னெடுத்த ஊழியர் இணைப்பு, மனித வள செயற்பாடுகளை டிஜிட்டல்மயப்படுத்தியமை ஊடாக தொடர்ச்சியாக சேவையை முன்னெடுத்து செல்வதற்கான சாட்சியாகும். இதுதவிர எயார்டெல் மனித வள டிஜிட்டல் செயற்பாட்டிற்குள் உள்நுழைந்ததுடன் ‘Airtel Tech Talk’ போன்ற துறையிள் பிரபலங்களுடன் நிறுவனத்திலுள்ள பிரபயல்மானவர்கள் தமது அறிவை பகிர்ந்து கொள்வதற்கு இதனை மேடையாக பயன்படுத்தினர்.

கொவிட் தொற்றைக் கட்டுப்டுத்த முச்சக்கர வண்டிகளுக்கு பயணிகள் பாதுகாப்பு கவசங்களை வழங்கும் HNB Finance

இலங்கையின் முன்னணி நிதி சேவை தொகுப்பாளர்களான HNB Finance PLC தமது நிறுவன ரீதியான சமூக பொறுப்புணர்வு அணுகலின் கீழ் கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கும் வகையில் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத் திட்டமொன்றை பிரதேச சுகாதார மருத்துவ அலுவலகம் மற்றும் நுகேகொடை மக்கள் சுகாதார பரிசோதனை அதிகாரி மாதவ கொடகெதரவின் ஒத்துழைப்புடன் HNB Financeஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத்தினதும் மற்றும் மேல்மாகாண பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கபில கட்டுபிட்டிய ஆகியோரின் பங்களிப்பில் நுகேகொடை, மிரிஹான பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கொவிட் தொற்றுநோய் நிலைமையின் போது பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லுதல் மற்றும் பயணிகள் சேவைகளை மேற்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தெளிவுபடுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இந்த வேலைத் திட்டத்திற்காக நுகேகொடை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் சேவைகளை மேற்கொண்டு செல்லும் முச்சக்கர வண்டி சாரதிகள் 250 பேர் இதில் பங்குகொண்டதுடன் அவர்களது முச்சக்கர வண்டிகளுக்காக தரமான பயணிகள் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்காக தரமான முகக் கவசங்களையும் வழங்குவதற்கு HNB Finance நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொவிட் தொற்றுநோய் சமூகத்திற்குள் பரவிச் செல்வதை தடுப்பதற்காக கொவிட் பரவுவதை கட்டுப்படுத்தும் விசேட நடவடிக்கை குழு மற்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் கட்டுப்படுத்தும் பிரிவினால் பயணிகள் பஸ் வண்டிகள் மற்றும் தனிநபர் முச்சக்கர வண்டிகளில் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் கண்டிப்பாக இருக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு இடையிலுள்ள இடைவெளியை பேணுவதற்கு பயணிகள் பாதுகாப்பு கவசங்களை அணிவிப்பதற்காக பயணிகளுக்கு ஆலோசனைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டதுடன் இதன் முக்கியத்துவத்தை மீறும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு 25,000 ரூபா தண்டனைக்கு உள்ளாவார்கள். சமூக இடைவெளி மற்றும் கொழும்பு நகரும் அதனை அண்டிய பகுதிகளில் இடைக்கிடையே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு முச்சக்கர வண்டி சாரதிகளின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் தரமான பயணிகள் பாதுகாப்பு கவசங்களை பெற்றுக் கொடுப்பதன் மூலம் முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கொவிட் தொற்றுவதை கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குதன் மூலம் தண்டனைக்கு உள்ளாகும் அவதானத்தைக் குறைத்துக் கொள்வதற்காக முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் போன்ற விடயங்களை முழுமையாக பெற்றுக் கொடுப்பதற்கு இந்த அர்ப்பணிப்பின் மூலம் HNB Finance நிறுவனத்திற்கு முடிந்துள்ளது.

மேலும் இந்த வேலைத்திட்டம் குறித்து கருத்து தெரிவித்த HNB Finance PLCஇன் விற்பனை பிரதானி உதார குணசிங்க, “முச்சக்கர வண்டி சேவையானது இந்த நாட்டின் பயணிகள் போக்குவரத்து செயற்பாட்டின் முக்கியமான அங்கமாக இருப்பதுடன் கொவிட் வைரஸிற்கு உள்ளாவது குறித்து அறிவுறுத்துகையில் முச்சக்கர வண்டி சாரதிகள் சமூகத்திற்குள் பாரிய அளவில் அவதானத்திற்கு உள்ளாகக் கூடிய பிரிவினராக கருதப்படுகிறார்கள். அதனால் பிரதேச பொலிஸ் நிலையம் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஆகியோரை இணைத்துக் கொண்டு கொவிட் பரவுவதைக் கட்டுப்படுத்துவது குறித்து இந்த காலத்திற்கேற்ற வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம்.

இதன்போது அவர்களுக்கு தரமான பயணிகள் கவசங்களைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வைரஸ் தொற்றுவதை குறைப்பது எமது நோக்கமாகவும் உள்ளது. அதுபோலவே இந்த வேலைத்திட்டம் எமது கிளைகளின் ஊடாக இலங்கை முழுவதிலும் மேற்கொள்வதற்கும் அதனூடாக கொவிட் தொற்றுநோயை
கட்டுப்படுத்துவதற்கும் தேவையான உச்ச அளவு ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொடுக்கவும் சமூக பொறுப்புணவு குறித்து சிந்திக்கும் நிறுவனமாக நாம் எதிர்காலத்திலும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.” என தெரிவித்தார்.

இவ்வாறான விழிப்புணர்குகள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்காக பயணிகள் பாதுகாப்பு கவசங்களை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்தமை தொடர்பில் முச்சக்கர வண்டிய சாரதிகள் தனது வாழ்த்துக்களை HNB Financeக்கு வழங்கியதுடன் இந்த நிகழ்விற்கு மிரிஹான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி – பொலிஸ் பரிசோதகர் எச்.ஏ.எம். துஷார உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் HNB Finance நிறுவனத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE தற்போது புதிய வர்த்தகத் துறைகள் வரை விஸ்தீரமடைந்துள்ளது. சேமிப்பு, தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் மற்றும் குத்தகை சேவை போன்ற நிதி திட்டங்களுக்கு மேலதிகமாக HNB FINANCE சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME) கடன்களையும் வழங்குகிறது.

இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலைய திறந்து வைப்பு

கெரவலபிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் இன்று (2021.02.17) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

கெரவலபிட்டிய திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையத்தில் நாளொன்றுக்கு 600-800 டொன் நகர திண்ம கழிவை பயன்படுத்தி தேசிய மின் கட்டமைப்பிற்கு 10 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைப்பதற்கான நினைவு பலகையை திறந்துவைத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அங்கு வருகை தந்திருந்தவர்களுடன் நட்பு ரீதியான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கொழும்பு நகரின் நகர திண்மக்கழிவை அகற்றுவதற்கு இதன்மூலம் நிலையான தீர்வொன்று ஏற்படுத்தப்படும். அத்துடன், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திற்கும் இத்திட்டம் நிலையான தீர்வாக அமையும். கொழும்பு நகர சபை, எய்ட்கன் ஸ்பென்ஸ் நிறுவனம் மற்றும் இலங்கை மின்சார சபை இணைந்து இத்திட்டத்திற்கு பங்களிப்பு செய்துள்ளது.

எய்ட்கன் ஸ்பென்ஸ் நிறுவனம் இத்திட்டத்திற்காக ரூபாய் 15 பில்லியனை செலவிட்டுள்ளது. மிகவும் அழகான சுத்தமான நகர்ப்புற சூழலை உருவாக்குவதற்கும், குடிமக்களின் வாழ்க்கை நிலையை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் இதன்மூலம் வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

குறித்த நிகழ்வில் அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும, சீ.பீ.ரத்நாயக்க, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, நாலக கொடஹேவா, சீதா அரம்பேபொல, நிமல் லன்சா மற்றும் மேல் மாகாண ஆளுநர் மார்ஸல் ஒஃப் த ஸ்ரீலங்கா எயார் ஃபோஸ் ரொஷான் குணதிலக,

எய்ட்கன் ஸ்பென்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஹெரி ஜயவர்தன, கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க, மின்சக்தித்துறை அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆயிரம் ரூபாவிற்கு ஆட்சேபனை தெரிவிப்போரை விமர்சிக்கத் திராணியற்றவர்களே இதொகாவை விமர்சிக்கின்றனர் : செந்தில் தொண்டமான்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாள் சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அன்று முன்னெடுத்த முயற்சி, இன்று அவர் வழியில் காங்கிரஸ் சாதித்துக் காட்டியுள்ளது.

இது தொடர்பான தீர்மானம், சம்பள நிர்ணய சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், தொழிலாளர்களின் கைகளில் அந்தச் சம்பளம் போய்ச் சேரும் வரையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முயற்சி தொடரும்.

காங்கிரஸின் இந்த முயற்சியையும் அதற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தையும் இழிவுபடுத்தும் வகையில், எதிர்க் கட்சியினராலும் சில பொது அமைப்புகளினாலும், சமூக வலைத்தள விமர்சகர்களாலும் முன்னெடுக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களும் செயற்பாடுகளும், காங்கிரஸின் கொள்கைகள் மற்றும் பலத்தை, மக்கள் மத்தியிலிருந்து வலுவிழக்கச் செய்யப்பட்டவையே என்பது, இன்று புலனாகியுள்ளது.

ஆயிரம் ரூபாய் நாள் சம்பளத்துக்கு ஆட்சேபனைகள் இருப்பின் தெரிவிக்குமாறு, சம்பள நிர்ணயச் சபை அறிவித்திருக்கின்ற நிலையில், பெருந்தோட்டக் கம்பனிகள், சிறு தோட்ட உரிமையாளர்கள், சிவில் அமைப்புகள் எனப் பல தரப்பட்டவர்களால், நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், ஆயிரம் ரூபாயை வழங்க முடியாதென்று இவ்வாறு ஆட்சேபனை தெரிவித்தவர்களுக்கு எதிராக, மேற்படி எதிரணியினரும் சரி,  ஒருசில பொது அமைப்புகள் மற்றும் சமூக வலைத்தளப் விமர்சகரிகளும் சரி, எந்தவொரு விமர்சனத்தையும் முன்வைக்காமையானது, அவர்களின் அரசியல் சுயலாபத்தையும் மக்கள் மத்தியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு எதிரான தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற எண்ணப்பாட்டையுமே, இன்று வெளிப்படுத்தியுள்ளது.

இன்று ஆட்சேபனை தெரிவித்துள்ளவர்களைத்தான், இத்தனைக் காலமும், ஒரு தனி மனிதனாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் எதிர்கொண்டு வந்துள்ளார். அவர் வழியிலேயே, காங்கிரஸ் இன்றும் அவர்களை எதிர்கொண்டு வருகின்றது. அதில் இன்று வெற்றியும் கண்டுள்ளது. எவ்வாறாயினும், மக்களின் கரங்களை அந்த ஆயிரம் ரூபாய் சம்பளம் போய்ச் சேரும் வரையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முயற்சி தொடரும்.

ஆனால், ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொடுக்க முடியாதென்று ஆட்சேபனைகளை முன்வைத்து வரும் பெருந்தோட்டக் கம்பனிகள் உள்ளிட்ட தரப்பினரை எதிர்கொள்ளத் திராணியற்றவர்களாகவே, மேற்படி சுயலாப அரசியல்வாதிகளும் போலி விமர்சகர்களும் காணப்படுகின்றனர். அதனால்தான், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு எதிரான விமர்சனங்களை மாத்திரமே, கடந்த காலந்தொட்டு இன்று வரை முன்வைத்து வருகின்றனர். இதைத்தான் இவர்கள், முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர் என்பது, ஆயிரம் ரூபாய்க்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளவர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்காததிலிருந்தே தெரிகிறது.

சம்பள நிர்ணயச் சபையின் பேச்சுவார்த்தையில், 8 பெருந்தோட்டக் கம்பனிகள் கலந்துகொண்டு,  ஆயிரம் ரூபாய் நாள் சம்பளத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. அதில் ஒருவகையில் நியாயமிருப்பினும், நூற்றுக்கணக்கானோர் அந்தச் சம்பள அதிகரிப்புக்கு ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார்கள் என்றால், இதற்குப் பின்னால் பாரிய சக்தியொன்று தொழிற்பட்டு, ஆயிரம் ரூபாய் நாள் சம்பளத்தைப் பெற்றுகொடுக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முயற்சியை முறியடித்து வந்திருக்கின்றமையும் வெளிப்படையாகியுள்ளது.

எவ்வாறாயினும், அந்தத் தடைகள் அனைத்தையும் தகர்த்து, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சியில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெற்றி காணும் என்பது உறுதி.

செந்தில் தொண்டமான்
உப தலைவர் – இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

மலையக மக்கள்மீதான வன்முறை குறித்து 19 ஆம் திகதி முத்தரப்பு சந்திப்பு!

0
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள்மீது, நிர்வாக தரப்பினரால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைச் சம்பவங்களை தடுத்து நிறுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (19) நடைபெறவுள்ளது. இது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

கொழும்புத் துறைமுகத்தில் ஐஓஎஸ் சாகர்

0
இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சுனைனா, இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை அடைந்துள்ளது. இது, இந்தப் பணியின் இரண்டாவது கட்டத்தில், அதன் ஏழாவது துறைமுகப் பயணமாகும். இது கடலில் மேற்கொள்ளப்படும் ஒரு தனித்துவமான அனைத்துலக...

நில உரிமைக்காக ஒன்றிணையும் தமிழ் பேசும் சமூகங்கள்: கொட்டக்கலையில் முக்கிய தீர்மானம்!

0
கிழக்கு மாகாண காணி வலையமைப்பு செயற்பாட்டாளர்களுக்கும், மலையக சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சமூக அரசியல் ஆர்வலர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று பிற்பகல் கொட்டக்கலை சுயசக்தி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில்,...